1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural-a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 7, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    36. அன்றறிவாம் என்னா(து) அறம்செய்க; மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.
    Anrarivaam ennaadhu aramseiga; matradhu
    ponruingaal ponraath thunai.

    பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளாலாம் என்று இல்லாமல், இப்பொழுதே அறம் செய்க ..ஏனெனில் அது தான் நாம் இறக்கும் தருவாயில் உடன் இருக்கும்.
    Do your good deeds then and there, don't wait for tomorrow..this is the only companion in our last days.

    37. அறத்தா(று) இதுஎன வேண்டா; சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
    Arathaaru iduena vendaa; sivigai
    poruthaanodu oonrndhaan idai.

    பல்லக்கை சுமப்பவனும், அதன் உள்ளே உட்கார்ந்து இருப்பவனையும் பார்த்தாலே அறத்தின் பயன் நமக்குத் தெரியும்.
    Looking at the bearer of the palanquin and the person inside it shows us the profit of being righteous.

    38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்
    அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்.
    Veezhnaal padaamai nanraatrin akthoruvan
    vaazhnaal vazhiyadaikkum kal.

    ஒருவன் நாள் தவறாமல் அறம் செய்வானேயானால், அது அவனுக்கு இனி வரும் பிறவிப் பாதையை அடைக்கும் கல்லாகும்.
    If you do good without wasting a day, it will block your future births.

    39. அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல.
    Araththaan varuvadhae inbam; matrellam
    puraththa pugazhum ila.

    அறத்தோடு வாழ்வதால் வரும் இன்பம் மட்டுமே இன்பமானது, மற்றதெல்லாம் இன்பம் அல்ல..
    Pleasures from leading a virtuous life is alone called happiness, pleasures from other sources subject to disgrace and sorrow.

    40. செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
    உயர்பாலது ஓரும் பழி.
    Seyarpaaladhu orum aranae; orvarkku
    uyarpaaladhu orum pazhi.

    அறத்தின் வழியே வாழ்வதற்கு ஒருவன் முயற்சி செய்யவேண்டும். பழி தரும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
    Actions based on righteousness is alone worth doing, all other actions must be shunned, (which are not approved by the wise men).

    This portion is translated by Sriniketan.
     
    Loading...

Share This Page