1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேஷமா அடி உன் சிரிப்பு?

Discussion in 'Regional Poetry' started by nightingale89, Jan 1, 2011.

  1. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    சிரித்துக்கொண்டே இருக்கும் உன்
    சிந்தனைத்திறன் கண்டு வியந்தேன்;
    சிரித்துக்கொண்டே இருக்கும் உன்
    சீரிய ஆற்றல் கண்டு வியந்தேன்;
    உனக்கு சிரிக்க மட்டுமே
    தெரியுமென்று நினைத்தேனே?
    கண்ணீருக்கு கூட அர்த்தம் தெரியுமா உனக்கு?
    இதுநாள் வரை இது தெரியாதே எனக்கு?

    என் தோழியா,
    கோழை ஒருவனை நினைத்து,
    தேம்பி தேம்பி அழுவது?
    என் தோழியா,
    கெஞ்சி பெற்ற உன் காதலை,
    கொஞ்சமும் அறிவில்லாமல் விட்ட
    கயவனை நினைத்து அழுவது?

    நான் வாழ வழி சொன்னவள் நீ மட்டும்
    இன்று, விழி மூடி அழலாமா?

    நாங்கள் தோற்ற போதெல்லாம்
    எங்கள் அருகில் இருந்தாயே?
    நாங்கள் ஜெயித்த போதெல்லாம்
    எங்களை விட அகமகிழ்ந்தாயே?
    இன்று மட்டும் ஏன் இந்த தனிமை?

    நீ அழுதால் பொறுப்பவளா நான்?
    மனதை கல்லாக்கி இருக்கிறேனே
    ஏன் தெரியுமா?
    அவன் கைவிட்டதால் நீ இப்போது அழுவாய்
    அவனோடு சேர்ந்தால் நீ வாழ்நாளெல்லாம் அழுவாயே?

    காயம் மறந்துவிட்டாய்,
    காதலையும் மறந்துவிட்டாய்
    என்றெல்லாம் நினைத்து மகிழ்ந்தேனே?
    உற்சாகம் மட்டுமே எந்நேரமும் இருக்கும்
    என் தோழி பழையபடி கிடைத்துவிட்டாள்
    என்றெல்லாம் பூரித்தேனே?
    அத்தனையும் பொய்யா?

    மனதுக்குள் துன்பத்தை வைத்துக்கொண்டு
    வெளியில் மட்டும் தான் சிரித்தாயா?
    அவன் வேஷம் கலைந்ததும்,
    நீ வேஷம் தரித்துக்கொண்டாயா?

    வயதை தாண்டிய பக்குவமும்
    வயதுக்கேற்ற குறும்புத்தனமும்
    துள்ளிக்கொண்டே திரியும்
    உன்னை இனி நான் காணவே மாட்டேனா?
    இத்தனையும் இரண்டு மாத காதலிலா கரைந்தது?

    அப்படி என்னடி தோழி
    கண்டாய் அவனிடம்?
    உன் அறிவுக்கும் திறமைக்கும்
    அவன் பக்கத்தில் கூட வர முடியாதே?
    உன் மனதுக்கும் குணத்துக்கும்
    அவன் எம்மாத்திரம்?

    கடல் தாண்டினாலும் கிடைக்காத
    பொக்கிஷம் நீ என்பதை அறியாத பதர் அவன்...
    கையில் கிடைத்த புதையலை
    தொலைத்துவிட்ட முட்டாளடி அவன்...

    காதல் என்ன என்றே அறியாதவளை
    வலை விரித்து பிடித்து, கைவிட்ட வஞ்சகன் அவன் எங்கே?
    அவன் குறையையும் என்னாது
    தினமும் அவனுக்கு ஊக்கம் கொடுத்த நீ எங்கே?

    வாழ்வதற்கு தேவை பணமும் பதவியும் தான்
    என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவன் எங்கே...
    உன் அன்பும் காதலும் தேவையில்லை இனியெனக்கு
    என்று விட்டு போனவனை மன்னித்த மனமுடைய நீ எங்கே?

    வேண்டாம் தோழி... விட்டுவிடு...
    கனவாய் நினைத்து மறந்துவிடு..
    அவனை அடைந்தால்,
    உன்னை நீ இழந்துவிடுவாய்...

    உன் இரக்கம் அவனின் பலமாய் ஆகிவிடக்கூடாது
    உன் மன்னிப்பு அவனின் பாவங்களை கழுவி விட கூடாது
    உன் நிமிர்வு அவனை தலைக்குனிய வைக்க வேண்டும்
    உன் உயர்வு அவனை ஆச்சர்யபட வைக்க வேண்டும்


    (இது என் தோழியை நினைத்து எழுதியது.மன்னிக்கவும்,ரொம்பவே பெரியதாக போய்விட்டது.)
     
    Last edited: Jan 1, 2011
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்கள் தோழி இழந்து விட்ட காதலன நினைத்து அழவில்லை,
    தான் ஏமாளியானதை, பகடையானதை நினைத்து வருந்துகிறாள்!

    உஷாராகி விடுவாள், இனி உங்கள் தோழி!!
    அனுபவத்தை விடச் சிறந்த ஆசான் இல்லை!

    பக்கபலமாக இருந்து அவளைத் தேற்றுங்கள்!
    இப்பொழுது அவளுக்குத் தேவை ஆறுதல்,
    அதைவிட நம்பிக்கை, தன்னம்பிக்கை!
     
  3. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    தன்னம்பிக்கை உடையவள் தான் அம்மா என் தோழி. சில நேரங்களில் அவளிடம் பேசினாலே போதும்,சிரித்து ஆறுதல் சொல்லுவாள்.She is the secret of OUR energy. அவள் அழுது இன்றுவரை பார்த்ததில்லை நாங்கள் யாரும். அழுதுவிட்டாளே என்ற ஆதங்கம்...அழ வைத்துவிட்டானே பாவி என்ற கோபம் எனக்கு.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நைடிங்கேல்,

    கவிதை - தோழியின் மீது உங்களுக்குள்ள அக்கறை, அன்பு,
    அவளின் திறமை, அதே சமயம் காதல் எனும் மாயப் பிசாசு,
    அவளைப் படுத்தும் பாட்டையும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
    காதலின் மதிப்பரியாதவனை இழந்ததுக்கு மகிழாமல் அழுவது இழுக்கு.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்க தோழியின் பேர் பூஸ்டா?
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரிவதில்லை. மறக்க தெரிந்திருந்தால் மாறவும் தெரிந்திருக்கும்.

    சிரிக்கும் இதயம் துன்பம் அறிவதில்லை என்று பொருளில்லை. மற்றவராவது தன் துன்பம் அறியாமல் போகட்டுமே என்ற எண்ணம். உறுதியான நாணலும் காற்றடித்தால் கொஞ்சம் சாய தான் செய்யும்...வளைந்துவிட்டதால் நாணலுக்கு உறுதி இல்லை என்றாகுமா? பெண்ணும் அப்படித்தான்.

    கவிதை நன்று!!!!:thumbsup:thumbsup
     
    Last edited: Jan 2, 2011
  7. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    பெண்களின் மனம் ரொம்ப பலவீனமானதோ தெரியவில்லை.தப்பு செய்தவன் குற்றுனர்வில்லாமல் இருக்கான்.தவறிழைக்காத பெண்களோ?
    நன்றி நட்புடன்.
     
  8. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    எங்களை பொறுத்தவரை அவள் அப்படித்தான்.நல்லவேளை உங்கள் தோழி வேஸ்ட்டா என்று கேட்கவில்லை நீங்கள்.:bowdown
     
  9. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நீ சொன்ன விஷயம் மட்டும் பலித்தால், உன் வாய்க்கு சக்கரை போடுகிறேன்.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நைடிங்கேல்,

    நான் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் சொல்லி விட்டீர்கள் அவர் வேஸ்ட் என்று.
    இப்பொழுது நானும் சொல்கிறேன், இதையே நினைத்து காலத்தைக்
    கடத்திக் கொண்டிருந்தால் அவர் வேஸ்ட் தான்.
     

Share This Page