1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Ahalya as seen by Vyasa and Tagore

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 23, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மகா பாரதத்தின் சாந்தி பர்வத்தில் தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்யும் பீஷ்ம கீதையில் வரும் கதைகளில் அஹலிகையின் வரலாறு இடம் பெறுகிறது.

    ஒரு செயலை விரைவாகவோ,தாமதமாகவோ செய்யலாம்.அதை முடிவு செய்வது எப்படி என்று தர்மர் கேட்க, பீஷ்மர் அகலிகை வரலாறு பற்றி விவரிக்கிறார்.


    கௌதமருக்குப் பல புதல்வர்கள்.அவருள் இளையவர்
    சிரகாரி.அவர் எதனையும் நெடு நாட்கள் யோசனை செய்து தான் முடிவு எடுப்பார். எல்லோரும் அவரை மந்த புத்திக் காரன் என்று தூற்றினர்.

    ஒரு சமயம் அகலிகையின் கெட்ட நடத்தையினால் கோபமடைந்த கௌதமர் ,தன கடைசி புதல்வனான சிரகாரியிடம் அஹலி கையைக் கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்துவிட்டுக் கானகம் சென்று விட்டார்.

    சிர காரிக்கு மிகக் குழப்பம். தாயைக் கொல்வதா, தந்தையின் சொல்லை மீறுவதா என்று.

    நீண்ட காலம் யோசித்துக் கொண்டே சும்மா இருந்து விட்டார் .

    கௌதமர் மனம் மாறித் திரும்பி வந்தார்.தன மனைவி இறந்திருப்பாள் என்று எண்ணு கையிலேயே துக்கம் பீறிட்டது.நடந்த நிகழ்ச்சி மனத்திரையில் ஓடியது.


    " இந்திரன் பிராம்மண உருவில் எங்கள் குடிலுக்கு வந்தான்.என்னால் வரவேற்கப்பட்டு அர்க்யம், பாத்யம் என்ற வழிகளில் உப்ச்சரிக்கப்பட்டான்." நான் உன்னைச் சேர்ந்தவன்; என்று சொன்னேன். அதில் வந்தது அனர்த்தம்.என் மனைவியிடம் குற்றமில்லை;என்னிடத்திலும் குற்றமில்லை;இந்திரனும் குற்றம் இழைக்கவில்லை.அதிதியாக வருபவருக்கு,உணவு, உறையுள் ஆகியவற்றோடு,மனைவியையும் அதிதிக்கு அன்றைய தினம் உரிமையாக்குவது வேத கால வழக்கம்..

    சிர காரி தன்னுடைய தாமத குணத்தைக் கடைப் பிடித்து அஹல்யைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே;என்னைக்

    கொலை பழியிலிருந்து காப்பாற்ற வேண்டுமே என்று பிரார்த்தனை செய்து கொண்டே குடிலுக்குத் திரும்பினார் கௌதமர்.

    சிரகாரி ஆயுதத்தை வீசி எறி ந்து விட்டுத் தந்தையை வணங்கினான்.கௌதமர் மகிழ்ச்சியுடன் அகலிகையை ஏற்றுக் கொண்டார்.சில சமயங்களில் காரியங்களை தாமதித்துச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

    ராமர் வரலாறு பாரதத்துக்கு முந்தியது.கற்பு இழந்தவர்களாகக் கருதப் படுபவர்கள் தண்டனையை அடைந்தே தீர வேண்டும் என்பது நியதி.பரசு ராமரும் தாயைக் கொல்ல ஏவப் படுகிறார்.கௌதமர் கட்டளை பிறப்பித்தது மரபுக்கு ஒத்து வருகிறது.



    ராமனை இறைத் தன்மையை இதிகாசத்தின் தொடக்கத்திலேயே உணர்த்த 'அஹலி கையைக் கல்லாக்கி மீண்டும் பெண்ணாக்கினார்களா '?

    இந்த மாற்றம் பாரத காலத்துக்குப் பிறகு ராமாயணத்தில் சேர்க்கப்பட்டதா என்ற விவாதங்கள் தொடருகின்றன.

    அல்லது வியாசர் நடப்பியல் படி கதையை நடத்திச் செல்வதே சரியென்று கருதியும் இருக்கலாம்.

    அகலிகை யின் அவல வாழ்வை முன் நிறுத்தி பாரதியார் புதுமைப் பித்தன்,பிச்சமூர்த்தி,பிரபஞ்சன் சிற்பி, ஞானி, வாலி என்று ஏராளமானோர் கதைகளும் கவிதைகளும் இயற்ற ,வியாசரின் விருந்து புது மாதிரி யாக உள்ளது.


    ரவீந்திர நாத் தாகூரின் 'அஹலிகை' பற்றிய கவிதை வேறு விதம்.தாகூர் அஹலிகையின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூடத் தொடவே இல்லை.கல்லாய்ச் சபிக்கப் பட்டு மண்ணில் புதையுண்டு கிடக்கும் அவளது உணர்வுகள் எத்தகையதாக இருந்திருக்குமென்று கற்பனை செய்கிறார்.


    தாகூரின் அகல்யாவைப் பாருங்கள்
    சூன்யத்திடை நிற்கும் சிதைந்த தபோவனக் குடில் போல துணை யாருமின்றி கனவு காண்கிறாள்.வாழ்வில்
    தாழ்வு ற்றுப் பிறந்தகம் திரும்பும் மகளை மண் மடந்தைப் பரிவுடன் தழுவியிருக்கிறாள்.இந்த காரிகையை யார் பனி யிலிருந்து காப்பாற்றுவார்கள்?மழைப் பெருக்கால் படரும் பாசிக் கொடியை அகலி கைக்குப் போர்த்தி ஆடை அணிவிக்கிறார் தாகூர் .உள்ளத்தை தொடும் வரிகள்.கல்லிலும் பெண் உள்ளத்தைக் காண்கிறார் .


    இந்த அகலிகை தான் எவ்வளவு பேரின் கற்பனைப் பசியைத் தணி க்கிறாள் !

    Jayasala 42
     
    1 person likes this.
    Loading...

Share This Page