1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வரம் வேண்டும்

Discussion in 'Regional Poetry' started by ganges, Apr 4, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அம்மா நீ ஒரு கல் தூண்
    அப்பாவின் மரணம் உன்னை கல்லாகத்தான் மாற்றியிருந்தது
    காலையில் இருந்து இரவு படுக்கும் வரை
    நீ சுமந்த பொறுப்புகள் எத்தனை
    எங்கள் பின் தூங்கி முன் எழுந்த உனக்கு
    என்ன வேண்டும் என்று யாரும் நினைத்ததில்லையே
    அன்றாட சுமைகள் என்றில்லாமல்
    எங்கள் படிப்பு, திருமணம், மகப்பேறு
    என்று அத்தனைக்கும் பொறுப்பு ஏற்றாயே
    நீ நோய்வாய்பட்ட அந்த மூன்று வருடங்களை தவிர
    நீ படுத்து நாங்கள் பார்த்தது கூட இல்லையே
    உன்னை திரும்ப பெற ஏதாவது வரம் கிடைத்தால்
    அம்மா ! உன்னை நான் உன்னை மாதிரி கவனித்து கொள்வேன்.

     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Ganges, what more can a daughter say to a mother.... my eyes are full..... true ganges.... i dont have words to say.....
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    thank you sandhya for the first fb. Today I dont know, I was thinking a lot about my mom. so came my feelings.


    ganges
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கங்கா!!
    என்ன சொல்வது என்றே தெரியவில்லை உங்கள் கவிதை உயிரை உருக்கியது!!!
    என்ன ஒரு அனுபவம் உங்கள் கவிதையில்!!!
    உயிரை தொடும் அழகிய கவிதை கங்கா பாராட்டுக்கள்!!!
    கண்களில் நீருடன் யாமினி!!
     
  5. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Oh Ganges, Very very touching. What a way of conveying. Loved it.
    Meenakshi
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear yams '

    thank you for the touching words dear.


    ganges
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear Meenakshi

    Thank you for the fb friend.


    ganges
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என்ன அருமையான தருணம் இதை வாசிப்பதற்கு, உங்கள் வரிகள் ஒவ்வொன்றிலும் நீங்கள் உங்கள் தாய் மேல் வைத்திருக்கும் பாசம் திரை இடப்படாமலே தெளிவாக தெரிகிறது. சில விஷயங்கள் மட்டும் தான் கேட்டாலோ அல்லது பார்த்தாலோ அல்லது படித்தாலோ நம் உடல் சிலிர்க்கும் உங்கள் கவிதை என் உடலை அவ்வாறு சிலிர்க்க வைத்து விட்டது .
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தன் உயிரை தனமாய்த் தன் பிள்ளைக்கு
    வரம் கொடுத்தத் தாயின் குணம்
    அம்மாவிற்கு "அம்மாவை"யே வரம்
    கொடுக்க நினைக்கும் பிள்ளையின் மனம்
    வரம் கொடுத்தால்,வரம் கிடைத்தால்
    இருவருமே வாழ்வின் ஸ்வரம்!!!


    கங்கையில் மூழ்கினால் வரம் மட்டுமல்ல
    புண்ணியமும் கிடைக்கும்.
    பெற்றுகொண்டேன் தோழி உங்கள் கவி வடிவில், கனத்த மனதுடன்
     
    Last edited: Apr 5, 2010
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கங்கா, அன்னையின் அருமை, உங்கள்
    கவிதையில் தெரியுது அவளின் பெருமை.

    அன்னையே நீ என்,
    மகளாய்ப் பிறந்திட வேண்டும்,
    நீ கொடுத்த அன்பின் சிறு பகுதியை,
    நான் உனக்கு கொடுத்திட வேண்டும்,
    நம் உறவு வரும் பிறவிகளிலும் தொடர வேண்டும்,
    அந்த வரம் கொடு தாயே, வேண்டுகிறேன் உன் சேயே.
     

Share This Page