1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விவசாயம்- விதை விதைத்து நாற்று வளர்த்தல்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Oct 31, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முதல் பதிவில் வயல் வரப்பு என்று சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .இப்போது விவசாயத்தின் அடிப்படை வேலையான விதை விதைத்தல் நாற்று வளர்த்தல்..அதிக பரப்பளவு நிலங்கள் உடைய நிலச்சுவான்தார்கள் நாற்றுகள் வளர்ப்பதற்கு ஒரு வயலையே வைத்திருப்பார்கள் . மற்றவர்கள் தங்கள் வயலின் ஒரு பகுதியில் நாற்று வளர்ப்பார்கள் .விதை நெல் மிகவும் பதப்படுத்தப்பட்டது .முந்தய அறுவடையின் போது விளைந்த நெல்மணிகளை நன்கு வெயிலில் காய வைப்பார்கள் .பின் பெரும் மண் குதிரில் போட்டு மூடி வைத்து விடுவார்கள் .பெரிய மண் ஜாடி ஐந்து அடி உயரம் இருக்கும் இதுவே எங்கள் ஊரில் குலுக்கை அல்லது குதிர் என்று சொல்வோம் .

    விதையை தூவும் முன் நாற்று வளர்க்கும் இடத்தை நன்கு உழுது தண்ணீர் நிறைத்து ஈரப்பதமாக வைத்திருப்பார்கள் .நெல் பூமியில் பதியும் அளவுக்கு ஈரப்பதம் இருக்கும் .பின் ஒரு நார் பெட்டியில் நெல்விதைகளை எடுத்து கொண்டு ஆண்டவனை வேண்டி கொண்ட பின் கை நெறைய நெல்மணிகளை எடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் தூவுவார்கள் .சொல்லப்போனால் மிக மெதுவாக விசிறி அடிப்பார்கள் .அது ஒரு அழகான காட்சி .
    அடுத்து நாற்று வளர்வதை கண்காணித்து நன்றாக வளர்ந்ததும் நாற்று பிடுங்க ஆரம்பிப்பார்கள் .அநேகமாக 15-20 நாட்களில் விதை வேரூன்றி முளை இட்டு நாற்று செழித்து வளர்ந்து வெளியே வந்து விடும் .நாற்று பிடுங்குவதற்கு முன் அது இருக்கும் நிலபரப்பில் நீர் பாய்ச்சி அந்த இடம் சேறாகி விடும் .தண்ணீர் சேர்ந்து இருந்தால் தான் நாற்றுக்களை வேரோடு பிடுங்க முடியும் .அந்த பெண்கள் இரு கைகளாலும் மிக லாவகமாக நாற்றுக்களை பிடுங்குவார்கள் .பூமி தாய்க்கும் வலிக்காமல் அவள் குழந்தைகள் நாற்றுக்களுக்கும் சேதம் இல்லாமல் எடுப்பார்கள் .பின் சிறு சிறு கட்டுக்களாக கட்டி வரப்பில் வைப்பார்கள் .இதற்கு நாற்றுமுடி என்று பெயர்.அதற்கு அடுத்தபடியாக நாற்றுமுடிகளை பெரிய கட்டுகளாக கட்டி ஒவ்வொருவரும் தலையில் சுமந்து வயலுக்கு செல்வார்கள் .அங்கும் வயல் நன்றாக உழப்பட்டு தண்ணீர் தேங்கி மண் ஈரப்பதமாக இருக்கும் .பின் பெண்கள் நாற்றுமுடிகளை பிரித்து அதில் இருந்து இரண்டு இரண்டு நாற்றுக்கன்றுகள் கையில் எடுத்து நடுவார்கள் .ஒவ்வொரு கன்றுக்கும் இடையே சீரான இடைவெளி விட்டு
    நடுவார்கள் .நட்டு முடித்த பின் பார்த்தால் நூல் பிடித்தாற்போல் ஒரே கோட்டில் இருக்கும் .அவர்கள் வேறு எந்த விதமான இயந்திரங்களும் பயன் படுத்தாமால் கண் அளவை வைத்தே சீராக வேலை செய்வார்கள் . வயலுக்கு உரியவரின் பெண் குழந்தைகள் வந்தால் முதலில் அவர்கள் கையில் கன்றுகளை கொடுத்து நட சொல்வார்கள் .எனக்கு அந்த பாக்கியம் கிடைத்ததுண்டு .நான் என் பாட்டியின் கூட வயலுக்கு செல்வேன் .அப்போது இந்த அனுபவம் கிடைக்க பெற்றேன் .ஒரு முடி நாற்று நட்ட பின்பே நான் வெளியே வருவேன் . ஆக இப்படியாக நாற்று நாடும் வைபவம் முடிந்தது

    களவாணி எனும் திரைப்படத்தில் ஓவியா நாற்று நட்ட பின் அவள் நட்ட பயிர் செழித்து வளர்ந்திருக்கிறதா என்று பார்ப்பது போல் நான் பார்த்ததில்லை :blush::blush::blush::blush: .அது போல் நாற்றுகட்டுக்களை காட்டி அந்த வழி செல்வோரிடம் பணம் வாங்குவது போல் சில திரைப்படங்களில் காட்டி உள்ளார்கள் .எங்கள் ஊர் பக்கம் அப்படி நடப்பதில்லை .


    [​IMG]

    மீண்டும் நாளை சந்திப்போம்
     
    Last edited: Oct 31, 2017
    kkrish, kaniths and PavithraS like this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெரியம்மா,
    உங்கள் விவசாய அஞ்சல் படு ஜோர். பொங்கலுக்குள் விளைந்து அறுவடை செய்து புது அரிசியில் பொங்கல் வைக்கலாம் .
    கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த என்னால் உங்கள் கட்டுரையை வெகுவாக ரசிக்க முடிகிறது.
    நாற்று என்றதுமே எனக்கு 'மாட்டுப் பெண், நாற்றுப் பெண் என்ற நினைவு வருகிறது. வீட்டுக்கு வந்த மருமகளை எங்கள் வீடுகளில் மாட்டுப் பெண், நாட்டுப் பெண் என்றெல்லாம் சொல்வதுண்டு.
    மாட்டுப் பெண் என்ற வார்த்தை-மாற்றுப் பெண் என்பது மருவி வந்திருக்கலாம்.வீட்டுக்கு வந்த மருமகளை தன பெண்ணுக்கு மாற்றாக, பெண் போலவே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கம் கொடுப்பர்.

    அதே மாதிரி நாட்டுப் பெண் என்பதும் சரியான expression என்றே தோன்றுகிறது.
    நாற்று ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அதைப் பிடுங்கி வேறு இடத்தில் நடுவது போல், பெண்ணை செழுமையாக வளர்த்து ஒரு பருவம் வந்ததும் திருமணம் செய்து வேறு இடத்துக்கு அனுப்புகிறோம். நாற்று புதிய இடத்தில் தான் நன்கு முற்றி பலன் கொடுத்து நெல் மணிகளைக் குவிக்கிறது. பெண்ணும், தான் வாழும் இடத்துக்குப் பெருமை சேர்க்கிறாள் போலும்.
    நாத்தனார் (நாற்றனார்) என்ற வார்த்தையும், பிற வீட்டுக்குச் செல்பவள் என்ற பொருளையே குறிக்கும் என்று தமிழ் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

    Jayasala42
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நாற்றுப்பெண்களில் ஒருத்தியாக நான் இதை ஆமோதிக்கிறேன் ! :)

    பெரியம்மா- எவ்வளவு இதமான வார்த்தைகளில் வேளாண் மகத்துவங்களைப் புரிய வைக்கிறீர்கள் ! இந்தப் பதிவுகள் பொக்கிஷமானவை. இன்றைக்குக் காலையில் கணவருடனான உரையாடலில் நமது தளத்தில் தாங்கள் உட்பட, எத்தனை மூத்தவர்கள் எவ்வளவு அரிய அனுபவங்களையும், நேர்மறைப் பார்வைகள் மற்றும் அணுகுமுறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் இளையவர்களாகிய எங்களுக்குச் சொல்லித் தருகிறீர்கள் என்று வியந்து பேசிக் கொண்டிருந்தேன். தத்தமது வீட்டுப் பெரியோர்களே ஓர் அனுபவக் களஞ்சியம். ஆயினும், வளர்ந்துவிட்டத் தொழில்நுட்ப உலகத்தில், இணையத்தின் உதவியோடு உங்களைப் போன்றவர்களின் அனுபவ வார்த்தைகளை அறிந்து கொள்ளவும், அன்பையும் ஆசியையும் பெற்றுக் கொள்ளவுமான வாய்ப்பு எனக்கும், என்னைப் போல் பலருக்கும் கிட்டயிருப்பது பாக்கியமே. உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் மிகையாகக் கூறுவதாக எண்ணாதீர்கள். இவை இதயத்திலிருந்து வரும் எண்ணங்கள்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    kkrish, kaniths and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jayasala42 ஜெயசாலா அவர்களே உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கத்துக்கும் மிக்க நன்றி .பொங்கலுக்குள் பயிர் விளைந்து புது நெல் கிடைத்து விடும் .நாற்றுபெண் நாட்டுப்பெண் உவமை மிக அருமை .வேளாண் தொழிலுக்கும் நம் வாழ்க்கைக்கும் நெறைய தொடர்புகள் உள்ளன .அதை இந்த கட்டுரை முடிவில் எழுதுகிறேன் .பிடுங்கி நட்ட நாற்று செழித்து வளர வளமான மண் தேவை .நீர் தேவை .ஊட்ட சத்தான உரம் தேவை .அது போல் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நல்ல மனம் கொண்ட உறவுகளும் அன்பு எனும் நீரும் பாசம் எனும் உரமும் கிடைத்தால் அவள் செழித்து வளரும் நெற் கதிர் போல்
    நல்ல குணவதியாகவும் நெல்மணிகளை போல் மழலை செல்வங்களையும் பெற்று குடும்பம் தழைக்க செய்வாள்
     
    kkrish and kaniths like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பவித்ரா ஏதோ எனக்கு தெரிந்ததை இங்கு பகிர்கிறேன் .மறந்து போன நம் பாரம்பரியத்தை எடுத்து காட்டுவது என் கடமை என்று நினைக்கிறேன் .வாழ்க்கை ஒரு வட்டம் .மீண்டும் நாம் புறப்பட்ட இடத்துக்கே செல்கிறோம் .இது மிக மெதுவாக நடக்கிறது .ஆனால் மக்கள் எதை எல்லாம் இழந்து விட்டோம் என்பதை இப்போது நினைத்து பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள் .அதனால் தான் இந்த பதிவை நான் எழுத ஆரம்பித்தேன் .என் எழுத்து நடை நாட்டுபுற பாட்டு போல் இருக்கும் .மிக்க நன்றி பவித்ரா
     
    kkrish, kaniths and PavithraS like this.
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    வயலில் நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்கள் விளக்கம். பாராட்டுக்கள் ருக்மணி.
     
    periamma likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu நன்றி உஷா
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வயலில் களை எடுப்பதும் பின் நீர் பாய்ச்சும் விதம் பற்றியும் நாளை எழுதுகிறேன்
     
  9. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிகவும் அருமை பெரியம்மா @periamma
    என்ன சொல்வது என்றே Theriயவில்லை. நாம் தினமும் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது, ஒவ் வொரு பருக்கையின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்று எண்ண வைத்திருக்கிறீர்கள்.

    ஒரு கேள்வி - நாற்றை பிடுங்கி உடனே நட்டு விடுவார்களா இல்லை மறுநாள் நடுவார்களா?
    நாற்றை பிடுங்க எவ்வளவு நேரம் ஆகும்? மீண்டும் நட்டு முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?

    மன்னிக்க வேண்டும். ஒரு கேள்வி என்று கூறிவிட்டு பல கேள்விகள் கேட்கிறேன் .

    நாளை இதன் தொடரை படிக்கிறேன்.
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kkrish கமலா இந்த தொடரை படிப்பதற்கு மிக்க நன்றி .நாற்றை பிடுங்கியதும் சிறிய கட்டுகளாக கட்டி வரப்பில் வைப்பார்கள் .பின் நன்கு உழுது பண்படுத்தப்பட்ட வயலில் உடனே நட்டு விடுவார்கள் .ஒரே நாளில் நடும் வேலை முடிந்து விடும்
     
    kkrish likes this.

Share This Page