1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!!

Discussion in 'Posts in Regional Languages' started by Swethasri, Jul 23, 2013.

  1. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    I don't know its a right place to post it here.if not.moderator please change in to an appropriate place.

    300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!!


    நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர். எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...​



    அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்​


    அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து


    தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா


    சிறப்பான ஓமமது தீர்க்கமாக


    வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்


    மகத்தான பிரமமய மாவாய்பாரு


    இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்


    என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே ​


    பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.​
     
    2 people like this.
    Loading...

Share This Page