1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

⚜ ''வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 6, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ⚜ 'வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு "மறை"
    (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

    ⚜ தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

    ⚜ மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

    ⚜ சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

    ⚜ சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

    ⚜ 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணின் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

    ⚜ நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.

    ⚜ 'வே'தத்தைக் கூட "மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

    ⚜ கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் 'வே'கம் எனப் படுகிறது.

    ⚜ உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது 'வே'டம்.

    ⚜ கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின்

    'வே'ம்பு.




















    Jayasala 42
     
    kaniths and Thyagarajan like this.
    Loading...

  2. Murano

    Murano Guest

    good share. got this forward in whatsapp. thanks.
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed insights to to Tamil letter "way".
    Similar or identical sound words in English too appear to be something special about it. Like waist wayward waylaid ...
    Thanks and regards.
    God bless
     

Share This Page