ரொம்ப நல்லவன்

Discussion in 'Places & Events' started by Thyagarajan, Dec 7, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ரொம்ப
    நல்லவன் :hello:

    உங்கள் பெயர் பலகையை இந்தியில் வைத்து விட்டார்களாமே????
    அதுவாம்மா??? G20 கூட்டம் போடுறோம். அதில் கலந்து கொள்ள ஒரு எட்டு டில்லிக்கு வந்துட்டு போங்கன்னு சொல்லி கூப்பிட்டாங்கம்மா.
    சரி.
    நானும் G20ன்னதும் ஏதோ 2G மாதிரி பத்து மடங்கு பெரிய வியாபாரம்ன்னு நம்பி போய் உட்கார்ந்தேன்.
    அப்ப G20ன்னா என்னன்னு தெரியாமல் தான் அங்கே போனீங்களா???
    ஆமாம். அப்புறமா ஒரு பெரிய ஹாலில் கூட்டிக்கொண்டு போய் உட்கார வச்சாங்க.
    சரி.
    அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஒவ்வொருத்தரா வர ஆரம்பித்தார்கள்.
    சரி.
    ஒருவேளை 20 ஜிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போறாங்க. அதனால்தான் இதற்கு ஜி 20 என்று பெயர் வைத்திருக்கிறார்களோ என்று ஒரு சின்ன டவுட் வந்துச்சு.
    சரி.
    கொஞ்ச நேரத்தில ஏகப்பட்ட ஜிக்கள் வந்து குவிந்து விட்டார்கள்.
    அப்புறம் என்ன ஆச்சு????
    இந்தியா இந்த ஜி 20ல் சிறப்பாக செயல்பட உங்களுக்கு தோன்றும் நல்ல ஐடியாக்களை கூறுங்கள் என்று கேட்டாங்க.
    அதுக்கு நீங்க என்ன செஞ்சீங்க????
    நான் ஒன்றும் பேசாமல் கம்முன்னு இருந்துட்டேன்.
    நீங்க ஏன் ஒன்னுமே பேசவில்லை???
    ஐடியா தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா???? கடந்த தேர்தலில் நாம ஜெயிக்கிறதுக்கே அந்த பிஹாரி ஆரியன் தானே ஐடியா குடுத்தாரு.
    சரி எப்படியோ சமாளிச்சுட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சு????
    சரி. வந்ததுக்கு டீ, மிக்ஸர் முந்திரி பக்கோடா எல்லாம் குடுப்பாங்க ‌. சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்னு காத்திருந்து பார்த்தேன்.
    அதெல்லாம் குடுத்தாங்களா????
    ஆடம்பர செலவுகள் செய்ய கூடாதுன்னு பிரதமர் கண்டிப்பாக சொல்லிட்டாரு என்று சொல்லி வெறும் தண்ணீர் மட்டும் குடுத்து திருப்பி அனுப்பிட்டாங்கம்மா.
    நீங்க அவங்களை சும்மாவா விட்டீர்கள். கறாராக கேட்டு இருக்கனும்.
    நானும் சுகர் முதல் எல்லா வியாதிகளும் வந்த பாடி, இனிமேல் பசி தாங்காதுன்னு கறாராக சொன்னேனே.
    அப்புறம் என்ன ஆச்சு????
    பந்தி ஆரம்பித்ததும் சொல்றேன் ஆனால் அதுக்கு முன்னாடி உங்களுக்கு இந்தியில் பெயர் பலகை வைப்பேன்னு சொல்லிட்டாங்கம்மா.
    நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க???
    இந்தியா, பந்தியான்னு கேள்வி எழுந்தப்ப, பந்தி தான் முக்கியம் என்று தோன்றியது. அதனால ஒன்னும் சொல்லாம கம்முன்னு இருந்துட்டேன்மா.
    அப்புறம்.
    இப்படி எது சொன்னாலும் ஒத்துக்குற. நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா......
     
    Loading...

Share This Page