1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹலோ, கவனிங்கஉங்களுக்குத்தான்.....

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Sep 20, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஹலோ, கவனிங்கஉங்களுக்குத்தான்......
    _*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_
    _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_
    _*என்று கேட்டேன்.*_
    _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.*_
    _*அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ *_
    _*1) என் பெற்றோரிடம்,*_
    _*என் உடன்பிறந்தோரிம்,*_
    _*என் மனைவியிடம்,*_
    _*என் குழந்தைகளிடம்,*_
    _*என் நண்பர்களிடம்*_
    _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_
    _*கொண்டிருந்த நான், இப்போது*_
    _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_
    _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_
    _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_
    _*பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.*_
    _*4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி*_ _*டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு*_ _*மீதிச் சில்லறைக்*_
    _*காசுக்காகக்*_ _*காத்திராமல்*_ _*திரும்புகிறேன்.*_
    _*இதனால் அவர் முகத்தில் அரும்பும்*_
    _*புன்னகையை விரும்புகிறேன்.*_
    _*5) என்னைவிட முதியவர்கள்*_
    _*ஒரு செய்தியை - நிகழ்வை -*_ _*கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும்,*_ _*'இதை நீங்கள்*_
    _*முன்பே*_ _*கூறிவிட்டீர்கள்'*_ _*என்று முகத்தில்*_ _*அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.*_
    _*6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.*_
    _*நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது*_ __*(Peace is more precious than perfection)*_ _*என்பதை உணர்ந்துகொண்டேன்.*_
    _*7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.*_
    _*8)என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன். _ *(personality speaks louder than appearances.)*_
    _*9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.*_
    _*10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.*_
    _*11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.*_
    _*12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.*_
    _*13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.*_
    _*14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்.*_
    _*15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாக தவிர்த்துள்ளேன்.*_
    _*16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.*_
    _*17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.*_
    _*18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.*_
    _*19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன்.*_
    _*20) அரசியல், ஆன்மீகம், மதம் தொடர்பான செய்திகளைப் பகிர்வதையோ, அவை தொடர்பாக மற்றவர்களிடம் விவாதிப்பதையோ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன்.*_
    _*ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்?*_ _*எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே!*_ _*அமைதியான அன்பான வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே! வழி காட்டுமே!*_

    Jayasala 42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி. அருமையான பகிர்வு.
     

Share This Page