1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஸாயி என்றாலே வாயினில் பாட்டு ...

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Aug 17, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ஸாயி என்றாலே வாயினில் பாட்டு ...


    ஸாயி நாதன் பாதம் ஒன்றே நிதர்சனம்
    சாந்த குருவின் திருமுகம் ஒன்றே சுதர்சனம்
    ஆயிரம் துயர் சூழும் போதும் இல்லை பயம் அவன்
    தாள் பணிந்த பின்னர் வாழ்வே பெரும் ஜயம்


    (ஸாயி நாதன் பாதம் ஒன்றே)


    உதியின் சக்தி விதியை மாற்றும் சத்தியம்
    பதிய வைப்போம் அவனடி நெஞ்சில் நித்தியம்
    கதிநீ என்றே அடைக்கலம் ஆவோம் அவனிடம் அவன்
    கருணை யுடனே நம்மைக் காப்பதும் நிச்சயம்


    (ஸாயி நாதன் பாதம் ஒன்றே)


    எண்ணை இன்றி விளக்கை எரித்தது அவனருள்
    எண்ண அழுக்கையும் எரித்துப் போகும் அவனருள்
    காணும் பொருளில் எல்லாம் ஸாயி திரு முகம் என்று
    ஆன பின்னர் நமது வாழ்வில் இல்லை இருள்


    (ஸாயி நாதன் பாதம் ஒன்றே)


    வீயார்
     
    Loading...

Share This Page