1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாட்ஸப்பிலிருந்து வைபருக்கு தாவுதல்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Nov 23, 2014.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    வாட்ஸப்பிலிருந்து வைபருக்கு தாவுதல்




    வாட்ஸப்பில் மெசேஜ் பரிமாற்றம்
    செய்துகொண்டிருக்கும்போது வந்தது
    ஒரு அலைபேசி அழைப்பு.
    மெசேஜ் பரிமாற்றம் பாதியில் அறுந்து
    விழுந்தது.
    அழைத்திருந்தவர் வீட்டு எண் சரிபார்த்து
    ப்ளிப்கார்ட்டிலிருந்து பார்சல் வந்திருப்பதாக*
    தெரிவித்தார்.
    வீட்டிற்கு வரும் வழியை அவருக்கு
    சொல்லி முடிக்க பத்து நிமிடம் ஆனது.
    அந்த அழைப்பின் மொத்த நிமிடங்கள்
    பன்னிரண்டு நிமிடம் ஏழு நொடி என்றது
    செல்திரை.
    மீண்டும் வாட்ஸப்பிற்குள் நுழைந்து
    பார்த்தபோது மொத்தம் 37 மெசேஜ்கள்
    படிக்கப்படாமலிருந்தது.
    ஒவ்வொன்றாக படித்து 37வது மெசேஜுக்கு
    வந்தவன் திகைத்தான்.
    அதுவொரு நட்பு முறிவுக்கான கடைசிச்சொல்.
    புரிதலின் பிழை அல்ல*
    பொறுமையின்மையின் பிழை என்றுணர்ந்தவன்
    தலையில் அடித்துக்கொள்ளாமல்
    வாட்சஸப்பிலிருந்து தற்காலிகமாக*
    வைபருக்கு தாவிச் சென்று மறைந்தான்.



    தங்கைவேடமிட்டவள்


    இரண்டாம் ஆட்டம் முடிந்து
    வீடு திரும்பும் வழியில் அவன் பின்னாலேயே
    வந்தாள் அத்திரைப்படத்தில் தங்கை வேடமிட்டவள்.
    இருட்டு தனக்குப் பின்
    நடந்துவருகிறதே என்று வியந்தபடி
    வேகமாக நடக்கத்துவங்கியவன்
    மூன்றாவது தெருவை கடக்கும்போதுதான்
    இருட்டுக்கு கொலுசொலி எழுப்பவும் தெரியும்போல*
    என்று நினைத்துக்கொண்டான்.
    தங்கை வேடமிட்டவள் ஓடிவந்து
    அவனைப் பின்புறமாக கட்டிக்கொண்டாள்.
    அசைவற்று நின்றவன் சற்றும் பயமின்றி
    '"தங்கச்சிம்மா நீ வருவேன்னு தெரியும்மா'' என்று
    திரும்பாமலே சொன்னதைக் கேட்டு
    தங்கைவேடமிட்டவள் வெடுக்கென்று விலகி
    இருளில் மறைந்தாள்.
    நம் நாயகனுக்கு நாயகியைத்தானே
    பிடிக்கும் தங்கையே
    அன்புத் தங்கையே!


    பெளன்ஸ்ஸர்




    முதல் நான்கு பந்துகளும் மட்டையில்
    படவில்லை.
    ஐந்தாவது பந்து வலதுகண்ணில் பட்டுவிட்டது.
    ஆயிரத்தி நாற்பத்தொன்று முத்தங்களை
    பெற்ற வலதுகண்ணாயிற்றே.
    அவனுக்கு இப்போது இடதுகண் துடித்தது.
    ஆறாவது பந்தில் மட்டையை சுழற்றினான்
    மைதானத்திற்கு வெளியே இருக்கும்
    உடைமரக்காட்டில் விழுந்தது பந்து.
    வலது கண்ணை தடவிக்கொண்டே
    பைக்கில் ஏறினான்.
    வண்டி அவளது வீட்டில் நின்றது.
    ஓடோடி வந்தவள் நாற்பத்தி இரண்டாவது
    முத்தத்தை எடுத்துவந்து '"வலிக்குதுங்களா'" என்கிறாள்
    அந்த ஏழாவது பந்தில்தான் எப்போதும்
    வீழ்கிறான்.
    அதுவும் எப்போதும் அந்த
    முத்த பெளன்ஸ்ஸரில்.



    லிப் டு லிப்ட்




    லிப்ட் கதவு மூடிய மறு கணம்
    துப்பாக்கிகளை கீழே விட்டுவிட்டு
    இதழோடு இதழ் பதிக்கும் காட்சியொன்றை
    ஆங்கிலத்திரைப்படத்தில்தான் முதன்முதலாய்
    பார்த்துச் சிலிர்த்தான் குட்டன்சாமி.
    அந்த முத்தம்
    அவனைத் தூங்கவிடாமல் கிறுகிறுக்கவைத்தது.
    விரட்டி விரட்டி அடித்துச் சிதைத்தது.
    பெரு உருவெடுத்து கனவில் துரத்தியது.
    ஜிம்மி நாயாகி உடன் வாலாட்டி வந்தது.
    அபூர்வ மலராகி ஓயாமல் மணத்தால் அடித்தது.
    கடைசிவரை,
    அப்படியொரு முத்தம் கிடைக்காமலே
    செத்துப்போனான் குட்டன்சாமி.
    ஒரு முறை லிப்டிலாவது பயணித்துவிடவேண்டும்
    என்று முணுமுணுத்தபடி கடந்துசென்ற*
    குட்டி ஆன்மாவொன்[FONT=arial, sans-serif]றை
    நேற்றுப் பார்த்தேன்.


    -நிலாரசிகன்.
    [/FONT]
     
    1 person likes this.
  2. lazy

    lazy Silver IL'ite

    Messages:
    234
    Likes Received:
    104
    Trophy Points:
    93
    Gender:
    Female
    anaaithum aarumai :wow
     
    1 person likes this.

Share This Page