1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஷாஜகானின் உடைவாள்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 14, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    1.

    நானும் தவளையொன்றும்
    வான் பார்த்து அமர்ந்திருந்தோம்.
    கருமேகங்கள் சூழ்கையில்
    மகிழ்வதும்
    மேகங்கள் கலைந்து ஓடுகையில்
    சோர்வடைவதுமாக
    எங்களது நேரம் கடந்துகொண்டிருந்தது.
    இருவருக்கும் இடையில்
    கவனிப்பாரற்று
    ஓடிக்கொண்டிருந்த நதியில்
    விழுந்து தொலைந்தன
    மழைத்துளிகள்.


    2.
    அந்த வனத்தின்
    நிழல் பிரதேசத்தில்
    எதையோ தேடிக்கொண்டிருந்தான்
    அவன்.
    தேடித் தேடி சலித்தவன்
    தேம்பி அழ ஆரம்பித்தபோது
    தோள் தொட்டு
    எதைத் தேடுகிறாய் என்றேன்.
    இங்கிருந்த
    போதி மரத்தை காணவில்லை
    என்ன செய்வேன் என்றபடி
    கண்ணீர் மல்கினான்.
    ஞானம் தேடிய புத்தர்கள்
    மரம்தேடும்
    பித்தர்களானது இப்படித்தான்.

    3.
    நிலவில் தவழ்வது சற்றே
    கடினமாக இருக்கிறது.
    நாளை
    நடைபழக நட்சத்திரம்
    கண்சிமிட்டியபடி காத்திருக்கிறது.

    4.
    உடைவாள்
    கழுத்தில்
    பதிய துவங்கிய கணத்தில்
    நிகழ்காலம் திரும்பிவிட்டேன்.
    கல்லறை
    உலக அதிசயமாக
    மாறிப்போனதை எப்போது
    அறிவான் ஷாஜகான்?
     
    1 person likes this.
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    1. இப்படி தான்,opportunities ai மிஸ் பண்ணிட்டு இருக்கோம்.

    2. தும்பை விட்டாச்சு, வாலையாவது பிடிக்கலாமே னு ஆசைதான்.

    3. Help இருக்கும் போது
    ...no problem..:)

    4. உண்மை தான், கல்லறை உலக அதிசயமாசே..ஆக்கியது நாமல்லவா..:)

    Sriniketan
     

Share This Page