1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழைப்பழத்தின் ரயில் பயணம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Feb 7, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:வாழைப்பழத்தின் ரயில் பயணம்:hello:

    முதன்முறையாக சரக்கு இரயிலில் வாழைப்பழம் ஏற்றுமதியா?
    ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய நேற்று ஒரு ரயில் முழுவதும் 980 மெட்ரிக் டன் வாழைப்பழத்தை குளீருட்டபட்ட பெட்டிக்குள் வைத்து ஆந்திராவிலிருந்து - மும்பை துறைமுகத்திற்கு இந்தியாவின் முதல் சரக்கு இயிலை தொடங்கி FruitTrain என்று பெயரிட்டுள்ளனர்.

    நேற்றுதான் பட்ஜெட்டில் விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி ஏற்படுத்தபடும்னு வேற அறிவித்து இருந்தார்கள்!

    இந்த Fruit Train 980 மெட்ரிக்க டன் எடையோடு தூரம் 900 கி.மீ தூரம் ( ஆனந்தபூர் - மும்பை போர்ட்) பயணிக்கிறது (2-8°C) குளீரூட்டபட்ட பாதுகாப்பு பெட்டியில்.

    கிட்டதட்ட 150 பெரிய லாரிகளில் செல்ல வேண்டிய பொருட்களை.... ஒத்த குளீரூட்டபட்ட மின்சார Goods Train கொண்டு செல்கிறது!

    அப்ப எத்தனை லிட்டர் டீசல் மிச்சம் - அந்நிய செலவாணி மிச்சம்! மாசு குறைபாடு - சாலை ட்ராஃபிக் குறைவு என்பதை கூட்டி கழித்து பாருங்கள்!

    நமது எதிர்கால கட்டமைப்புக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.

    Anathapur & Kadapa மாவட்டங்களில் மட்டும் 10,000 மெட்ரிக் டன் அளவுக்கு வாழைப்பழங்களை Fruit Train மூலமாக ஏற்றுமதி செய்யவுள்ளனராம்.

    ஆந்திரமுழுமைக்கும் 30,000 டன் வாழைப்பழம் ஏற்றுமதி செய்ய டார்க்கெட்டாம்.

    இந்தியாவில்
    பெரும்பாலும் குளீருட்டபட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாததே நாம் உற்பத்தி செய்யும் உணவில் பாதி வீணாகிறது...... தட்டுக்கு செல்லுமுன்!

    இதற்காகவே பண்ணையிலிருந்து - நாம் உண்ணும் தட்டுக்கு வரும்வரை குளீருட்டபட்ட கட்டமைப்பை Farm To Plate என்ற குறிக்கோளோடு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்து உணவு பொருட்களின் அழிதலை தடுப்பதோடு - சந்தையில் சீரான Availabilityயையும் - Qualityயையும் உறுதி செய்கின்றனர்.

    ஆறு தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த வாழைப்பழ ஏற்றுமதியை செய்கின்றனர்.

    விவசாயிகளிடம் தரமான கன்றுகளை கொடுத்து - நவீன முறைகளை பயிற்றுவித்து - Qualityயை அதிகரித்து - பண்ணையிலிருந்தே குளீரூட்டி - நல்ல விலைக்கு காண்ட்ரக்ட் போட்டு - வருட முழுவதும் வருமான உறுதியென - படுஜோராக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

    Farm To Plate என்ற யுக்தியில் செயல்படுகின்றனர்.

    இதுவரை விவசாயத்திற்கென்று தனி இரயில் கிடையாது. பெட்ரோலிய பொருட்கள் - துறைமுக பொருட்கள் - நிலக்கரி - சிமெண்ட் - அரிசி - பருப்பு என Dry பொருட்கள் மட்டுமே சென்றது.

    இதுவே இந்திய வரலாற்றில் முதன் முதலாக குளீரூட்டபட்ட Goods Train!

    ஏற்றுமதிக்காக மட்டுமே Point to Point முறையில்!
    ஒருபுறம் துறைமுகங்களின் எண்ணிக்கையையும் - கையாளும் திறனை இரட்டிப்பாக்கியும் வேலைகள் மும்முரமாக நடக்க, அந்த துறைமுகத்தை அனைத்து மாவட்டங்களுடன் இணைக்க 4 & 6 & 8 வழி சாலையென பக்கா ஸ்கெட்சோடு வேலைகள் நடக்கின்றன! இதோடு இப்ப இரயிலையும் விவாசாயத்திற்கு தகுந்தவாறு மாற்றியமைப்பது ஏற்றுமதிக்கான கட்டமைப்பில் மிகப்பெரிய வாய்ப்பை (Opportunity) ஏற்படுத்தும்.

    அறிவோம் ஏற்றுமதி சந்தை வாய்ப்பை! தொழில்முனைவோராக முயற்சிப்போம்!
     
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    A great attempt ! Salute!
    jayasala 42
     

Share This Page