1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

80s இல் குழந்தைபருவம்.......

Discussion in 'Posts in Regional Languages' started by knbg, Oct 14, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nanraaga irukkukkiradhu Knbg, 80's kuzhandhai paruvathai asai poduvadhu..
    Rasithen ingulla thozhiyarin malarum ninaivugalaiyum dhan..

    Why not a contribution from me...naan 80 il kuzhandhai alla...kumari aache..adhanaal dhan :biggrin2:

    sriniketan
     
    1 person likes this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள சபரி, லலிதா ,
    உங்கள் நினைவுகளை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி......
    அன்புள்ள ஸ்ரீ........
    அடடா.....உங்க குமரி பருவ நினைவுகளை பகிருங்களேன் ப்ளீஸ்.....
     
  3. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    பார்கவி,

    அடுத்த பதிவுகளில் தோழிகள் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் என் நினைவுகளுடன் சம்பந்தபட்டவை.. மீண்டும் நினைவுபடுத்தி அந்த இனிமையான நினைவுகளை கண் முன் நிறுத்திய உங்களுக்கு நன்றி. அதிலும் மௌனராகம், இதயத்தை திருடாதே படங்களின் பாடல்கள் என்னால் மறக்க முடியாதவை.. இசைஞானி இளையராஜா உச்ச்த்தில் இருந்த சமயமாதலால் நினைவிலிருந்து நீக்க முடியா எண்ணற்ற பாடல்களை நாம் கேட்டு ரசிக்க கொடுத்துவைத்திருந்த காலங்கள் அவை... எனக்கு நிறைய கார்த்திக்-ராஜா காம்பினேஷனில் வந்த பாடல்கள் , மிக பிடித்தமானவை, இன்றும் எங்கள் திருச்சி பண்பலைகளில் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்.. நம் தோழிகளின் ரசனைகள் ஒத்துப்போவதை பார்க்கும்போது எனக்கு அந்த காலங்கள் தொலைந்து போனதாகவே தெரியவில்லை..
     
    2 people like this.
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    கவித்துவமான பின்னூட்டம் தந்த கவிபானு.....
    நன்றி தோழி......
    ஆமாம் பா.....அந்த காலத்தில் tape recorder, cassettes மற்றும் வானொலி, தொலைக்காட்சி ஒலியும் ஒளியும்...இவை மூலம் நாம் கேட்ட பல அருமையான பாடல்கள் நம் வாழ்வோடு பின்னி பிணைந்தவை.....
     
    1 person likes this.
  5. sujisaran

    sujisaran Silver IL'ite

    Messages:
    259
    Likes Received:
    157
    Trophy Points:
    93
    Gender:
    Female
    என் அன்பு தோழியே


    உண்மையிலே நல்லதொரு பதிவை தந்ததற்கு நன்றி. எனக்கு சின்ன வயதில் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது நானும் என் அண்ணனும் எப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் எங்கள் தெருவில் உள்ள நண்பர்களை சேர்த்து கொண்டு விளையாடிய திருடன் காவலன் , கில்லி போன்ற விளையாட்டுகளும், இருவரும் சண்டை போட்டு கொண்டதும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது என் அப்பா எனக்கு bsa slr சைக்கிள் வாங்கி கொடுத்தார், அப்பொழுது நான் பள்ளிக்கு சைக்கிளில் விவசாய பல்கலைகழகம் வழியாக தான் போக வேண்டும். நான் அப்பொழுது மகிழ்ச்சியாகவும் மிக வேகமாக போனதை என்னால் எப்பொழுதும் மறக்கவே முடியாது.

    அனைத்து விடுமுறை நாட்களிலும் நூலகம் போய் விக்ரமாதித்யன் வேதாளம் கதை, ராமாயணம் மகாபாரத கதைகள், அம்புலிமாமா, கோகுலம் கதிர் , என எப்பொழுதும் புத்தகங்களின் இடையே வாழ்ந்தேன். அது என் வாழ்க்கையை நிறைத்து இருந்தது. ரொம்ப மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அது, எனக்கு எப்பொழுதும் புத்தகங்கள் படிப்பது என்றால் சலிப்பே வராது!! அப்படியே கவிதை எழுத ஆரம்பித்தது என நிறைய !!. பள்ளியில் விளையாட ரொம்ப பிடிக்கும் எல்லா போட்டிகளிலும் பங்கு பெறுவேன்

    பள்ளியில் ஒரு முறை வானொலி வினாடிவினா போட்டிக்கு அழைத்து போனார்கள் அது ரொம்ப மகிழ்ச்சியான தருணம் நம் குரலை வானொலியில் கேட்கும் பொழுது அடைந்த மகிழ்ச்சி ஐயோ !!!!:rotfl:drowning

    என்னுடைய இளமை பருவத்தை ஞாபக படுத்தியதற்கு மிக்க நன்றி!!!:bowdown
     
    3 people like this.
  6. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள சுஜி.....

    உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி .........

    ஆம்.....அப்போது படித்த அம்புலி மாமா, கோகுலம், ரத்னபாலா,பூந்தளிர்,பாப்பா மஞ்சரி.....அதே போல் ஆங்கிலத்தில் Tinkle, Target,Misha.......படிக்கும் பழக்கம் இப்போதும் தொடர அடித்தளமாக இருந்தன....

    அவை பற்றி நினைவு கூர்ந்து என் இனிய நினைவுகளை ஞாபகம் செய்தமைக்கு நன்றி......

    அதே போல் வானொலி.....ஞாயிறு மதியம் சிறுவர் சோலை நிகழ்ச்சியில் வானொலி அண்ணா குரல் கேட்டு மகிழ்வோம்.....

    அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்று பாடிய நினைவு......நினைவின் ஆழத்தில் இருந்த அந்த நினைவை ஞாபம் செய்தது உங்கள் பதிவு.....வானொலி அண்ணா திரு கூத்தபிரான் அவர்களை நேரில் சந்தித்தபோது அவரிடம் autograph கூட வாங்கி இருக்கிறேன்........

    மீண்டும் நன்றி தோழியே.......உங்கள் நினைவுகளை பகிர்ந்ததோடு என் நினைவுகளையும் எழுப்பியமைக்கு.....
     
    1 person likes this.
  7. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hey bhargs...correctu, target, misha, quest.....ellam we used to wait so eagerly..every month beginning , enga appa vangi tharuvar.wow!!!!
    Actually misha ooda soviet woman, solli oru magazine kooda varum, athulla azhagana dresses pictures potu irupan,.......adhai manni kannakil partha kalam kooda oondooo"......hmmmmmm
     
    1 person likes this.
  8. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    ரொம்ப நாளைக்கு அப்பறம் ......ஜில்லுன்னு ஒரு thread .....எல்லோருடைய நினைவலைகளும் அருமையாக , ரசிக்கும் படி இருக்கின்றன. இதோ நானும் அந்த இனிய flashback நினைவு வட்டத்திற்குள் செல்கிறேன்...

    சின்ன வயதில் எனக்கும் என் தங்கைக்கும் அம்மா புடவையில் இருந்து ஒரே மாதிரி பிராக் தெய்த்து போட்டு கொண்டது.
    வீதியில் வெள்ளிக்கிழமை அன்று போகும் சினிமா விளம்பர வண்டியை ஓடி வந்து என்ன புதுசு , எந்த theatre என்று ஆவலுடன் எட்டி பார்த்தது. அந்த ட்ரிங் ட்ரிங் கோலிசோடா , குட்டி சமோசா எல்லாம் +++ ......
    இங்கேயும் , இப்போதும் உண்டு அந்த எலந்தவட , பனீர் சோடா எல்லாம்....
     
    1 person likes this.
  9. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள சாது......
    உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.....
    புடவையில் frock.....ஆமாம் பா.....அப்போ maxi வேற fashion ஆ ...நெறைய புடவை maxi யா மறுபிறப்பு எடுக்கும்.....
    குட்டி சமோசா.....ம்ம்ம்ம்ம்ம்ம்.....கம கம கம வாசம் வருதே......
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பார்கவி,
    எப்படி இத்தனை நாளாய் இந்த அழகான நூலை தவறவிட்டேன்..
    அது கிடக்குங்க நெறைய..மாற்றம்தான் வளர்ச்சியின் அடிப்படையின் மனசை அப்பப்ப தேத்திகிட்டாலும், இந்த மன குரங்கு அந்த பால்ய நாட்களுக்குத் தாவதான் செய்யுது..
    என்ன இனிமையான நாட்கள் இல்லையா அவை..?
    சூது வாது தெரியாமல், எந்த விதப் பொறுப்புகளிலும் சுழலாமல் ..வாழ்க்கையின் இனிய பகுதி அது...
    ..விடுமுறைக்கு ஊர்க்குப் போவது..
    --கடலை மிட்டாயை தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்வது..
    --சிறுவர் மலர், காமிக்ஸ் புத்தகங்கள்..
    --தொலைக்காட்சியின் தொல்லைகளற்ற பால்யம்..
    --கண்ணாமூச்சி துவங்கி அஞ்சாங்கள் வரை நாள் முழுதும் விளையாடிக் களித்தது...
    --தாத்தா பாட்டியின் அரவணைப்பும் அவர்களின் அனுபவம் மிகுந்த கதைகளும்..

    இப்படி ஏகத்துக்கும் இருக்குடா..எழுதுனா எழுதிட்டே போகலாம் போல..
     
    1 person likes this.

Share This Page