1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

80s இல் குழந்தைபருவம்.......

Discussion in 'Posts in Regional Languages' started by knbg, Oct 14, 2011.

  1. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    80s இல் குழந்தைபருவம்.......

    என் அன்பு தமிழ் தோழிகளே.......

    என்னுடைய குழந்தைபருவம் 80s ல் , தமிழ்நாட்டில் .......

    இத்தனை ஆண்டுகள் ஆகியும்....., இத்தனை வசதிகள் வந்தும்.....

    அந்த காலத்தின் simple வாழ்க்கைமுறையை நான் அடிக்கடி அசை போடுவேன்.....

    என்ன ஒரு relaxed ஆன வாழ்கை.....

    ரேடியோ பாடல்கள்.....

    சைக்கிள் பயணங்கள்......

    பன்னீர் சோடா.......

    மந்தாரை இலையில் கட்டிய பால்கோவா......

    மாலை நடைபயணம் .....அருகில் உள்ள கோவிலுக்கு....தாத்தா,பாட்டியுடன்........

    மணிகூண்டை பார்த்து பிரம்மிப்பு.....

    அரச மரத்தில் மைனா கூடத்தின் மாலை மீட்டிங்.....

    ரயிலில் சென்னை பயணம்......

    பொருட்காட்சி, சர்கஸ் .........

    மார்கழி பஜனை.....

    தீபாவளி, பொங்கல் புது டிரஸ் .....

    ஒயர் கூடை , மணி கைவேலைகள் ........

    அம்மா தைத்த frock...

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........

    உங்கள் நினைவுகள்.....?!?!
     
    6 people like this.
    Loading...

  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மேலும் சில......

    பிளாஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டுகள்.......

    maxi dress......

    இரும்பு வாணலியில் மணல் போட்டு விறகு அடுப்பில் கேக்.........
     
  3. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Wow......bhargavi,
    U bought back all my wonderful childhood days. Chance ye illa....."athu oru athu oru nila kaalam..........."

    I still remember

    *Watching sunday movie on doordarshan with all that excitement and eagerness...
    * going to the trade fairs &exhibitions for that delhi appalam
    *summer evenings at the beach with kucchi ice
    * malli poo adorning the rettai pinnal.
    * cyclerickshaw savari to school
    * buying nadiya earrings
    * roadside cricket.."......".......many more ....

    Those wonderful days ".......would always want to rewind....
     
    3 people like this.
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Yes Joshila.....
    Ans some feelings are exclusive for tamilnadu.....
    delhi appalam....ha ha ......
    milagai bhajji.....
    rettai pinnal with coconut oil.......
    ...... so sweet of you to share your memories dear friend.....
    loved reading it.....
     
    1 person likes this.
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அப்போதெல்லாம் நான் கண்ணாமூச்சி கல்லாட்டம் கபடி மரந்தொட்டு விளையாட்டு பல்லாங்குழி என்றெல்லாம் விளையாடுவேன்...இப்போது solitaire,pinball,hearts என்று Computer games மட்டும் தான்

    சீயக்காய் தான் தலைக்கு......இப்போது நான் அதை பார்த்தே வருடங்கள் ஆகிறது.வெறும் ஷாம்பூ

    அப்போதெல்லாம் தொலைபேசி மணி அடித்தால் யாராக இருக்கும் என்று ஆர்வமாக சென்றேடுப்பேன்.இன்று மொபைல் மணியில் காது ஜவ்வு கிழிகிறது எனக்கு.

    நாங்களே தான் பலகாரம் சுடுவோம் பண்டிகை என்றால்...இன்று வெறும் முறுக்கு சுடுவதே எங்களுக்கு விருந்து சமைப்பது போல இருக்கிறது.

    அப்போதெல்லாம் சினிமா பாட்டு கேசட் வாங்குவதே அபூர்வமாய் என்றோ தான்....அதிலும் பாட்டு கேட்பது அரிதானது.இப்போது நெட்டில் பாட்டு பதிவிறக்கம் செய்து எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அது பாட்டில்

    அன்று நிலாவை பொறுமையாக ரசித்து பார்த்து நிலா சாதம் உண்ணும் அளவு நேரம் இருந்தது.இன்று எப்போதாவது கவிதைகளில் நிலவைக் காண்பதோடு சரி....

    இதையெல்லாம் விட அப்போது இருந்த மனிதர்களிடம் கோபமோ ஆசையோ அதை வெளிப்படையாக காட்டும் மனம் இருந்தது.இப்போது சிலரில் யாராவது சிரித்து பேசினால் கூட அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

    குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்று மனம் ஏங்கவில்லை தான்.....ஆனாலும் மனதினோரம் லேசாக ஒரு நப்பாசை....அந்த காலம் இனி திரும்ப கிடைக்காதா என்று
     
    6 people like this.
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    தெருக்கூத்து...
    டென்ட் கொட்டாய் சினிமா...
    சூட மிட்டாய்...
    பெப்சி ஐஸ்...
    ஜவ்வு மிட்டாய்...
    5paise horlicks மிட்டாய் ...
    கொடுக்காபுலிக்காய்...
    எலந்தவடை...
    ஸ்கூல் வாசலில் உள்ள கடையில் சிறு சேமிப்பு...
    ஹீரோ pen...
    பேனா சரிபன்றேந்னு சொல்லி கையெல்லாம் ink ஆகினது...
    தெருல கம்பமாதி விளையாடினது...
    வீட்டுக்கு வீடு தின்ன உண்டு அதில் நிலா ஒளியில் கதை சொன்னது...
    ceylon station in radio...
    ranjoli and oliyum oliyum in dd...
    sunday other language film in dd... that too once in some months happen to watch 2 tamils movies (one language shuffle from delhi and evening one from chennai)..
    collecting songs that have same words like poo, kuruvi and replying that for the deepavali quiz in radio..
    writng letters to yethiroli program in dd and watching them telling our name....
    watching news for specially talent in dd and explaining in our own words.....
     
    3 people like this.
  7. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    நல்லா சொன்னீங்க தேவபிரியா......
    உங்களோட ரசனையான நடைல படிக்கும்போது ரொம்பவே ரசமாக....பழரசமாக....( வெறுமனே ரசமாகன்னு எழுதினா என்ன ரசம்னு கேள்வி வரலாமே அதனால பழரசம்.....) இருக்கிறது.......
     
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள சௌமி......
    அழகான பதிவுகள்.....
    ஆமாம் அந்த காலத்து பைசா.....
    பெப்பெர்மின்ட் மிட்டாய்.....
    தொலைகாட்சி ஒளியும் ஒளியும்.....
    ஹீரோ பேனா....ஐயோ...எங்க வீட்ல தாத்தா, அப்பா மட்டும் வச்சிருப்பாங்க....தொடவே பயமா இருக்கும்...தாத்தா அதுலயும் torquiose blue ink......
    முதல் முதல்ல ஹீரோ பேனா வாங்கி எழுதுனப்ப என்ன ஒரு பெருமை....
     
    1 person likes this.
  9. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ammam bargavi... pencilay yezhutah theriyaatha poodu... appa voda pena yeduthu yezhidi maatti muzhikarathu... athuvoru jolly... apdi tambi/thanga panna atha mayratarathu.. ippa nenachchalum santhosham thaan
     
    1 person likes this.
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    தம்பி தங்கை பற்றி நீங்க சொன்னதும் ஒரு நினைவு.....
    எங்க ஊர்ல யானைக்கால் நோய்க்காக ராத்திரில ரத்தபரிசோதனை பண்ண வீடு வீடா வருவாங்க...
    ஒரு நாள் வீடு வெளியே போர்டிகோவில் நான் விளையாடிகிட்டு இருந்தேன்.....
    நான் தான் முதல் போனி......
    என் தம்பி ரொம்ப முன் ஜாக்கிரதை....மூணாவது வீட்ல அவங்க வரும்போதே ஓடி ஒளிஞ்சிட்டான்....
    நான் சும்மா இருப்பேனா.....? எனக்கு ரத்ஹம் எடுத்து முடிஞ்சதும் அவங்க கிட்ட வீட்டுக்கு உள்ள என் தம்பி இருக்கான் சார் ...என்று சொல்லி....அவனுக்கும் ரத்த பரிசோதனை பண்ண வச்சிட்டேன்....
    அதுக்கப்பறம் ரொம்ப நாள் என் தம்பிக்கு என் மேல் மனத்தாங்கல்......
     
    2 people like this.

Share This Page