1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வண்ணத்துபூச்சி சொன்ன ரகசியம் !

Discussion in 'Regional Poetry' started by sadhu72, Oct 10, 2011.

  1. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    அந்தி மாலையில் அழகு மலர்சோலையில் நான்
    தென்றல் எனை தொட சென்று அமர்ந்த வேளையில் ,
    தானும் ஒரு வண்ண பூவின் மீது
    வந்து அமர்ந்தது அதுவும் ..... தன் வண்ண சிறகை அசைத்து
    அசைத்து என் எண்ணத்தை கவர்ந்து என்னை
    கிட்ட வா என அழைப்பு விடுத்தது..
    சரியென்று நண்பன் வரும் வேளை வரை இதனுடனே
    அளவலாமே என்று எண்ணி அருகில் சென்று
    நலமா அழகு வண்ணத்துபூச்சியாரே என் வினவவும் ....

    டக் என பூவை விட்டு என் தோள் பற்றி காதிலே
    தன்னை பற்றி பல வண்ண க[வி ]தைகள் சொன்னது ..... அப்பப்பா
    அதை நான் உங்களிடம் சொல்லா விட்டால் மிகுந்த தப்பப்பா
    நீலமும் பச்சையும் வண்ண மயில் வாரி தந்தாம்
    மஞ்சளும் சிகப்புமே செங்கதிர் தான் அள்ளி தெளித்ததாம்
    கருமையை கார் முகிலிடம் தான் கடனாய் வாங்கிற்றாம்
    வானவில்லையும் என் வர்ணங்களால் நான் வளைப்பேன்
    நீ விழுந்ததில் என்ன வியப்பு ?என்றதும் ..நான்

    நீ முன்பு இருந்த கூட்டுபுழு உருவ பருவத்தை தான்
    மறந்தாயோ என எள்ளி நகை யாட , படபடவென
    சிறகை அடித்து பதற்ர்ததுடனே பகர்ந்தது என் காதில்
    அவலக்ஷனமும் அழகாய் மாற என் பொறுமையும்
    விடா முயற்சியும் ஆண்டவனின் அருளும் தானே
    காரணம் என , கூறி அடுத்த பூவில் சென்று அமரவும்
    நானும் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் புரிந்த நிலையில்
    கனிவாய் நன்றி தான் நவின்று ..
    வீடு நோக்கி பீடு நடை போட்டேன்.!
     
    7 people like this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையான வண்ணத்துப் பூச்சியின் ரகசியம் கூறி வெற்றியின் ரகசியம் சொன்ன உங்களுக்கு நன்றிகள்........சாதனா........

    வண்ணமம்மா
    அதையொத்த அழகிய எண்ணமம்மா
    உன்னில் யான் கண்ட பொருமையம்மா
    கொடுத்திடும் கூட்டிடும்
    அழகிய வெற்றியென்னும் வண்ணமம்மா
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    நல்ல கருத்து. நவின்ற விதம் அருமை சாதனா.
     
    1 person likes this.
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    எங்க ப நானும் தன முயற்சி செஞ்சு பாக்கறேன் அழகு மட்டும்.......??????:bonk
    வண்ணத்துப்பூச்சி சொன்ன கவிதை அழகா இருக்கு சாதனா.....:)
     
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    அருமையான lesson நீங்க கற்றுகொண்டது மட்டும் இல்லாமல் எல்லோர்க்கும் share செய்தது நன்று
     
    1 person likes this.
  6. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Mikka azhagana varnanai sadhana..
     
  7. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,511
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பூக்களின் மேன்மை உங்கள் வரிகள் இருந்தது சாதனா...

    நீ முன்பு இருந்த கூட்டுபுழு உருவ பருவத்தை தான்
    மறந்தாயோ


    இந்த வரிகள் தான் என்னக்கு மிகவும் பிடித்தது.....
    என்றும் தான் என்ற அஹங்காரம் நம்மை மட்டும் அல்லது நம் character ஐ (sorry idhuku tamil la enanu therila adhaan english laiye adichuten) அழித்து விடும் .....
    so sweet saadhanaa.....
     
    1 person likes this.
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அழகிய வண்ணத்துப்பூச்சியை வைத்து அருமையாய் வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை சொல்லிடீங்க ..வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு சாதனா.
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை வண்ணத்துப்புச்சி வாயிலாய்
    உணர்த்திடீங்க , வர்ணனை ரொம்ப அருமையா இருந்தது,
    superrrr
     
  10. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    அருமை என்று வாழ்த்து சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள் !
    அஹில் , அது , குணாதிசயம் or பாத்திரம் . ஓகே நொவ் ?
     

Share This Page