1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

“மனதின் புலம்பல்களும் அதற்கான விடை தேடலு

Discussion in 'Regional Poetry' started by sureshsourav, Nov 16, 2011.

  1. sureshsourav

    sureshsourav Senior IL'ite

    Messages:
    9
    Likes Received:
    12
    Trophy Points:
    18
    Gender:
    Male
    “நான் உன்னை விட்டு போய்விட்டால் என்ன செய்வாய்??”
    சாதாரனமான கேள்வி தான்,கேட்கபட்டவனுக்கு தான் புரியும் அதன் ஆழம்..
    ஏன் கேட்கிறாய் என்று யோசிக்கும்முன் அந்த கேள்வியை தவிர்த்துவிட்டு,என்
    மனதுக்குள் விடை சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டேன்..
    விடவில்லை நீயும் என் குரங்கு சிந்தணையும்.!
    அதே கேள்வியை உன்னை திருப்பி கேட்கிறேன்,பதில் வராது என்று தெரிந்தும்..
    நீயும் சொல்லவில்லை,
    நானும் சொல்லவில்லை,
    வென்றுவிட்டது அந்த கேள்வி நம் மணவலிமையை..
    ஏதேதோ பேசிக்கொள்கிறோம் தேவையில்லாமல்.!
    கைகள் பதற,
    வார்த்தைகள் தடுமாற,
    அந்த விருப்பமில்லாத உரையாடலை முடித்த்க்கொள்வதாக அறிவிக்கிறோம்,
    தோல்வியை ஒப்புக்கொண்டு..
    மௌனத்தால் மன்னிப்பு கேட்கிறோம் ஒருவர் இன்னொருவரிடம்..
    வார்த்தைகளின் அர்த்தத்தை பல கோணங்களிள் பார்க்கலாம் என,
    தாமதமாக உணர்த்துகிறது அந்த கேள்வி..உன்
    தர்க்காலிக பிரிவுக்குப்பின்..
    தூக்கமும் துக்கமும் ஒன்றாக வருகிறது..
    எது முந்திக்கொள்ளும்(கொல்லும்) என்பது நான் அறிந்ததே..
    தொண்டைக்குழி காய்ந்து,
    கண்களில் வரும் ஒரு துளி கன்னீரும் பல கேள்விகளோடு தான் வருகிறது..
    எதற்க்காக அந்த கேள்வி?
    என்ன செய்வேன் அந்த கேள்வி நிஜமானால்?
    நாம் என்ன தவறு செய்தோம் அந்த கேள்வி நிஜமாக?
    விடையில்லை நம்மிடம்..
    யோசிக்கவே விரும்பாத கேள்விக்கு விடைகாண சொல்வது எவ்வளவு கொடுமை..!
    காதலை கண்டு இருவருமே பயக்கிறோம்..
    அதற்க்கும் சற்று அதிகமாக உன்னைக்கண்டு நீ அதிகம் பயக்கிறாய்..
    “நான் விட்டு சென்றாலும் நீ கவலைப்படாதே.!”என்று நீ
    சொல்வது என் மீதான உன் அன்பை சொன்னாலும்,
    நீ இல்லையென்றாலும் நான் கவலைப்ப்படமாட்டேன் என்று
    உதடுகளில் கூட உச்சரிக்க மனம் மறுக்கிறது பெண்னே..!
    விடை சொல்ல வேண்டிய தருனம் உன் கேள்விக்கு,இதோ என் வரிகளில்:
    விதியின் விளையாட்டால் ஒன்றினைந்தோம்,
    பிடித்துபோனதால் நண்பர்களானோம்..
    காதலென்று சொல்லி காயப்படுத்தமாடேன்..
    கடந்து போகும் மேகமென்று கண்டுகொள்ளாமல் விடவும் மாட்டேன்..
    நிஜமான அன்பை ஓற்று உனக்கும் கொடுத்துவிட்டேன்,ஆதலால்
    நட்பென்னும் கைகோர்த்து நாமிருவரும் நடைபோடுவோம்..
    காலமும் நம் பெற்றோரும்,
    நம்மை பிரிக்கும் வரை..!!!
    -suresh..
     
    Last edited: Nov 16, 2011
    1 person likes this.
  2. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Re: “மனதின் புலம்பல்களும் அதற்கான விடை தேடல&#3

    good one sourav!!

    prefer if you could leave line breaks between lines

    :)
     
  3. sureshsourav

    sureshsourav Senior IL'ite

    Messages:
    9
    Likes Received:
    12
    Trophy Points:
    18
    Gender:
    Male
    Re: “மனதின் புலம்பல்களும் அதற்கான விடை தேடல&#3

    Thanks for ur valuable suggestion..:)
    Will try to be..
     

Share This Page