1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டுவது வலி!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Sep 7, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேண்டும்,வேண்டும் வலி வேண்டும்,
    என,வேண்டும் இனம் நம் பெண்ணினம்,
    ஆம்,ஐயிரு திங்கள் தம் கருவினில் தாங்கி,
    அதிலிருக்கும் தம் தவப்பயனை தரணியில் இறக்கிட,
    வேண்டும்,வேண்டும் பிரசவ வலி வேண்டும் ,
    என வேண்டும் இனம் நம் தையல் இனம்,
    பத்துமாதங்களும் ,பல பல விதமாய்,
    தன் உரு மாற்றத்தை அனுபவித்து,
    தாய்மையில் பூரித்து,வலிகளை பொறுத்து,
    பக்குவமாய் பத்தியமிருந்து,நடை நடந்து,
    தன் குழந்தை வெளிவரும் நாளை,ஆர்வமாய் நோக்கி,
    தன்னை தானே வருத்திக் கொண்டு,
    அம்மா,அப்பா,என அலறி துடித்து,
    கணவன் முதல்,கல்யாண தரகன் வரை ,
    அனைவரையும் வாயில் வந்தபடி வைதாலும்,
    வேண்டும்,வேண்டும்,வலி வேண்டும் ,
    என வேண்டுவது நம் பூவையர் இனம்.


     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கவிதை மிக நன்றாக இருந்தது தீபா. வாழ்த்துக்கள்.
    "கணவன் முதல்,கல்யாண தரகன் வரை ,
    அனைவரையும் வாயில் வந்தபடி வைதாலும்,"
    கணவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தீபா? :(
    -ஸ்ரீ
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உயிருக்கு உயிராக
    உயிருக்குள் உயிராக
    நினைவும் நிஜமும் நானாக
    நித்தம் உடலை வருத்தி
    பத்தியம் இருந்து நித்திரை இழந்து
    மறு உயிர் பெற்று

    வாழும் வாழ்கையை தியாகம் செய்தவள் !......வலை தளத்தில் படித்த வரிகள்

    தோழியே
    பூவையரின் பேரிளம் வலி வேண்டும்
    இந்த வரிகள் .....
    மண்ணுக்குள் பொதிந்திருக்கும் மரகதங்களை
    இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ வைத்திட
    தனக்குள் ஒரு சகிப்பின் சன்னதி உருவாக்கும்
    தாய்மையின் பெருமைக்கு தரணியில் நிகரில்லை
    நானும் பெருமிதம் அடைகிறேன்......உங்கள் கவிதையின் வழியாய் Bow.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நன்றிகள் ஸ்ரீ ,உங்கள் பதிலுக்கு.
    பிரசவ விடுதியில்,செவிமடுத்தால் தான்,
    தெரியும் அதன் உண்மை.
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear saroj,
    thanks for your reply.
    பிரசவம் ஒரு மறுபிறப்பு.தாய்மை மிக,மிக சிறந்தது.
    உண்மையில் ,வலிகளில் மிக அதிக பட்சமானது பிரசவ வலி,என்பது நிரூபிக்கப்பட்டது.
    இருப்பினும் அதை ஆவலாக வேண்டும் இனம் நாம் இனம்,இல்லையேல் எப்படி தாண்டியது மக்கள் தொகை 130 கோடிகளை .
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தீபா
    வலிமை உடையது பெண் இனம் அதனால் தான் வலி வேண்டுகிறது
    அருமையான கவிதை.
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எத்தனை வலிகள் என்றாலும் மனதாலும் சரி உடலாலும் சரி தாங்குவது பெண்ணினமே!!!

    தங்கள் கவிதை நன்று அக்கா:)
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நன்றி ருக்மணி மா.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks dear.
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    வலிகளை தாங்கும் இதயம்
    பெண்ணுக்கு மட்டும் தான் உள்ளது
    அந்த வழிகளில் மீண்டும் வரும்
    சக்தியும் உளத்து அவர்களுக்கு மட்டும் தான்
    தன்னம்பிக்கையில்
     

Share This Page