Baby Birth Related Functions for Tamilians

Discussion in 'Festivals, Functions & Rituals' started by Chitvish, Feb 5, 2008.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சோபனம் சொல்லுவது:

    குழந்தை பிறந்த உடன், பெண் வீட்டிலிருந்து, பிள்ளை வீட்டிற்குத் தகவல் கொடுக்கச் செல்லுவதற்கு சோபனம் சொல்லுவது என்று பெயர். தகவல், தபால் மூலமகவோ, தொலை பேசியிலோ தெரிவித்திருந்தாலும், நேரில் போய் சொல்லுவது, ஒரு இனிமையான சம்பிரதாயம்.
    வெற்றிலை, பாக்கு, பழ வகைகள், சர்க்கரை, கல்கண்டு முதலியவை முக்கியமாகக் கொண்டு போக வேண்டும்.
    ஸ்வீட் கொண்டு போவது அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது.
    3, 4 பெரியவர்கள் போவது வழக்கம். முன்கூட்டியே தகவல் கொடுப்பது நல்லது. பிள்ளை வீட்டுக்காரர்கள், சென்றவர்களுக்குக், காபி, பலகாரம் கொடுத்து, இயன்ற அளவில் பதில் மரியாதை செய்யவேண்டும்.

    காப்பு:

    குழந்தை பிறந்த ஏழாம் நாள் காப்பிடுவது வழக்கம்.முதல் குழந்தைக்குப் போட்ட காப்பு, நகைகளை, அடுத்த குழந்தைகளுக்குப் போடுவது தான் சம்பிரதாயம். இதற்கு "ஆகி வந்தது" என்று பெயர். காப்பு வாங்குவது, குழந்தைக்கு, அத்தையின் பொறுப்பு. தங்கத்தில், கைக்கு வளையல், மோதிரம்.காலுக்கு வெள்ளிக் காப்பு,
    முப்புரிக்காப்பு(தங்கம், வெள்ளி, செம்பு மூன்றும் முறுக்கி செய்வது) முதலியை வாங்க வேண்டும்.இதற்கு மேல் எந்தப் பொருளும் வாங்குவது அவரவர் சௌகரியம். கட்டிப் பருப்பு, காப்பரிசி செய்து கொண்டு வரவேண்டும்.
    நடுவில் ஒருஒரு உரலில், ஒரு சொம்பில் ஜலம் வைத்து அதில் வேப்பிலையைச் சொருகவும்.சிறு குழந்தைகள் கையில் வேப்பிலை கொடுத்து, அதை சுற்றி வந்து "ஆம்பிளை பெத்தா, பொம்பிளை பெத்தா, அடுப்பங்கரையிலே பிள்ளையைப் பெத்தா' என்று பாடிக்கொண்டு, கும்மி அடித்து சுற்றி வரவேண்டும்.ஒரு பெரிய பெண் கையில் ஒரு படியை வைத்துக் கொண்டு அதில் கொஞ்சம் நாணயங்களைப் போட்டுக் குலுக்க வேண்டும். பிறகு அந்த
    நாணயங்களக் கும்மி அடித்த குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.ஒரு சிறிய ஆண் குழந்தைக்கு சிறிய துண்டு
    வேப்பிலையுடன், கட்டிப் பருப்பு, காப்பரிசி கலந்து கொடுத்து, வாயில் போட்டுக் கடித்து விட்டு, அறை வாயிலில் துப்பச் சொல்லவேண்டும்.
    அம்மிக் குழவியைக் (குழந்தையாக பாவித்து) குளிப்பாட்டி, நன்றகத்துடைத்து, கண்ணுக்கு மை இட்டு, சங்கால்
    பால் புகட்டி, ஒரு புடவையை மடித்து உரலில் போட்டு, குழவியை அதில் போடச் சொல்லவும். இதைக் குழந்தை பிறக்கத் தாமதமாகும் பெண்களை விட்டு செய்யச் சொல்லுவார்கள்.அதை பண்ணி முடித்ததும், பெரியவர்கள் அந்தப் பெண்ணைச் சீக்கிரமாகவே குழந்தை பிறக்க ஆசீர்வாதம் பண்ணுவார்கள்.
    பழைய காலத்தில் அறைத்தீட்டு என்று சம்பிரதாயம் பார்ப்பதால், குழந்தையின் தாயார் தான் காப்பு போடவேண்டும்.
    மை இடுவதற்கு, ஒரு சுத்தமான தோசைத்திருப்பியில், விளக்கெண்ணை தடவி, விளக்கு சுடரில் காண்பிக்கவேண்டும். அதில் லேசாகக் கரி பிடித்ததும், அதில் ஒரு சொட்டு விளக்கெண்ணையக் குழைக்கவும்.
    குழந்தையின் தாயார், குழந்தைக்கு, மையிட்டு நகைகளை முதலில், கையிலும் காலிலும் வேப்பிலைக் காப்பைப் போட்டுவிட்டு அணிவிக்க வேண்டும்.
    ஒரு தாம்பாலத்தில், ஆரத்தி கரைத்து, அதில் வேப்பிலை, ஒரு சிறிய கரிக்கட்டி, நடுவாசல் மண் முதலியவற்றைப் போட்டு குழந்தைக்கும் தாய்க்கும் சேர்ந்து ஆரத்தி எடுத்து சுற்றிவிட்டு வாசலில் கொட்டவேண்டும்.
    காப்பு போட்ட அத்தைக்குப் பெண்வீட்டார், வசதியை பொறுத்து, பதில் மரியாதை செய்யவேண்டும்.வந்தவர்களுக்கு டிபன் கொடுப்பது வழக்கம். வெற்றிலை பாக்குடன், கட்டிப்பருப்பு காப்பரிசி
    கொடுக்கவும்.

    புண்ணியாகவாசனம்:

    குழந்தை பிறந்த 11வது நாள் செய்வது சம்பிரதாயம். இதன் செலவு பிள்ளை வீட்டாருடையது.
    குழந்தையை முதலில் குளிப்பாட்டி ஒரு முறத்தில் போடுவார்கள். அதன் பின், குளித்த பிறகு தான் குழந்தையைத் தாயார் பார்க்கலாம்.குழந்தையின் தாயாருக்கு அன்று எண்ணை ஸ்னானம் செய்விக்கவேண்டும்.
    தாயார் குளித்து வந்ததும் ஒரு வாய் உப்புப் பண்டம் ஏதாவது கொடுக்கவேண்டும், இதைத் துலா பூசுவது என்று
    சொல்லுவது வழக்கம். பின் குழந்தையைக் கையில் கொடுக்கவேண்டும். அதை நாம் பார்ப்பது மிகவும் விசேஷம்!
    பெண் வீட்டார், பெண்ணுக்கும் மாப்பிளைக்கும், குழந்தைக்கும், புதுத் துணிமணி எடுக்கவேண்டும்.தேங்காய், பழம், வெற்றிலை முதலியவைகளுடன் ஒரு ஜோடி பருப்புத் தேங்காய் மணையில் வைப்பது வழக்கம்வழக்கம். ககுழந்தைக்கு
    நகைகள் பண்ணுவது உண்டு.
    . சாப்பாட்டு செலவும், வாத்தியார் செலவும் பிள்ளை வீட்டாரைச் சேர்ந்தது.
    வந்திருப்பவர் அனைவருக்கும் நெல்லில், நாலணா வைத்து, விரைதானம், பிள்ளை வீட்டார் செய்யவேண்டும்.
    குழந்தைக்கு, ஜாதகரணம், நாமகரணம் செய்வது அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது.
    மாலையில் தொட்டில் போடுவது வழக்கம். தொட்டிலின் அடியில் தாம்பாளத்தில் நெல்லைப் பரத்தி, அதில்
    குழந்தையின் பெயரை எழுதவேண்டும்.குழந்தையின் காதில் பெயரை அம்மாவும் மற்றவர்களும் மூன்று முறை
    சொல்லவும்.
    குழந்தையைப் போடும் தொட்டிலில், பட்டுப் புடவை அடியில் விரிக்கவும். தலைமாட்டில், அவரவர் வீட்டு வழக்கப்படி, தித்திப்பு பயறு சுண்டலோ அல்லது கொத்துக்கடலை சுண்டலோ ஒரு சிறிய துணியில் கட்டி அல்லது கிண்ணத்தில் போட்டுத் தலைமாட்டில் அல்லது தொட்டிலுக்கு அடியில் வைக்கவும். எல்லோரையும் கூப்பிட்டுப் பாடச் சொல்லி வெற்றிலை பாக்கு கொடுக்கவும். பின் ஆரத்தி எடுக்க வேண்டும்.

    அன்புடன்
    சித்ரா.

    For Kapparisi recipe, please go to
    Kaaparisi
     
    Last edited: Dec 28, 2008
    sindmani likes this.
    Loading...

  2. mkthpavi

    mkthpavi Senior IL'ite

    Messages:
    250
    Likes Received:
    5
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear Chithra...

    wowwwwwwwwwwww....amazing level of details :) will read it again !!! I felt as if you were sitting next to me and explaining in person :)

    thanks and love
    pavithra
     
  3. vmur

    vmur Silver IL'ite

    Messages:
    521
    Likes Received:
    46
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Dearest Chith,

    I almost felt like I attended a Punyakavachanam and Namakaranam in person. Amazing depth of details. Just like how a lot of ILites are getting to celebrate their Seemantham and Valaikaappu after your post, I pray to God that all of them have safe deliveries and celebrate their infant's namakaranam too!

    Just like Pavithra described, it was as if you were explaining this to us in person! I wish I had an iota of the energy that you put into your posts.

    Thanks soo much
    Love
    Vidya
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dearest Vids,
    Though this thread has received just "meagre" FBs, both your messages are overwhelmingly affectionate. Each is "akshara laksham perum" !
    Yes, Vids, now following V & S, I want you all, my young IL friends to celebrate Kappu & P vachanam.
    gvi & Marisa, are you around??
    Love,
    Chith.
     
  5. aishu22

    aishu22 Gold IL'ite

    Messages:
    2,598
    Likes Received:
    112
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Chithra,
    Just now stumbled upon this thread,Great thread! Thanks a ton !Just last weekend witnessed all these in my perimmas house....
    Know what,When i need it in future....i would opt to log in to IL , take a print out and plan the functions well much to all my IN-LAWS envy.

    THANKS A LOT!
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Aishu,
    I pray that the V S thread as well as this thread come in handy for you when you plan a family.
    Already I have PMs that my V S thread is their lucky mascot ! I cannot ask for more.
    Thanks, Aishu.
    Love,
    Chithra.
     
  7. prishen

    prishen Bronze IL'ite

    Messages:
    178
    Likes Received:
    14
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Dear Chithra Maami..
    Just now saw this thread...
    Oh.. its really fantastic to see each and every detail of the process. My daughter , Kaaviya is 19 months old and you just reminded me again of the function we had when she was born.. You have explained even the minute details very well which would be very helpful for us. What more we can ask... Thanks for your efforts to guide us.

    Regards
    Priya
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Priya,
    Having gone through the functions recently for your child, I can imagine how nostalgic you must have become.
    Thanks for sending me a FB.
    Love,
    Chithra.
     
  9. gvi

    gvi Senior IL'ite

    Messages:
    222
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear Mrs.Chitra

    Wow Finally got the chance to reply to this amazing thread. So many minute details you have put forward . I really should do a Shastanga namaskaram to you :bowdown that you have the patience to post and also the memory to ask about people who are going through the pregnancy phase now. I am plannig to take a print out and show it to my mom so she knows exactly what to do.

    Thanks again. :clap

    Thanks
    Geetha
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Geetha,
    I can only say, you have a very genuine way with words!
    My most prayerful blessings to you.
    Love,
    Chithra.
     

Share This Page