1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாட்ஸ்ஆப் பதிவுகள்

Discussion in 'Posts in Regional Languages' started by tljsk, Jun 19, 2015.

  1. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    நண்பர்களே, உங்களை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த வாட்ஸ்ஆப் பதிவுகளை இங்கே பகிருங்கள்.

    தயவு செய்து யாரையும் புண்படுத்தும் மற்றும் ஆபாச கருத்துகளை இங்கே வெளியிட வேண்டாம்.

    உங்களின் பதிப்புகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். நன்றி.
     
  2. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    முதல் பதிவு:

    குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:


    நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.


    அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.


    பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.


    இதற்கு ஆகும் செலவு:


    5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000


    25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000


    கொட்டாய் செலவு : ரூ.10,000


    பாம்பு முட்டையை பொரிக்க


    உதவும் இன்குபேட்டர் : ரூ.60,000


    ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்


    வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.


    குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:


    குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.


    5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


    மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.


    கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.


    ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.


    தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:


    கோப்ரா கோபால்,


    1000/1 தண்டுமுட்டிப்பாளையம்,


    பெருந்துறை,


    ஈரோடு - 634717


    (ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)
     
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Irony of life:


    The lawyer hopes you get into trouble,
    The doctor hopes you get sick,
    The police hopes you become a criminal,
    The teacher hopes you are born stupid,
    The landlord hopes you don't buy a house,
    The dentist hopes your tooth decays,
    The mechanic hopes your car breaks down,
    The coffin maker wants you dead.........


    Only a thief wishes you "prosperity in life" and also wishes that "you have a sound sleep"
     
    1 person likes this.
  4. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    ஒரு ஊரில் வயதான முதியவர்
    ஒருவர் தன் பேரனுடன்
    வசித்து வந்தார். தினமும்
    அதிகாலையில் எழுந்து,
    சமையலறை மேஜை அருகில்
    அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம்.
    அனைத்து விஷயங்களிலும்
    அவரைப் பின்பற்ற நினைத்த
    பேரனும், கீதை படிக்க
    முற்பட்டான். ஒருநாள்
    தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும்
    பகவத் கீதை படிக்கிறேன்.
    ஆனால், எனக்கு அதன் அர்த்தம்
    விளங்கவில்லை; புரிந்த
    கொஞ்சமும், புத்தகத்தை
    மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி
    அதைப் படிப்பதால், எனக்கு
    என்ன பிரயோஜனம்? என்று
    கேட்டான். அடுப்பில்
    கரியைப்
    போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக்
    கரிக் கூடையைச்
    சிறுவனிடம் கொடுத்து,
    நதிக்குப் போய் இந்தக்
    கூடையில் நீர் கொண்டு வா
    என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு
    ஓடினான். ஆனால், மூங்கில்
    கூடையில் தண்ணீர் தங்குமா
    என்ன? அவன் வீடு
    திரும்புவதற்குள் தண்ணீர்
    முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே,
    நீ இன்னும் வேகமாக வர
    வேண்டும் என்று சொல்லி,
    மறுபடியும் அவனைத்
    தண்ணீர் எடுத்து வர
    அனுப்பினார். இந்த முறை சிறுவன்
    வேகமாக ஓடி வந்தான்;
    ஆனாலும், வீடு
    சேர்வதற்குள் கூடை
    காலியாகிவிட்டது.
    கூடையில் தண்ணீர் கொண்டு வருவது
    சாத்தியம் இல்லை என்று
    புரிந்துகொண்ட சிறுவன்,
    வாளி ஒன்றைக் கையில்
    எடுத்தான். ஆனால்
    தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம்.
    கூடையில்தான் வேண்டும்.
    நீ இன்னும் தீவிரமாக முயற்சி
    செய் என்று அவனை
    மறுபடியும் ஆற்றுக்கு
    அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர்
    கொண்டுவர முடியவில்லை.
    போங்க தாத்தா, இது பயனற்ற
    வீண் வேலை! என்றான்,
    மூச்சு வாங்கியபடி.
    அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ
    இதைப் பயனற்றது என்கிறாய்.
    ஆனால், கூடையைப் பார்,
    தெரியும் என்றார். பையன்
    கூடையைப் பார்த்தான்.
    முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக
    மாறியிருப்பதைக் கண்டான்.
    பழைய, கரி படிந்த கூடை,
    இப்போது உள்ளும் புறமும்
    சுத்தமாகிப் புத்தம்
    புதியது போல் காணப்பட்டது! தாத்தா
    சொன்னார்: குழந்தாய்! கீதை
    படிக்கும்போது இதுதான்
    நமக்கும் நேர்கிறது. உனக்கு
    அர்த்தம் புரியாமல்
    இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால்,
    நீ உள்ளும் புறமும்
    தூய்மையடைந்து
    முற்றிலும் புதிய
    மனிதனாகிவிடுவாய்! இது
    கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில்
    நிகழ்த்தும் அற்புதம்!
     
  5. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
    மனித உறவுகள் சீராக இருக்க
    a 2 z


    appreciation - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்


    behavior - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்


    compromise - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்


    depression - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்


    ego - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்


    forgive - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்


    genuineness - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்


    honesty - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
    கௌரவமாகக் கருதுங்கள்


    inferiority complex – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்


    jealousy - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.


    Kindness - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்


    loose talk - சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்


    misunderstanding - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்


    neutral - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்


    over expectation -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்


    patience - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்


    quietness -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக்
    காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை
    பேசாமலே இருந்துவிடுங்கள்


    roughness - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத
    மிடுக்கையும் காட்டாதீர்கள்


    stubbornness - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்

    twisting - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை
    இங்கேயும் சொல்வதை விடுங்கள்

    underestimate - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்


    voluntary -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
    காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும்
    காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்

    wound - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்

    xerox - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்

    yield - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்
    கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை


    zero - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும் .
     
  6. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    சென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் கும்பகோணத்தில் உள்ள நவகிரக ஸ்தலத்திற்கு செல்லமுடியமல் இருக்கலாம், அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு சென்று பயன் அடையலாம்.
    கும்பகோணம் போலவே, நமது மூதாதையரின் தொண்டை மண்டலம் அனைத்து நவகிரகங்கள் கோவில்களை கட்டினார்கள்.
    இங்கே நவக்கிரக கோவில்கள் பட்டியலில் உள்ளது.(சென்னை)
    1) சூரியன்
    ஞாயிறு (செங்குன்றம்) -- புஷ்பரதேஸ்வரா் சமேத சொர்ணாம்பிகை.
    கொளப்பாக்கம் (போரூர்) - அகஸ்தீஸ்வரர் சமேத ஆனந்த வள்ளி.
    2) சந்திரன்
    சோ(ழ)மங்களம் (தாம்பரம் )- சோமனாதீஸ்வரர் சமேத காமாட்சி
    3) செவ்வாய்
    பூந்தமல்லி - வைத்தீஸ்வரர் சமேத தையல் நாயகி.
    4) புதன்
    கோவூர் - சுந்தரேஸ்வரர் சமேத சௌந்தாம்பிகை.
    சைதாப்பேட்டை -- காரணீஸ்வரா் சமேத சொர்ணாம்பிகை.
    5) குரு
    பாடி -- திருவல்லீஸ்வரா் சமேத ஜெகதாம்பிகை.
    போரூர் - ராமநாதீஸ்வரா் சமேத சிவகாமசுந்தரி.
    6) சுக்கிரன்
    மயிலாப்பூர் -- வெள்ளீஸ்வரா் சமேத காமாட்சி
    மாங்காடு - வெள்ளீஸ்வரர்
    7) சனி
    பொழிச்சலூர் - அகஸ்தீஸ்வரர் சமேத ஆனந்த வள்ளி.
    8) ராகு
    குன்றத்தூர் - நாகேஸ்வரர் சமேத காமாட்சி.
    9) கேது
    கெருகம்பாக்கம் - நீலகண்டேஸ்வரர் சமேத ஆதிகாமாட்சி.
    பொதுவாக கும்பகோணத்தில் உள்ள நவகிரக ஸ்தலத்திற்கு வருடம் ஒரு முறையாவது அல்லது அதிகபட்சமாக மூன்று வருடத்திற்கு ஒரு முறையாவது சென்றுவர வேண்டும், அங்கு செல்ல முடியாதவர் இங்கு மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்.
    அதிலும் தங்கள் ஜாதகத்தில் மறைவு ஸ்தானதிபாதி மற்றும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்த கிரகங்கள் மட்டுமாவது மாதம் ஒரு முறை சென்றுவர எவ்வித பிரச்சனைகள் இருந்தாலும் படி படியாக குறைந்து வாழ்வில் மேன்மை பெறலாம். தொடர்ச்சியாக சென்றுவர சகல தோஷங்களையும் நீங்கும்.
     
  7. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    எங்கே சொர்க்கம் ......???

    குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

    என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.

    என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.

    என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

    புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

    ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

    தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.

    அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

    உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

    அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

    அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

    இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.

    நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

    *உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.

    உலகம் உனக்கு சொர்க்கமாகும்.....!!!* என்றார் குரு.

    :hello: படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன் .......!!! :hello:
     
  8. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    “ஒரு வேலை ஆரம்பிக்கு முன்எத்தனை முறை வேண்டுமானாலும், இதுஎன்னால்முடியுமா, முடியாதா என்று யோசிக்கலாம்; ஆனால்முடியும்என்று தீர்மானித்த பின், இது என்னால்முடியுமா என்ற சந்தேகம்என்றுமே தங்களுக்கு வந்ததில்லை”
     

Share This Page