1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்திடுவேன் கண்ணே!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Mar 2, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    போர் காரணமாய் நாம் பிரிந்தாலும்
    என் மனம் உனையே சுற்றி வரும்.
    ஆகையினால் என் கண்மணியே
    அழாது உறங்கடி பொன் மயிலே!

    தந்தையின் தோளினைச் சாராது
    நீ உறங்கியதில்லை இது வரையில்.
    விரைவில் நான் வருவேன் தவறாது.
    பொறுத்துக் கொள் கண்ணே அது வரையில்.

    உன் விழிநீர் அனைத்தையும் சேமித்து,
    உன் அன்னையினுடையதை நீ துடைத்து
    அவள் சிரிப்பதில் நீயும் மிக மகிழ்ந்து
    சிரித்தாலே என் மனம் மிகக் குளிர்ந்து

    என் பணியில் நானும் மிக முனைந்து
    விரைவில் செவ்வனே அதை முடித்து
    உனைப் பார்த்திட ஓடி வந்திடுவேன்!
    நாம் மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம்!

    குறிப்பு: போர் முனையில் இருக்கும் தந்தை தன் குழந்தைக்கு எழுதுவதாக அமைந்தது இப்பத்தி.
     
    1 person likes this.
    Loading...

  2. nihasvin

    nihasvin Platinum IL'ite

    Messages:
    1,240
    Likes Received:
    583
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Beautiful poem..

    P.S. I wanted to become a Doctor and serve for any of the military forces buy unfortunately couldn't.
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Nihasvin. And I really appreciate your noble thought. Don't worry. May be, you are lined up for a bigger plan. -rgs
     
    1 person likes this.

Share This Page