வலை கொலை-தமிழ் “ஐயா வணக்கம்." "வணக்கம். சொல்லுங்க." "அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?" "அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?" "நேற்றுதான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன். இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்." "நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது தொலைவரி (Telegram) தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். இயங்கலை (Online) மூலம் பங்கேற்கலாமா ?" "சரி ஐயா. காயலை (Skype) மூலம் பேசுங்கள். நாங்கள் ஒளிவீச்சி (Projector) மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பி க்கிறோம்." "மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் தடங்காட்டி (GPS) உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்." "பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் படவரி (Instagram) மூலமும், கீச்சகம் (Twitter) மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்." "நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் அருகலை (WiFi) வசதி இருக்கிறதா?" "இல்லை ஐயா. எனது இன்னொரு திறன்பேசி (Smart Phone) மூலம் பகிரலை (Hotspot) உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் ஆலலை (Broadband) இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?" "இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை." "உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, வலையொளி (Youtube) மூலமும், முகநூல் (Facebook) மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை வன்தட்டில் (Hard Disk) சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு முடக்கலை (Offline) யிலும் கண்டு களிக்கலாம்." "மிக்க நன்றி WeChat - அளாவி Bluetooth - ஊடலை Thumbdrive - விரலி cctv - மறைகாணி OCR - எழுத்துணரி LED - ஒளிர்விமுனை 3D - முத்திரட்சி 2D - இருதிரட்சி Printer - அச்சுப்பொறி Scanner - வருடி Simcard - செறிவட்டை Charger - மின்னூக்கி Digital - எண்மின் Cyber - மின்வெளி Router - திசைவி Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு Thumbnail சிறுபடம் Meme - போன்மி Print Screen - திரைப் பிடிப்பு Inkjet - மைவீச்சு Laser - சீரொளி தமிழே வாழ்க...