ஓர் அரசியல் பிரமுகரை புதுப் பள்ளி ஒன்றின் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். 'நான் அவசரமாகப் போக வேண்டும் விழாவை சீக்கிரம் தொடங்குங்கள்!' என்றார். 'ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பரிசு கொடுக்க இருக்கிறோம். அவைகளை வழங்கி விட்டு நீங்கள் பேசலாம்' என்றார் பள்ளி நிர்வாகி. 'முடியாது. நான் உடனே போக வேண்டும்' என்று அடம்பிடித்தார் பிரமுகர். நிர்வாகி ஏதோ சொல்ல முயன்றும் பிடிவாதமாக மறுத்து விட்டு மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார் பிரமுகர். மாணவர்கள் மத்தியில் ஒரு சலனமும் இல்லை, கம்மென்று உட்கார்ந்திருந்தனர். பேசி முடித்து புறப்பட்ட பிரமுகர், 'இதுதான் நீங்கள் மாணவர்களை உருவாக்குகிற லட்சணமா? ஒரு ஆர்வம் இல்லை, ஒரு கைதட்டல் இல்லை, ஏதோ கேட்கணுமே என்று கேட்பதைப் போல கம்முன்னு உட்கார்ந்து இருக்கிறார்கள்' என்று எரிச்சலுடன் கேட்டார். நிர்வாகி சொன்னார்: 'ஐயா, இது காது கேளாதோருக்கான பள்ளி திறப்பு விழா. அதைத்தான் நான் உங்களிடம் சொல்ல வந்தேன். அனைவருக்கும் காது கேட்கும் கருவிகளை வழங்க இருந்தோம். முதலில் நீங்கள் கருவியை வழங்கியிருந்தால் உங்கள் பேச்சை ரசித்து கேட்டிருப்பார்கள்!!!' ஒரு முகநூல் பதிவு. JAYASALA 42