1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விக்ன விநாயகன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Sep 16, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆனை முகத்தவன் ! பானை வயிற்றினன் !
    ஞானம் வழங்கிடும் ஆதி விநாயகன் !

    பாலுடன் தேனும் பாகும் பருப்பும்
    நாலும் படைத்திட தமிழை அளிப்பவன் !

    வெள்ளை மனத்தையும் இனிய குணத்தையும்
    மோதகம் என்று நிவேதனம் ஏற்பவன் !

    பெரியவர் சிறியவர் அனைவரும் விரும்பிடும்
    கரிய முகத்தவன் கருணை நிறைந்தவன் !

    வேதங்கள் காட்டும் பிரணவத்தின் பொருளவன்
    பூதங்கள் ஐந்திலும் பரவி இருப்பவன் !

    ஆறுமுகத்தவன் மூத்தவன் நம் எதிர்
    சீறி வருந்துயர் போக்கிடும் காவலன் !

    பாதம் பணிந்திடும் தூய மனத்தவர்
    வாதைகள் நீக்கிடும் விக்ன விநாயகன் !

    கைத்தல நிறைகனி அப்பம் அவல்பொரி
    வைத்து வணங்கிடும் எளிமைக்கு அருள்பவன் !

    புத்தியும் சித்தியும் அருளிடும் குணநிதி
    வித்தைகள் தந்திடும் சித்பர கணபதி !

    ஆற்றின் கரையிலும் மரத்தின் அடியிலும்
    வீற்றிடும் கணபதி தாள்பணி மனமே !


    Regards,

    PavithraS
     
    4 people like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா உங்கள் கவிதை மூலமாக முழு முதற் கடவுள் அருள் கிடைத்தது
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma , Thank you periamma ! Wish you a happy Vinayaka Chathurthi !

    Regards,

    Pavithra
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Excellent Pavithra. I am sure Lord Ganesha has blessed you with poetic Tamil knowledge. Hope you celebrated pooja well. Wishes to you all @PavithraS @Periamma @Harini73 @Poetlatha

    learnt the significance of Vella kozhukattai. Thank you
     
    1 person likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls , Thank you for your kind words and wishes ! May Lord Ganesha bless us all ! This year no festival for us :-(. But I enjoyed/ am enjoying, like you, all entries by our fellow IL ites in Ganesh Chathurthi Craft Contest thread thrown open by Saroja Madam @Yashikushi (Madam , you have a way with words .It is very electrifying).

    Regards,

    Pavithra
     
    2 people like this.
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் கடன் பணி செய்து கிடப்பதே [​IMG]

    உங்களின் மகிழ்வான கருத்துக்கு
    என் தாழ்மையான நன்றிகள்.[​IMG]
     
    2 people like this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @YashiKushi,

    Your smiley is tooo good.
     
    1 person likes this.

Share This Page