1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

65 வயதில் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டேன்!

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Nov 18, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    65 வயதில் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டேன்!

    என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் ஒரு பட்டதாரியுமல்ல, அந்த காலத்தில் அதாவது சென்ற நூற்றாண்டில் ஐம்பதுகளில் அரசுப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் எஸ் எஸ் எல் சி தேறியவள் நான். ஆனால் ஹிந்து நாளிதழைத் தொடர்ந்து படித்து வந்ததன் மூலமும் எனது தமையனார் படிக்கக் கொண்டுவந்த ஆங்கில நாவல்களைப் படித்துவந்ததாலும் எனது ஆங்கில ஞானத்தை ஓரளவிற்கு வளர்த்துக் கொள்ள முடிந்தது. பிறகு டெலிபோன் ஆபரேடராகப் பணி புரிந்ததும் பெருமளவிற்கு உதவியது.

    எனது மூத்த மகன் மென்பொருள் பணித்துறையில் வேலை பார்த்ததால் அடிக்கடி வெளிநாடு செல்லவேண்டியிருந்தது. கலியாணமாகி அவனுக்கு ஒரு குடும்பம் என்று ஆனபிறகு மனைவி குழந்தையை விட்டுவிட்டு அடிக்கடி வெளிநாடு செல்லுவது கஷ்டமாக இருந்ததாலும் அவன் வேலை பார்த்தது அமெரிக்க நிறுவனம் என்பதாலும் அவன் நிரந்தரமாக அங்கேயே குடியேறத் தீர்மானித்துவிட்டான். இளைய மகனும் ஆற்றிலொருகாலும் சேற்றிலொருகாலுமாக அங்கும் இங்குமாக அல்லாடிக் கொண்டிருந்தான். எனவே e- மெயில் ஒன்று தான் விரைவில் தொடர்புகொள்ளக் கூடியா சாதனமாகத் தோன்றியது.

    பல நாட்கள் யோசனை செய்து இந்த வயதில் கம்ப்யூடர் கற்றுக்கொள்ளூகிறாளாம் என்று மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளாவேனோ என்ற தயக்கத்திற்குப் பிறகு என் வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் துணிந்து ஒரு முடிவெடுத்தேன்.அதுவும் எனதருமைக் கணவரும் அருமை மகளும் என்க்களித்த ஊக்கமும் உற்சாகமுமே இந்த முடிவெடுக்கப் பேருதவியாக இருந்தது. எனவே அசெம்பில் செய்த கம்ப்யூடர் வாங்கத் தீர்மானித்து என் மகளின் உதவியுடன் செயல் படுத்தினேன்.

    ஹி ஹி! :)அத்துடன் முடிந்ததா? இங்கு மற்றொரு உண்மையையும் நான் ஒப்புக்கொண்டாகவேண்டும். அந்த வயதில் கம்ப்யூடர் வகுப்பிற்குப் போய் கம்ப்யூடர் கற்றுக்கொள்ளவும் வெட்கமாக இருந்தது. அதனால் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கம்ப்யூடர் கிளாசில் வேலை பார்த்துவந்த ஒருவரை வீட்டிற்கு வந்து கற்றுக் கொடுக்க மஸ்கா போட்டு எனது கணவர் ஏற்பாடு செய்தார். அவர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வரமுடியுமென்றும் அதுவும் ஒரு மாதத்தில் வெளியூர் செல்லவிருப்பதாகவும் சொன்னார்.

    இருபது நாட்களுக்குள் அடிப்படைப் பாடங்களை ஒரு ஆர்வத்தில் கற்று முடித்தேன்.

    நான் இத்தனை ஆர்வத்துடன் கம்ப்யூடர் கற்றுக்கொண்டதில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதனைப் பரிசோதிக்க அமெரிக்காவிலிருந்த என் மகன் பவர்பாயிண்டில் ஸ்லைடுகளை உபயோகித்துத் தான் ஆபீசில் பேச்ப்போகும் தலைப்பிற்கு ஏற்ப பவட் பாயிண்ட் பிரசெண்டேஷன் ஒன்று தயார் செய்து அனுப்பும்படி கூறினான். அதை அவன் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் அனுப்ப இரவு பன்னிரண்டு மணிவரை கண்விழித்து தயார் செய்து அனுப்பினேன். அதை அவன் பிரெசண்ட் செய்தபோது இந்தியாவிலுள்ள என் அன்னை 65 வயதில் கம்ப்யூடர் கற்றுக்கொண்டு தயார் செய்து அனுப்பியதாக அவர்களிடம் கூறியபொழுது அவர்கள் யாவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தஙகள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகச் சொன்னபோது நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    பலரும் வெளிநாடுகளில் பிள்ளைகள் இருந்தால் E மெயில் அனுப்பவும் சாட் பண்ணவும் மட்டுமே கம்ப்யூடர் உதவுமென்று நினைத்த காலம்மாறி வீட்டில் நான்கு சுவர்களுக்கு நடுவிலிருந்தே நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடியுமென்று முழுமையாக அதன் பயனை உணரத் தொடங்கிவிட்டனர்.

    நான் கம்ப்யூடர் கற்றுக் கொண்டதன் பயனை முழுமையாக அனுபவிக்கிறேன். இல்லை என்றால் உலகின் பல பாகங்களிலும் வசிக்கும் பாரத மங்கையருடன் நான் தொடர்புகொள்ள இயலுமா? இதற்கு நான் Indus Ladyக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னால் மற்றவர்கள் பயனடைந்தார்களோ இல்லையோ நான் மற்றவர்களால் பெரும் பயனை அடைந்தேன்.
     
    12 people like this.
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Pushpa Mami

    My namaskarams to you and hats off to you. You are really great. Glad to know that you learnt computer at the age of 65 years. You have proved that age is not a factor for learning anything. Now a days learning computer has become a necessity as children are abroad and we have to keep in touch with them.

    My younger daughter's mother in law lost her husband recently. All this time it was not necessary for her to learn computer but now since she has to keep in touch with her son and dils as one son is abroad and son in Pune she has learnt computer.

    Glad that I could give the first fb and sorry for not replying in tamil.
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சபாஷ்! கற்க வயது ஒரு தடையில்லை என்பதை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் புஷ்பவல்லி அம்மா! வாழ்த்துக்கள்! - ஸ்ரீ
     
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மதிப்பிற்குரிய P.S ma'am....
    வணக்கம்.....
    தாங்கள் computer கற்றது உங்களுக்கு மட்டும் பலனளிக்கவில்லை.....உங்களின் அற்புதமான பதிவுகளின் மூலம், உங்கள் அனுபவங்களையும் அறிவுரைகளையும் படிக்கும் வாய்ப்பு என் போன்ற பல தோழிகளுக்கும் கிடைத்துள்ளது.....
    ஊக்கமுடன் சுறுசுறுப்பாக இருக்க வயது ஒரு தடை இல்லை என உங்கள் மூலம் அறிந்தேன்...உற்சாகம் பெற்றேன்....
    நன்றிகள்......
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    புஷ்பவல்லி மேடம்,
    முதலில் உங்கள் ஆர்வத்துக்கு என் சல்யூட்..சூப்பர்...
    தமிழ் மீடியம் படித்தாலும் இவ்வளவு அழகான ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்..
    (உங்களுடைய snippet படித்திருக்கிறேன்)..அது எவ்வளவு கஷ்டம் என்று
    இன்னொரு தமிழ் மீடியம் மாணவியான எனக்கு நன்கு தெரியும்...அடுத்த சல்யூட்...
    இதற்கும் உங்களுடைய ஆர்வம்தான் காரணம்..
    இன்னும் நெறைய கத்துகிட்டு கலக்குங்க..
     
  6. Vijaya@17

    Vijaya@17 Silver IL'ite

    Messages:
    270
    Likes Received:
    69
    Trophy Points:
    68
    Gender:
    Female
    மனமார்ந்த நன்றி. எல்லோருடைய உள்ளதையும் கவர்ந்து விட்டீர்கள். படிப்பதற்கு அருமையாக உள்ளது. வயது உண்டா கற்று கொள்ள ? மன உறுதி மட்டும் தான் தேவை.
    வணக்கம்
     
  7. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Hall-fame Viji,
    Thank you for giving the first fb. You have got the title hall-fame quite soon while I am still struggling to reach Platinum stage though I joined IL before you. I am just joking.
    I am not particular about these, I am satisfied that I found a way to spend my time in IL instead of mulling over unwanted things.
    Thanks once again,
    Love,
    PS
     
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள சீனிவாசன்,
    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! மனமிருந்தால் மார்க்கமுண்டு. எண்பதைக் கடந்தவர்கள் கூட படித்துப்பட்டம் பெறுவதைப் பார்க்கும்போது நான் அவர்கள் முன் ஒரு தூசுக்குச் சமானம் என்று நினைக்கிறேன்.
    அன்புள்ள,
    புஷ்பவல்லி
     
  9. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள பார்க்கவி,
    உங்களின் பதிலைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உண்மையில் நான் கணினி கற்க ஆரம்பித்தபோது இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு என்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுவேன் என்று சிறிதும் எண்ணவில்லை. "இந்து" நாளிதழில் இந்த வலைத்தளத்தைப்பற்றிப் படித்தபின் இதில் பதிவுசெய்துவிட்டுப் பலமாதங்கள்வரை அவ்வப்போது வந்து போனதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. என்னாலும் ஏதோ எழுதமுடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்ததே நமது வலைத்தளமே. அதற்காக நான் திருமதி மாலதிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இந்த வயதிலும் சுசுறுப்பாக இருப்பதற்கு என் அன்னையின் வளர்ப்பு முறையே காரணம்.94 வயதுவரை தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொண்டு எனக்கு அவர் வழிகாட்டியாக இருந்தார்.
    மிக்க நன்றி,
    அன்புள்ள
    புஷ்பவல்லி

     
  10. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மஞ்சள் நகரத்து மஞ்சளழகிக்கு,
    மஞ்சள் நகரம் என்பது ஈரோடு என்பது என் அனுமானம். அது சரியா?
    உங்களின் பாராட்டு மடலுக்கு மிக்க நன்றி.
    இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆர்வம் இருக்கிறது.ஆனால் கற்றதே மறந்துவிடுகிறது. "இளமையில் கல்வி பசுமரத்தாணி" என்பது மறுக்க முடியாத உண்மை.
    அன்புடன்,
    புஷ்பவல்லி


     

Share This Page