1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாட்ஸ்ஆப் பதிவுகள்

Discussion in 'Posts in Regional Languages' started by tljsk, Jun 19, 2015.

  1. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    நம்மில் பலருக்கு தெரிந்தவர் அவர். படித்தவுடன் வேலை தேடி அலைந்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 30 வேலைக்கு விண்ணப்பித்தும், தகுதியில்லை என்று நிராகரிக்கப்படுகிறார். பின்னர் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் சில வேலைகள் காலியாக இருக்கிறது என தகவல் வர, அங்கும் விண்ணப்பிக்கிறார். சோதனையாக, விண்ணப்பித்த 24 பேர்களில் 23 பேருக்கு வேலை கிடைக்க, இவர் மட்டும் வழக்கம் போல் நிராகரிக்கப்படுகிறார். இதுபோன்று அடுக்கடுக்காய் தோல்விகள், துரத்தும் சோதனைகள்.
    ஆனாலும் தன் மீது உள்ள நம்பிக்கையினால் அந்த மனிதர், தன் நண்பர்கள சிலரின் பண முதலீட்டுடன் தனியே தொழில் தொடங்குகிறார். தன்மீது அவர் வைத்த அபரிமிதமான நம்பிக்கை வீணாகவில்லை. தன் நாட்டின் பொருளாதாரத்திற்கே முக்கிய பங்களிப்பாய் இருக்குமளவிற்கு தன் நிறுவனத்தை வளர்த்து, விண்ணைத் தொடும் வெற்றி அடைகிறார்.

    2005ஆம் ஆண்டு ஃபார்ட்யுன் நிறுவனம், இவரை ஆசியாவின் 25 மிக சக்திவாய்ந்த தொழில் புரிவோரில் ஒருவராக கவுரவித்துள்ளது. இது போல் பல விருதுகளையும், பெயர்களையும் சம்பாதித்த இவரது சமீபத்திய மதிப்பு, கிட்டத்தட்ட 21பில்லியன் அமெரிக்க டாலர்கள்!! 25000க்கும் அதிகமானோர் இவரிடம் இன்று வேலை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் புகழின் உச்சியில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கே சவாலாக, தன் நிறுவனத்தை உயர்த்தி காட்டியுள்ளார். அவரது நிறுவனம் “அலிபாபா”, அந்த மனிதர் சீனாவை சேர்ந்த “ஜாக் மா”.

    ஜாக் மாவைப் பற்றி இணையத்தில் பல சுவாரசியமான தகவல்கள் குவிந்துள்ளன. அத்தனை நிராகரிப்புகளை, தோல்விகளை சந்தித்தபின்னும், “தன்னால் முடியாதோ?” என்ற எண்ணமும் “தன்னால் முடியுமா?” என்ற சந்தேகமும் என்றுமே தனக்குள் வர வாய்ப்பே அளிக்காமல், கண்டிப்பாக “தன்னால் முடியும்” என்று மட்டும் உறுதியாக நம்பிக்கையுடன் உழைத்ததால் தான் இன்று இந்தளவிற்கு உயரத்தை அடைய முடிந்துள்ளது.

    என்னால் முடியும் என்று உழைக்கும் போது தான் வெற்றி பிறக்கிறது. அவ்வாறு எண்ணி உழைக்கையில், நேரமோ, அதிர்ஷ்டமோ, விதியோ குறுக்கிட்டு வெற்றியை தற்காலிகமாக தள்ளி வைக்கலாமே தவிர, நிரந்தரமாக தடுக்க இயலாது.

    எனவே என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் உழைக்க தொடங்குவோம், இலக்கை அடைந்து சரித்திரம் படைப்போம்.
     

    Attached Files:

    Sairindhri likes this.
  2. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    ஓர் மேடைப் பேச்சாளரின் தீவிர ரசிகரான நண்பர், பேச்சாளர் என்ன விதமான அறிவுரையோ, கருத்தோ சொன்னாலும் அதை அப்படியே ஏற்று தன் வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்ச்சிக்கும் பழக்கம் உடையவர். அன்று ஒரு கூட்டத்தில் அப்பேச்சாளர், உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதின் முக்கியத்துவத்தை விளக்கிக்கொண்டிருந்தார். “உங்கள் உடலுக்கு என்று தினமும் ஒருமணி நேரமாவது ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள். அதற்கு தூக்கத்தை ஒரு மணி நேரம் தியாகம் செய்யுங்கள். உங்களை நம்பி இந்த திட்டத்தை துவக்குங்கள், உங்களால் சீக்கிரம் எழ முடியும்” என அனைவரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

    இந்த பேச்சைக் கேட்ட நண்பருக்குள் ஒரு பெரிய மாற்றம் வந்து, என்னால் சீக்கிரம் எழுந்து உடலுக்காக நேரம் ஒதுக்க முடியும் என உறுதியாக நம்பி அன்றிரவு படுக்கச் சென்றார். அவர் நம்பியது போலவே, அடுத்த நாள் ஒரு மணி நேரம் முன்கூட்டியே எழுந்து, உடற்பயிற்சியும் செய்யத் தொடங்கினார். ஒரு பத்து நாட்கள் இவ்வாறாக ஒடி இருந்தது.

    பத்து நாட்களுக்கு பின் அந்த நண்பர், அதே பேச்சாளரின் வேறொரு கூட்டத்தில் கலந்து அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் பேச்சாளரின் தலைப்பு “இந்த கால வாழ்க்கை முறை” என்பதை பற்றி இருந்தது. “இன்று நிறைய பேர், இரவு தாமதமாக உறங்கி, பின்னர் அடுத்த நாள் காலையிலும் தாமதமாகவே எழுந்திருக்கும் போக்கை கடைபிடிக்கின்றனர். சில இளைஞர்களிடம் தினமும் உங்களால் ஐந்து மணிக்கு எழுந்திருக்க முடியுமா என்று சவால் விட்டுப்பாருங்கள், அவர்களுள் பலர் முடியாது என்றே பதில் தருவர்” என முடித்தார்.

    இதைக் கேட்ட நண்பருக்கு அன்று இரவு தூங்க செல்கையில், நம்மால் தொடர்ந்து அதிகாலை சீக்கிரம் எழ முடியாதோ என்ற ஒரு சிறு சந்தேகம் எட்டிப்பார்த்தது. தொடர்ந்து பத்து நாட்களாய் ஐந்து மணிக்கெல்லாம் சட்டென்று விழித்த நண்பருக்கு அடுத்த நாள் தாமதமாக தான் எழ முடிந்தது.

    இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றை மட்டும் தான். என்னால் முடியுமா என்ற ஐயம் வந்து விட்டால், வெற்றி கடினம் தான். எனவே என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் உழைக்க தொடங்குவோம், இலக்கை அடைந்து சரித்திரம் படைப்போம்.
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    All the mails are simply superb.

    jayasala 42
     
    tljsk likes this.
  4. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Thanks Jayasala Ji.

    Looking for your contribution also in this thread.

    Share anything which is inspiring you.

    Regards
    Saravana
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice sharing :) .thanks !
     
    tljsk likes this.
  6. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Thanks @krishnaamma
     
  7. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Difference in FB and Whatsapp conversation...:sunglasses:
     

    Attached Files:

  8. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Unmai Enna...
     

    Attached Files:

  9. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    அபிராமிப்பட்டார் காட்டும் பதினாறு பேறுகள்

    பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன?

    பதினாறு பேறுகள்
    புகழ்
    கல்வி
    ஆற்றல்
    வெற்றி
    நன்மக்கள்
    பொன்
    நெல்
    அறிவு
    பெருமை
    ஆயுள்
    நல்லூழ்
    இளமை
    துணிவு
    நோயின்மை
    நுகர்ச்சி
    பொருள்.

    ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?

    அபிராமி அந்தாதி

    கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி! அபிராமியே!

    _அபிராமி பட்டர்

    அதன் விளக்கம் பின்வருமாறு:-

    1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

    2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)

    3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

    4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

    5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

    6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

    7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

    8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

    9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

    10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

    11.மாறாத வார்த்தை (வாய்மை)

    12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

    13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

    14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

    15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

    16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

    அன்னையை ,மனமுருகி வேண்டினால் அனைத்தையும் தருவாள்.இந்த பதினாறு பேறுகளையும் தரும்படி அன்னை அபிராமியை வேண்டுவோம்.
     
  10. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Over worked.

    Ha Ha.
     

    Attached Files:

Share This Page