1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வயசு...வயோதிகம்...story By Krishnaamma :)

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 31, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வயசு...வயோதிகம்...

    அந்த அபார்ட்மெண்ட் இல் மொத்தம் 32 வீடுகள் இருந்தன.
    ஓரளவிற்கு எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதில் ஒரேயொரு வீடு மட்டும் வெகு நாட்களாக யாரும் வாங்காமல் இருந்தது. இப்படி இருக்கும் பொழுது, ஒருநாள் அந்த வீட்டிற்கும் ஆள் வந்தது எல்லோரையும் மகிழ்ச்சி இல் ஆழ்த்தியது.

    அஸோஸோயேஷன் செக்ரெட்டரி சொன்னார், ஒரு வயதானவர் வாங்கி உள்ளார் என்றும், ஒரு நல்ல நாளில் அவர்கள் வரப்போகிறார்கள் என்றும் சொன்னார். எல்லோருக்குமே ஒரு வித குறு குறுப்பு யார் வருகிறார்கள், நாம் தான் அவர்களிடம் முதலில் நண்பராக ஆகணும், அவர்களுக்கு தேவையானதை செய்யவேண்டும் என்று. இது இயற்கை தானே.

    இவர்கள் ஆர்வமுடன் காத்திருந்த அந்த நாளும் வந்தது. கிருஹப்பிரவேசம் என்றல்லாம் எதுவும் செய்யாமல் ஜஸ்ட் பாலை காய்ச்சிவிட்டு வந்துவிட்டார்கள். வந்தது இரண்டே பேர் தான். ஒரு வயதானவரும் ஒரு இளம் பெண்ணும். பார்த்தவர்கள் சொன்னார்கள்.

    சரி நம்மிடம் ஏதாவது கேட்பார்கள் என்று இருந்தவர்களுக்கு ஏமாற்றமே. அவர்கள் எதற்காகவும் யாரையும் எதிர் பார்க்கவில்லை. சாமான்களையும் பொறுமையாக அவர்களே அடுக்கி வைத்துக் கொண்டார்கள். அந்தப் பெண் வெளியே வரவே ஒரு வாரம் ஆனது. கீழே பார்க்கில் அவளை பார்த்தவர்கள் சொன்னார்கள்.

    விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். யாரோ ஒரு மாமி சிரித்துவிட்டு அவளிடம் பேச்சுக்கு கொடுத்தாள் . உன் பெயர் என்ன , வீடு பிடித்திருக்கிறதா என்று கேட்டாள்.

    அதற்கு அவள் சிநேகமாய் சிரித்தாள். அவள் பெயர் காமாட்சி என்று சொன்னாள். வீடு பிடித்திருப்பதாகவும் சொன்னாள் . இவள் உடனே அவ்வப்பொழுது வெளியே வாருங்கள் எல்லோருடனும் கலந்து பழகுங்கள் என்றாள் மாமி. அதற்கு அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள் . மேற்கொண்டு ஏதும் பேச்சை வளர்க்காமல் போகவேண்டும் போல எழுந்து கொண்டாள் . இந்த மாமிக்கு அவளை விட மனம் இல்லை என்றாலும் சிரித்து தலையாட்டி வழிஅனுப்பிவிட்டாள்.
     
    Last edited: Jul 31, 2020
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இவள் முட்டியை பிடித்துக் கொண்டு எழுந்தாள் . மெல்ல நடந்தாள் . அதைப்பார்த்த மாமிக்கு மிக ஆச்சர்யம் ஒரு சின்னப் பெண் இப்படியா நடப்பாள் என்று. சரி ஏதோ கால் வலி போல் இருக்கிறது , வீடு மாற்றி வந்து வேலை அதிகம் என்று எண்ணிக்கொண்டாள் . ஆஹா இவள் வேலைக்கு போகிறாளா, இவள் அப்பா என்ன செய்கிறார் என்றெல்லாம் கேட்கவே இலையே என்று ஆதங்கப் பட்டாள் . சரி எங்கே போகப்போகிறாள், பிறகு விசாரிக்கலாம் என்று அவளும் தன் நடை பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பினாள்.


    அடுத்த நாளே எல்லோரிடமும் தான் அந்த புது வீட்டுப் பெண்ணைப் பார்த்ததை பற்றி சொல்லிக்கொண்டாள். என்ன ஒரு கர்நாடகப் பெயர் என்றும் இந்த நாளில் இப்படி யார் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். இன்று பார்த்தால் அவள், அது தான் காமாட்சி காலை இல் தோளில் ஹேண்டு பாக் சகிதம் வெளியே புறப்பட்டாள்.


    வேலைக்கு போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள். அவள் சாயங்காலம் வரும்பொழுது ஏதோ பை நிறைய வாங்கி வந்திருந்தாள் . தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். அந்த நேரம் பார்த்து லிப்ட் வேலை செய்ய வில்லை. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு படியேறத் துவங்கினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த செக்ரெட்டரி 'பையை வைத்து விட்டு போம்மா, யாரிடமாவது கொடுத்து அனுப்புகிறேன்' என்று கனிவாக சொன்னார்.


    அவள் முதலில் கொஞ்சம் தயங்கினாள். பிறகு நிஜமாகவே அவளால் அவைகளைத் தூக்கிக்கொண்டு 3 மாடி ஏற முடியாது என்று தோன்றியது. எனவே, அவருக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு. பையை ஆபீஸ் ரூம் இல் வைத்து விட்டு படியேறினாள் . அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.


    வீட்டுக்கு உள்ளே வந்ததுமே அந்த பெரியவர், 'எதுக்கு காமு இப்படி கஷ்டப்படற, வாலயன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்க லாம் தானே, சொன்னால் கேட்காமல் இப்படி அலைகிறாய். உடம்பு என்னத்துக்கு ஆகும் சொல்லு' என்று அன்பாகக் கேட்டவாறே அவள் பருக தண்ணீர் கொடுத்தார்.


    'போறாததற்கு , காலை இல் கிளம்பும் பொழுது ஒரு பெரிய லிஸ்ட் எடுத்துக் கொண்டு போனாயே, எதுவும் வாங்கி வரவில்லையா' என்று நகைத்துக் கொண்டே கேட்டார்.

    ..................
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ‘உங்களுக்கு என்னைப்பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது, வாலயன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்க லாம் தான், அப்புறம் வீட்டில் உட்க்கார்ந்து கொண்டு என்ன செய்வது?.... நீங்க பாட்டுக்கு படமா போட்டு தள்ளுவீர்கள்...நான்?' என்று கேட்டாள் .

    ‘சரி சரி கோபித்துக் கொள்ளாதே காமு, என் செல்லமாச்சே, போ, போய் கை கால் அலம்பிக்கொண்டு வா, சூடா காபி போட்டுத்தருகிறேன்' என்று அன்பாக சொன்னார்.


    'ம்ம், என்றவாறு எழுந்தவள், உங்களுக்கு பிடித்த அந்த டுவிஸ்ட் பிஸ்கெட் வாங்கி வந்தேன்' என்று சொல்லிக்கொண்டே போனவள் 'அடாடா, பையை கீழேயே வைத்து விட்டு வந்துவிட்டேன்' என்று சொன்னாள் .


    'என்ன கீழே வைத்து விட்டு வந்து விட்டாயா?" என்றார். இவளும் நடந்ததைச் சொன்னாள். 'சரி போகட்டும் , ஏற்கனவே உள்ளதை சாப்பிடுவோம், நீ போய் கை கால் அலம்பிக்கொண்டு வா, சூடா காபி போட்டுத்தருகிறேன்' என்று மீண்டும் சொன்னார்.


    'அதில் ராத்திரிக்கு வேண்டும் என்று வாங்கி வந்த தோசை மாவும் இருக்கு' என்று சொல்லியபடியே எழுந்து சென்றாள் அவள் . அவள் கை கால் அலம்பவும் இவர் காபி போடவும் எழுந்து உள்ளே போனார்கள். முகம் அலம்பி வெளியே வந்தவள், தேதி காலண்டரைப் பார்த்து புன்முறுவல் கொண்டாள் . ஆச்சு இன்னும் இரண்டு வாரங்கள் தான், அப்புறம் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள், இந்த வீடு முழுவதும் மகிழ்ச்சி நிரம்பும் என்று எண்ணிக்கொண்டாள் .


    அதற்குள்வாசலில்பெல்சப்தம்கேட்டது. சரியாரோநம்சாமானைக்கொண்டுவந்துவிட்டார்கள்என்றுஎண்ணிக்க்கொண்டேவாசலுக்குவிரைந்தாள். ஆம்அவள்நினைத்ததுசரிதான், யாரோஒருயுவன், இவளின்சாமான்களைஎடுத்துக்கொண்டுவந்திருந்தான். செக்ரெட்டரிகொடுக்கச்சொன்னார்என்றுசொல்லிபையைகொடுத்தான்.

    ...................
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இவளைத்தாண்டி உள்ளே பார்த்தான். ' என் பெயர் விமல், நான் எதிர் பிளாட் இல் தான் இருக்கிறேன். உங்க பிளாட் உங்களைப்போலவே மிக அழகாக இருக்கு என்று வழிந்தான். நீங்க எங்கே வேலை செய்கிறீர்கள்? நான் US கம்பெனிக்காக வேலை செய்கிறேன், அல்மோஸ்ட் work from home, எனக்கு சுத்தி வளைத்து பேசத்தெரியாது, அது தான் . உங்களை பார்த்த அன்றே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, எலிஜிபிள் பாச்சுலர், நீங்க சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் உங்கள் அப்பாவிடம் கேப்பேன். ... எங்கே உங்க அப்பா வீட்டில் தானே இருக்கிறார்' என்று மூச்சு விடாமல் கேட்டான். அவள் அவனையே வெறிக்கப் பார்த்தாள். யு டூ புரூட்டஸ் என்பது போல. பிறகு மந்திரம்போல சில வார்த்தைகளை உதிர்த்தாள்.. வார்த்தைகளா அவை கனல் துண்டங்கள் போல இருந்தன அவனுக்கு.


    அவள் சொன்ன பதிலால் அதிர்ந்து போனான். அவளை ஏற இறங்கப் பார்த்தான் . சரேலென்று எதிரில் இருந்த தன் பிளாட்டுக்கு போய் ,

    டமார் என்று கதவை சார்த்திக் கொண்டான்.

    இவள் மிகக்கோபமாக தன்னைத்தானே நொந்தவாறு உள்ளே வந்தாள் .

    இது எதுவும் தெரியாத பெரியவர்,'காமு, இந்த காபி.. வாசலில் யாரு, அட பிரெஷ் பிஸ்கெட் சாப்பிடலாம் , எடு எடு' என்றார். பிறகு தான் இவளின் முகத்தைப் பார்த்தார். ஏன், என்ன ஆச்சு?' என்றார்.

    அவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது... ' பிரச்சனை இங்கும் ஆரம்பித்து விட்டது, நாமாக போய் யாரிடமும் ஈஷி க்கொள்ளாவிட்டாலும் அவர்களாகவே வந்து தொந்தரவு செய்கிறார்கள். இங்கு வந்தும் என் நிலை மாறவில்லை’ என்று துக்கமாக சொன்னாள் .

    .....................
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    'அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு அந்த பெரியவர், இதற்குத்தானே நாம் கிரஹபிரேவேசம் கூட செய்யவில்லை, இன்னும் 2 வாரங்கள் தான். குழந்தைகள் வந்ததும் என் சஷ்டியப்த பூர்த்தியை விமரிசையாக கொண்டாடப்போகிறோம், அதை நினைத்து , அந்த வேலைகளில் உன்னை ஈடுபடுத்திக் கொள்.மேலும், நீ தான் அவனுக்கு உண்மையை சொல்லிவிட்டாயே இனி தொல்லை இருக்காது. அவன் அதை சொல்லாமல் இருக்க மாட்டான், அதைக் கேட்டதும் எல்லோருக்கும்எல்லா குழப்பமும் போய்விடும். வம்புக்கு அலைபவர்கள் ,இது தான் என்று தெரிந்து விட்டால், சிலநாட்கள் பேசுவார்கள், பிறகு விட்டு விடுவார்கள்..எனவே, நீ கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உனக்குத்தான் BP ஏறும். சரியா? "என்று சொன்னார்.


    'உனக்கு கஷ்டமாய் இருந்தால் சொல்லு, இப்பொழுதே போய் செக்ரெட்டரி இடம் சொல்லி, எல்லோரையும் ஒரு மீட்டிங் என்று அழைத்து உண்மையை சொல்வோம் என்றார். எனக்கு நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் காமு என்றார். அவளும் கண்ணீரினூடே தலையை ஆட்டினாள்.


    ‘வேண்டுமானால் லீவு போட்டுவிட்டேன்' என்றும் சொன்னார். 'இல்லை இல்லை அது சரிவராது, குழந்தைகள் வந்ததும் போட்டாலாவது ஜாலியாக இருக்கும் என்றாள்.


    அந்தப் பெரியவர் சொன்னது போல அவன் சும்மா இல்லை, சில மணித்துளிகளில் அவள் சொன்ன வார்த்தைகள் அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க பரவி விட்டது.

    அவள் அவனிடம் அப்படியென்ன சொன்னால் என்று தானே யோசிக்கிறீர்கள்..அவள் சொன்னாள் , 'நான் அவர் மகளல்ல மனைவி' என்று.


    பலவித விமரிசனங்கள் எழுந்தன.

    .................
     
    Last edited: Jul 31, 2020
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    'அதான் அவ பார்வையே சரி இல்லை'...'நினைத்தேன் இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாக இருக்கும் என்று'...'எந்தப்புத்தில் எந்த பாம்போ'...'நல்ல காலம் அவளுக்கே இது அசிங்கமாய் இருந்திருக்கும் அது தான் யாருடனும் அவ பழங்கலை '...இப்படியாக நீண்டது அந்த விமரிசனங்கள். கன்னிப்பெண்களை தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தங்கள் மகளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவளா பேசினால் கூட நீங்க பேசக்கூடாது என்று. சிலர் ஒரு படி மேலே போய் , செக்ரெட்டரி இடம், ' நீங்க தான் ஏதாவது ஒரு வழி செய்யவேண்டும் இதற்கு' என்றார்கள். அவர் நான் என்ன செய்யமுடியும், அவர்களும் உங்க ளை ப் போல ஒரு ஓனர் ..என்னால் ஏதும் ஆகாது, அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள், இந்தக்காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிவிட்டார்.


    இது ஏதும் அறியாத அவள் மறுநாள் காலை ஆபீஸ்க்கு கிளம்பினாள். எதிரே பார்த்து புன்னகைத்தவர்கள் கூட இன்று முகத்தை திருப்பிக் கொண்டனர். இது அவளுக்கு சகஜம் தான் என்றாலும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முகத்தைதிருப்பிக்கொண்டவர்கள்பெண்கள்தான். ஆனால்ஆண்களின்போக்குவேறுவிதமாகஇருந்தது, வலியவந்துவழிந்தார்கள். இவளுக்குத்தர்மசங்கடமாகஇருந்ததுஎன்றாலும்சகித்துக்கொள்ளத்தான்வேண்டும். அவர்சொன்னதுபோலஇன்னும்இரண்டுவாரங்கள்தானேஎன்றுதன்னைத்தானேசமாதனப்படுத்திக்ககொண்டாள்.அவர் சொன்னது போல இன்னும் இரண்டு வாரங்கள் தானே என்று தன்னைத்தானே சமாதனப் படுத்திக்க கொண்டாள்.

    அடுத்தடுத்த ஏற்பாட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டா ள் . அந்த அபார்ட்மெண்ட் இல் இருந்த கிளப் ஹவுஸ் ஐ 2 நாட்களுக்கு புக் செய்து கொண்டாள். செக்ரெட்டரி இன் உதவியுடன் மொத்தம் அங்கு எத்தனை பேர் உள்ளார்கள் என்று தெரிந்து கொண்டாள் . அதற்கு ஏற்ப உணவு மட்டும் கிபிட் ஐட்டம்கள் ஆர்டர் செய்தாள். ஆச்சு நாளை முதல் ஒவ்வொருவராக வந்து விடுவார்கள் என்று எண்ணும்பொழுதே அவளுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

    காலை இல் முதலில் வரும் தன் சின்ன மகளுக்கு பிடித்ததை சமைக்கும்படி பெரியவர் சொன்னார்.


    'அவளும் சந்தோஷமாய் அலுத்துக்கொண்டே, நீங்க எனக்கு சொல்ல ணு மா எனக்கு தெரியாது பாரு' என்றாள். மறுநாள் ஏர்போர்ட்டுக்கு போய் சின்ன மகள் தீபா, அவள் வீட்டுக்காரர் ராம் மற்றும் பேத்தி சுபாவை அழைத்து வந்தார்கள். வரும் வழி பூராவும் சுபா திறந்த வாயை மூடவில்லை . காமாட்சியும் அவள் கேட்டதற்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தாள். பெரியவர் சிவசா மியை விட காமாட்சிஇடம் அவள் அதிகமாய் ஒட்டிக் கொண்டாள் .

    ...............
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதற்கு மறுநாளே மகன் சுரேஷ், மட்டுப் பெண் சுபா மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகள் கமலேஷ் காமேஷ் வந்து சேர்ந்தார்கள். அதற்கும் மறுநாள் பெரிய பெண் வந்தாள். அவள் ஒரே மகன் அமெரிக்காவில் படிக்கிறான்.கணவர் பொறுப்பான மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறார். 60 ம் கல்யாணத்துக்கு முன் தினம் வந்து விடுவதாக சொல்லி இருக்கிறார்.


    இவர்கள் இருவரும் மட்டும் இருந்த பொழுது மிகவும் பெரியதாகத் தெரிந்த அந்த 4 பெட் ரூம் பிளாட் போதவில்லை போல இருந்தது இன்று. வேளா வேளைக்கு எல்லோருக்கும் வித விதமாய் சமைத்து போட்டு மகிழ்ந்தாள் காமாட்சி. குழந்தைகள் எல்லோரும் வரப்போகிறார்கள் என்று பாரிஜாராகரிடம் முன்கூட்டியே சொல்லி, வித விதமான பட்ஷணங்கள் செய்து வைத்திருந்தாள். எல்லோருமாக ஒருநாள் வெளியே சென்று சாப்பிட்டார்கள். குழந்தைகள் பீஸாவுக்காக அடம் பிடித்தார்கள்.


    60ம் கல்யாண ஏற்படுகளை கவனித்தார்கள். இந்த கல்யாணத்துக்கு கூட வருபவர்களுக்கு மருதாணி வைத்துவிட, குழந்தைகளுக்கு பாப் கார்ன், பஞ்சுமிட்டாய் ஸ்டால் வேண்டும் என்று கேட்டார்கள் குழந்தைகள். அதற்கும் காமாட்சி ஏற்பாடு செய்தாள். இவர்கள் அனைவரின் அந்நியோன்னியத்தைப் பார்த்தவர்கள் வியந்தார்கள்.


    60ம் கல்யாணத்திற்கு இன்றும் 4 நாட்கள் இருந்தன. 60ம் கல்யாணத்துக்கு எல்லோரையும் அழைக்க வேண்டும். முடிந்தால் முதல் நாள் நடக்க இருக்கும் பெருமாள் சமாராதனைக்கும் அழைக்க வேண்டும். எல்லோரும் வருவார்களா என்று தெரியவில்லை. தவறாமல் அவர்கள் வரவேண்டும் என்றால், என்ன செய்வது என்று யோசித்த காமாட்சி, மருமகளையும் பெரிய பெண்ணையும் கூப்பிட்டாள். நீங்கள் இருவரும், எண்ணெய் சீக்கா , குங்கும சிமிழ் எடுத்துக் கொண்டு எல்லோர் வீட்டுக்கும் போய், நாளை மறுநாள் நடக்க இருக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு பொண்டுகளாய் வரும்படி அழைத்து விட்டு வாருங்கள், இதை அவர்களால் தட்ட முடியாது . இவர்கள் அன்று இங்கு வந்து விட்டால், மறுநாளும் கல்யாணத்துக்கும் ஆண்கள் குழந்தைகள் என எல்லோரும் வந்து விடுவார்கள் என்று சொன்னாள். இது மிகவும் சரியாகப் பட்டது அவர்களுக்கு.

    .............
     
    Last edited: Jul 31, 2020
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எல்லோரின் வீடுகளுக்கும் சென்று அழைத்து விட்டு வந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொன்னதால், அதை எந்த வீட்டுப் பெண்ணாலும் தட்ட முடியவில்லை. எல்லோரும் வந்தார்கள். வந்தவர்களை சிறப்பாக வரவேற்றனர் இந்த வீட்டுப் பெண்கள். எல்லோரும் வந்ததும், காமாட்சி வந்து பேசத்துவங்கினாள்.


    என் அழைப்பு க்கு மதிப்பே கொடுத்து இங்கு வந்ததற்கு ரொம்ப ரொமப் நன்றி. ரொம்ப சந்தோஷம். உங்கள் எல்லோரின் மனத்தில் இருக்கும் சந்தேகத்துக்கு முதலில் நான் பதில் சொல்லி விடுகிறேன். எல்லாம் என் தலை எழுத்து என்று சொல்லியவாறே கண் கலங்கினாள். உடனே சின்னப்ப பெண் , 'அம்மா, ப்ளீஸ் ..' என்று தோளைத்தட்டிக் கொடுத்தாள்.


    கொஞ்சம் சுதாதரித்துக் கொண்டு தொடர்ந்தாள் காமாட்சி....எனக்கு , எனக்கு, 58 வயதாகிறது என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டாள். எல்லோருக்கும் அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது..ஏக குரலில் என்ன? என்று கேட்டார்கள். ஆமாம், நான் இளம் பெண் இல்லை, இவரின் 2ம் தாரமும் இல்லை. நான் பெற்றவர்கள் தான் இந்தப் பெண்களும் இந்தப் பிள்ளையும்.என்று கொஞ்சம் நிறுத்தினாள். நான் எப்பொழுதும் 27 -28 வயது பெண்ணாகத்தான் காட்ச்சியளிப்பேன்,வெளி இல் உள்ளவர்களுக்கு, ஆனால் எனக்கு என் வயதுக்கு உண்டான, மூப்பு முடியாமல் போவது வியாதி எல்லாம் உண்டு. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா, எனக்கு அப்படி ஒரு வியாதி . என்னடி பேர் அதற்கு என்று பெண்ணைக் கேட்டாள் காமாட்சி மாமி.


    'ANTI AGING DEFICIENCY அம்மா.'.. ம்ம்.. அதுதான்... என்று அந்த வியாதிக்கு பெயர். இதனால் நான் படும் துன்பம் கொஞ்சம் இல்லை....பார்க்கும் இளவயதுக்காரர்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்பார்கள். பஸ் இல் போனால் இடிப்பார்கள்... மீறி எனக்கு கல்யாணம் ஆனது தெரிந்தால், நான் கிழவரைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவதாக அவர்களாகவே நினைத்துக் கொண்டு என்னிடம் வழிவார்கள் என்று சொல்லி அழுதாள் மாமி.


    எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகிப் போனது. முதலில் சுதாரித்துக் கொண்டவள் லலிதா மாமி தான். ஓடிப்போய் காமாட்சி மாமியை அனைத்துக் கொண்டாள். 'மன்னிச்சுக்கோங்கோ மாமி, உண்மை தெரியாமல் உங்களை தப்பாக நினைத்து விட்டேன், மேலும் ஒருமை இல் கூப்பிட்டு விட்டேன்' என்றாள். பின் ஒவ்வொருவராக வந்து , அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்...நீங்க இனி எதுக்கும் கவலைப்படாதீஙங்க மாமி, நாங்க எல்லோரும் இருக்கிறோம் உங்களுக்கு.மாமாவின் 60ம் கல்யாணத்தை ஜமாய்த்துவிடலாம்.' என்று சொன்னார்கள்.


    அப்புறம் அந்த பெருமாள் சாமாராதனையும் 60 ம் கல்யாணமும் எப்படி ஜாம் ஜாம் என்று நடந்தன என்று நான் சொல்லவும் வேண்டுமா?


    அன்புடன்,

    கிருஷ்ணாம்மா :)
     
    Last edited: Jul 31, 2020
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:I presume you got the seed for this story from real life.
    You walked the reader with the characters. Super read in one go. I felt as if I had read in Kumudam weekly or mangaiyar malar.
    Kamakshi sounds good to read on this day of varalaksmi viratha day.

    Thanks and Regards.
     
    krishnaamma likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி .... ஒரு short film பார்த்தன் தாக்கம் தான் இந்த கதை. உங்களின் விமரிசனம் எனக்கு மிக்க மகிழ்வைத்தந்தது ஐயா ...மீண்டும் ஒரு முறை நன்றி !.... ஆமாம், நீங்கள் என்னுடைய மற்ற கதைகளை படித்துளீர்களா? :)

    அன்புடன்,'
    கிருஷ்ணாம்மா :)
     
    Thyagarajan likes this.

Share This Page