1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானம் வசப்படும் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jun 13, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    விரித்த சிறகிற்கு வானம் வசப்படும் !
    துணிந்த மனிதர்க்கே வாழ்வு வசப்படும் !
    சிரிக்கும் பூக்களை நாமும் பறிப்பதால் ,
    பணிந்து மொட்டுகள் விழுந்து போகுமோ ?

    பாதை நல்லதாய் வகுத்துக் கொள்வதால்
    பயணம் இனிமையாய் அமைந்து போகுமே !
    பாதை தவறியே நாமும் சென்றிடின்
    பயணம் வெற்றியில் முடியக் கூடுமோ ?

    நாளை நல்லதாய் விடியுமென்று நம்
    நெஞ்சில் நம்பிக்கை இருந்த போதிலும் ,
    வாளைப் பிடித்திடும் போரின் வேளையில்
    அஞ்சி ஓடினால் வெற்றி கிட்டுமோ ?

    வாழ்க்கை ஆட்டத்தில் பங்கு எடுப்பதால்
    வெற்றி பெற்றிட வாய்ப்பு கிட்டிடும் !
    கோழை போலவே பயந்து ஒதுங்கிடில்
    கற்றுக் கொள்ள அதிலேதும் உள்ளதோ ?

    செய்யும் முயற்சியில் தோல்வி கிட்டினும்
    கிடைக்கும் அனுபவம் அறிவைக் கூட்டுமே !
    வாய்ப்பை நாமுமே தட்டிக் கழித்திடில்
    மடையர் நாமென பிறகு வருந்துவோம் !

    கவனம் யாவையும் செயலில் வைத்திட
    விரும்பும் யாவையும் நாமும் அடையலாம் !
    நவிலும் வார்த்தையில் நேர்மை காத்திடின்
    கரும்பின் சாறென வாழ்வும் இனிக்குமே !

    முயன்று வாழ்வதால் வெற்றி அடையலாம் !
    பிறர்க்கு உதவினால் மகிழ்ச்சி காணலாம் !
    உயர்ந்த நோக்குடன் நாமும் வாழ்ந்திடின்
    இறந்த பிறகும் புகழோடு திகழலாம் !

    பிறப்பின் நோக்கமே பிறர்க்கு உதவயென
    புரிந்து கொண்டபின் துன்பமே இல்லை !
    இறக்கும் தேதியே தெரிந்த போதிலும்
    இருக்கும் நாள்வரை இரங்கி வாழுவோம் !


    Regards,

    Pavithra
     
    7 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Very motivating one Pavithra. Beautifully written. Rich content
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you , jskls !

    @VanithaSudhir , Thank you for the like !:)

    Regards,

    Pavithra
     
  4. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Reminded of this song...

    kaalai ezhundhavudan naalaiya kaelvi
    adhu kaiyil kidaiththa pinnum thudikkudhu aavi
    aenenra kaelvi onrae enraikkum thangum - manidha
    inbathunbam edhilum kaelvidhaan minjum

    aarambaththil pirappum un kaiyil illai
    idhil aduththaduththa nadappum un kaiyil illai
    paadhai vaguththa pinbu bayandhenna laabam - adhil
    payanam nadaththividu maraindhidum paavam
     
    4 people like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Kannadaasan Kannadaasan thaan ! Indhap paadal en appavirku migavum pidiththamaana paadal ...

    pirarkkaaga naam azhalaam iyarkaiyil nadakkum
    nee pirarkkaaga unavu unna eppadi nadakkum -

    indha variyaich cholli , pirarukku unavalippadhai un kadamaiyaagak kolla venum endru en thandhai arivuruththuvaar ...

    Thank you , Vanitha , for bringing back my father's memories ...


    Regards,

    Pavithra
     
    2 people like this.
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Well written... Liked these verses! Lovely... Thanks for sharing! :thumbsup
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Irukkum naal varai Irangi vaazhuvom .

    Nalla kolgai .kavithai arumai
     
  8. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    விண்ணும் வயப்படும்..!!
    -
    [​IMG]
     
  9. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PavithraS,

    Simply superb.Well written.Arumaiyana nadai.

    விரித்த சிறகிற்கு வானம் வசப்படும் !
    துணிந்த மனிதர்க்கே வாழ்வு வசப்படும் !

    செய்யும் முயற்சியில் தோல்வி கிட்டினும்
    கிடைக்கும் அனுபவம் அறிவைக் கூட்டுமே !

    நவிலும் வார்த்தையில் நேர்மை காத்திடின்
    கரும்பின் சாறென வாழ்வும் இனிக்குமே !

    பிறப்பின் நோக்கமே பிறர்க்கு உதவயென
    புரிந்து கொண்டபின் துன்பமே இல்லை !
    இறக்கும் தேதியே தெரிந்த போதிலும்
    இருக்கும் நாள்வரை இரங்கி வாழுவோம் !

    Superb lines.:clap:clap:clap
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73 , Thank you ! :)
     

Share This Page