1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ருத்ரம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 5, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ருத்ரம்:hello:
    ------------
    குட் மார்னிங் சத்தீஷ்!.

    ஆபீஸில் உள்ளே நுழைந்து சீட்டில் உட்கார்ந்ததும் பரத் பக்கத்து சீட் சத்தீஷை பார்த்து விஷ் பண்ணினான். திரும்ப விஷ் பண்ணிய சத்தீஷின் குரலில் உற்சாகம் இல்லை.
    திங்கட்கிழமை காலையானதால் அடுத்தடுத்து இரண்டு மீட்டிங், ஒரு கால் என சாயங்காலம் நான்கு மணி வரை தலையை உயர்த்தவே நேரம் இல்லை.

    நான்கு மணிக்கு கேண்டீன் போன போதும் சத்தீஷ் முகம் வாடியிருக்கவே "என்ன சத்தீஷ் டல்லாயிருக்கே"? என்றான் பரத். "குழந்தைக்கு உடம்பு சரியில்லப்பா" என்றான் சத்தீஷ்.
    அவன் குழந்தைக்கு மூன்று வயதாகப்போகிறது. பிறக்கும்போதே கொஞ்சம் அண்டர்வெயிட் ஆக இருந்ததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. நல்ல சைல்ட் ஸ்பெஷலிஸ்டாக பார்த்துத்தான் கூட்டிக்கொண்டு போகிறான். அவன் மனைவியும் டெலிவரிக்கு பிறகு வேலைக்கு போகவில்லை. எப்படியோ செலவுகளை சமாளிக்கிறார்கள். இதில் அடிக்கடி டாக்டர் செலவு வேறு.


    இரண்டு நாள் கழித்து ஆபீஸிற்க்கு வரும் போது முகம் மலர்ந்து இருந்தது. லன்ச் ப்ரேக் கின் போது அவனே ஆரம்பித்தான். "எங்க அம்மா நேத்தைக்கு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு பேரன் பேர்ல் அர்ச்சனை பண்ண போயிருக்காங்க. அப்போ குருக்கள் கிட்ட அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போறதை பற்றி சொன்னப்போ அவர் இவனுடைய நட்சத்திரம் என்னன்னு கேட்டுட்டு மனசுக்குள்ள ஏதோ கணக்கு போட்டு பார்த்திருக்கார். அவருக்கு ஜோஸ்யம் தெரியும் போல இருக்கு. அவர் சொன்னாராம் "இதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை. கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். ஐந்து வயசுக்கப்புறம் நல்ல ஹெல்தியாயிடுவான். இப்போதைக்கு ஒரு பரிகாரம் சொல்றேன். வேதம் படிச்ச யாரையாவது வீட்டிற்க்கு கூப்பிட்டு ருத்ரம் ஜபிக்க சொல்லி தட்சிணை வைத்து கொடுங்கோ!

    ஒரு நாலு வாரம் ஜபித்தபிறகு முடியும் தினத்தில் அவருக்கு சாப்பாடு போட்டு வஸ்திரம் வாங்கி கொடுக்கணும்" அப்படீன்னு சொன்னாராம்.

    எங்க அம்மா அவரையே வரச்சொல்லி கூப்பிட்டதற்க்கு "எனக்கு கோவில் வேலையே சரியா இருக்கேம்மா" என்று சொல்லிவிட்டாராம். "என்னப்பா பண்றது பரத்?" என்றான் சத்தீஷ்
    பரத் வாயைத் திறக்கவில்லை. வாயைத் கட்டிப் போட்டிருப்பது அவனுடைய அம்மா. சுந்தரேச குருக்களோட சீமந்த புத்திரன் பரத் என்கிற பரத் ராம்.

    ராமாயணத்திலேயே மூழ்கிப் போய் வாழ்க்கையே ராமர் காட்டிய பாதை என்பது போல் இருந்ததால் பிள்ளைக்கு பரதனையும் ராமனையும் இணைத்து பரத் ராம் என்று பெயரிட்டார் சுந்தரேச குருக்கள். அகத்தீஸ்வரர் கோவில் தலைமை குருக்கள். அகத்தீஸ்வரனும் சொர்ணாம்பிகையுமே தனக்கு எல்லாம் என்றிருப்பவர். நடை பழகத்தொடங்கிய தினத்திலிருந்து. அப்பாவின் கைபிடித்து கோவிலுக்கு செல்பவன் பரத்.

    அப்பா ருத்ரம் ஜபித்துக்கொண்டே சிவனுக்கு அபிஷேகம் செய்வதை கண்ணால் பார்த்து மனதால் வாங்கிக்கொண்டவன். அம்பாளுக்கு அலங்காரம் செய்யும் போது அப்பாவுக்கு கூடவே ஒத்தாசை செய்வான்.
    எத்தனை மனைவிகளுக்கு கணவன்‌ செய்யும் உத்யோகத்தில் திருப்தி ஏற்பட்டிருக்கிறது? மீனாட்சியும் அப்படித்தான். பெயரில் இருந்த பொருத்தம் மனதில் இல்லை. ஒரு கோவில் குருக்கள் தன் பெண்ணை இன்னொரு குருக்களுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மீனாட்சி மனதில் அதிக ஆசைகளை வளர்த்துக்கொண்டாள். அதனால் பிள்ளை பிறந்ததிலிருந்தே அ‌வனை நல்ல படிப்பு படிக்க வைத்து, (நல்ல படிப்புன்னா என்ன? இன்னிக்கு எல்லா அம்மாக்களுக்கும் தெரிஞ்ச ஒரே நல்ல படிப்பு என்ஜினீயரிங் தான்) அமெரிக்கா போயிடணும்னு கனவு கண்டாள். சுந்தரேச குருக்கள் ஒன்றும் படிப்பறிவில்லாதவர் இல்லை. சங்கீதத்தில் எம்.ஏ. பட்டம் வாங்கியிருந்தார். அருமையான குரல் வளம். பாடிக்கொண்டே தான் அம்பாளுக்கு அலங்காரம் செய்வார்.

    பரத்தும் அம்மாவை ஏமாற்றாமல் நன்றாகப் படித்தான். வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் காலேஜில் மெரிட்டிலேயே சீட் கிடைத்தது. கேம்பஸ் இண்டர்வ்யூவில் பெங்களூரில் சிஸ்கோவில் வேலையும் கிடைத்து விட்டது. இரண்டு வருடங்கள் பறந்து விட்டன. அடுத்த வருடம் அமெரிக்கா ப்ராஜெக்ட் கிடைக்கும் என பாஸ் சொல்லியிருக்கிறார்.

    பரத் எதையும் எதிர்பார்க்கவில்லை. அம்மாவிற்க்காக படித்தான். வேலை பார்க்கிறான்.மனதளவில் அகத்தீஸ்வரரைத்தான் சுற்றி வந்தான். ஆனால் அம்மா கண்டிப்பாக சொல்லியிருந்தாள் அவன் மறந்தும் அப்பாவின் வேலையைப் பற்றி யாரிடம் பேசக்கூடாது என்று.

    "என்னப்பா பரத்! டீப் திங்கிங்போல இருக்கு. நான் சொன்னதை காதுல வாங்கினியா? எனக்கு அடுத்த பிரச்சனை ருத்ரம் ஜபிக்க யாரைப் போய் தேடுவேன்? உனக்கு யாரையாவது தெரியுமா?
    "என்றான் சத்தீஷ்.

    "நான் செக் பண்ணி சொல்றேம்பா" என்று நழுவி விட்டான் பரத்.
    இரண்டு நாள் கழித்து வெள்ளி இரவு. அப்பா போன் பண்ணினார். அப்பா அவசியமில்லாவிட்டால் பேசமாட்டார். 'சொல்லுப்பா ' என்றான் சந்தோஷத்தோடு. "பரத்! நான் உங்கிட்டே கூட சொல்லாம ரகசியமா ஒரு விஷயம் பண்ணினேன்" என்றார். "என்னப்பா"? என்றான் இவன் ஆச்சரியத்தோடு. "நீ பெங்களூருக்கு போன இந்த இரண்டு வருஷத்துல அண்ணாமலை யுனிவர்சிட்டி லே எம்.ஃபில். முடிச்சுட்டேன். டாக்டரேட்டுக்கு அப்ளை பண்ண போறேன்.

    அன்னமாச்சாரியாருடைய கீர்த்தனைகளை தமிழ்ப் படுத்தி பாடுவதுதான் தான் நான் ஆராய்ச்சிக்கு எடுத்துண்டு இருக்கிற சப்ஜெக்ட்"அப்படீன்னார். பரத்திற்க்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.

    "அப்பா! நீங்க க்ரேட்!ரகசியமா இப்படி ஒரு சாதனை பண்ணியிருக்கேளே! உங்களை இப்பவே நேர்ல பார்க்கணும்போல இருக்கு" சந்தோஷத்தில் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. "நம்ப மனசுக்கு பிடிச்ச விஷயத்தை பண்ற மாதிரி சந்தோஷம் வேற எதிலும் கிடையாதுப்பா. எனக்கென்னவோ உங்கிட்ட சொன்னா அந்த ஈஸ்வரன் கிட்ட சொன்ன திருப்தி. அதுதான் போன் பண்ணினேன். உடம்பை பார்த்துக்கோ! நல்ல சாப்பாடா சாப்பிடு" என்று சொல்லி போனை வைத்தார்.

    பரத்தின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
    மறுநாள் சனிக்கிழமை கார்த்திகை மாதப்பிறப்பு. காலை எழுந்து குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்து, சத்தீஷுக்கு போன் செய்தான்.

    திங்கட் கிழமை மாலை ஆறு மணிக்கு ருத்ரம் ஜபிக்க தெரிந்தவரை அழைத்து வருவதாகவும் வீட்டில் அம்மாவிடம் சொல்லிவிடும்படியும் சொன்னான். சத்தீஷுக்கு மிகவும் சந்தோஷம். பத்து தடவை தாங்க்ஸ் சொன்னான். திங்கட்கிழமை சதீஷ் சேஃபாக வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாக போட்டுக்கொண்டு தன் அட்ரசை பரத்திற்க்கு வாட்ஸ்அப் செய்துவிட்டான்.

    இவனும் மதியத்திற்க்குமேல் கிளம்பி தன் ரூமிற்க்கு போய் குளித்துவிட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் சகிதமாக சதீஷ் வீட்டிற்க்கு கிளம்பினான். இவனை எதிர்பார்த்து காத்திருந்த சத்தீஷ் வண்டியில் இவன் பின்னால் யாரையும் காணாமல் திகைத்தவன்" பண்டிட் தனியாக வருகிறாரா? அட்ரசை வாட்சப் செய்துவிட்டாயா?" என்றான். இவன்

    பதிலேதும் பேசாமல் வாசல் பக்கத்தில் இருந்த குழாயில் காலை அலம்பிக்கொண்டான். மாரத்தஹள்ளியில் அதிசயமாக அந்தகாலத்து தனிவீடு. வாசல் பக்கம் பவழமல்லி மலரத்தொடங்கி மணம் வீசிக் கொண்டிருந்தது.

    உள்ளே போய் சுவாமி ரூம் எது என கேட்டு போய் சட்டையை கழற்றி அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டான். பூஜை அறையில் அழகான ஸ்படிக சிவலிங்கம், விளக்கேற்றி, பூஜைக்கு நிறைய பூக்களோடு சர்வ லட்சணமாக இருந்தது.

    "ஓம்! கணானான்த்வா கணபதி கும்ஹவா மகே"!
    கணீரென்ற குரலில் ஆரம்பித்தான்.

    சதீஷின் அப்பா அம்மா மனைவி எல்லோரும் வந்து அமர்ந்து கொண்டார்கள் சதீஷின் மூன்று வயது மகன் மகேஷ் சமர்த்தாக வந்து உட்கார்ந்து கொண்டது இவன் தன்னை மறந்து அகத்தீசுவரர் சன்னதியில் இருப்பதாகவே நினைத்து பூக்களை எடுத்து போட்டுக்கொண்டிருந்தான்.

    சரியாக ஒரு மணி நேரம் 15 நிமிடம் முடிந்தவுடன் சதீஷின் மனைவி பிரசாதத்தை கொண்டு வந்து வைத்தாள் நைவேத்தியம் செய்து நெய் தீப ஆரத்தி எடுத்து முடித்தான் சதீஷின் அம்மாவிற்கு உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை

    " கார்த்திகை சோமவாரத்தன்று நீங்கள் வந்து ருத்ரம் ஜெபிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றாள். இவனுக்கு கூச்சமாக போய்விட்டது" அம்மா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள் எனக்கு தெரிந்து இருந்ததால் நான் இங்கு வந்தேன் அவ்வளவுதான்"என்றான்.

    சதீஷ்க்கு மிகப் பெரிய ஆச்சரியம் "உன்னிடம் இப்படி ஒரு டேலண்ட் டா"? என்று.
    அடுத்த மூன்று திங்கட்கிழமை களும் இவனே அவர்கள் வீட்டிற்கு போய்விட்டு வந்தான் ஆபீஸ் வேலையில் கிடைக்காத ஆத்மதிருப்தி அதில் இருப்பது போல் தோன்றியது சதீஷ்க்கு ரொம்ப சந்தோஷம்.முக்கியமான விஷயம் என்னென்னா இந்த ஒரு மாசத்துல மகேஷுக்கு எந்த ஹெல்த் ப்ராப்ளமும் வரல. கொஞ்சம் நல்லா சாப்பிட ஆரம்பிச்சிருக்கான்.

    சதீஷ் ஒரு சுற்று பெருத்து விட்டது போல் தெரிந்தான். முகத்தில் நல்ல தெளிவு
    நான்காவது வார முடிவில் தடபுடலாக சாப்பாடு போட்டு மயில்கண் வேஷ்டி அங்கவஸ்திரம் ஆயிரம் ரூபாய் தட்சிணை எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள்.

    இவன் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் விடவில்லை சதீஷின் அம்மா இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றதற்கு மீனாட்சி புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் என்றார்
    மறுநாள் லஞ்ச் டைமில் இவன் ப்ராஜெக்டில் இருக்கும் எல்லோரும் வந்து இவனுக்கு கை குலுக்கினார்கள்.

    ஒன்றும் புரியவில்லை "இப்போ அப்ரைசல் டைம் கூட இல்லையே அமெரிக்கா ப்ராஜெக்ட் எல்லாம் கனவுல கூட இப்ப வர நிலைமையில் இல்லையே என்ன விஷயம்"? என்று கேட்டான் போனை திறக்க இவன் ருத்ரம் ஜெபித்துக் கொண்டே பூஜை செய்யும் அற்புத காட்சி வீடியோவில் ஓடிக்கொண்டிருந்தது

    ஒவ்வொருவராக எங்கள் வீட்டிற்கு வர முடியுமா என கேட்கத் தொடங்க இவன் சொன்னான் நீங்களே கற்றுக் கொள்ளலாம் என்று" நாங்களா? நோ வே பாஸ்!" என கோரஸாக சொல்ல, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ள முடியாது ருத்ரம் மொத்தம் 11 அனுவாகம் அல்லது சாப்டர். வாரம் ஒன்றாக கற்றுக்கொண்டு வீட்டில் ரிப்பீட் செய்தால் ஈஸியாக வந்துவிடும் என்றான்.

    நண்பர்களுக்கு நம்பிக்கை வரவில்லை ஆனாலும்கூட ஆபீஸில் ஹெச்.ஆர். சொல்லி எதை எதையோ கற்றுக்கொள்கிறோம் இதை செய்தால் என்ன செய்துதான் பார்ப்போமே என நினைத்தார்கள் "ஓகே டன் "என்றார்கள் கோரசாக.

    ஒரு நண்பன் இவன் வகுப்பு எடுப்பதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து யூடியூபில் அப்லோட் செய்தான். முதல் வாரம் பத்தாயிரம் வியூஸ். அடுத்தடுத்த வாரங்களில் மிக உற்சாகமான வரவேற்பு ஆனால் முதலில் இது எதுவுமே பரத்திற்கு தெரியாது அவனைப் பொறுத்தவரை அந்த நேரம் முழுவதும் பகவானுக்கான அர்ப்பணிப்பு.


    இவன் ஆபீஸில் மற்ற ப்ராஜெக்ட் களில் இருப்பவர்களும் விஷயம் தெரிந்து இவனிடம் வந்து நாங்களும் கற்றுக் கொள்ளலாமா எனக் கேட்டனர் அப்போதுதான் இவனுக்கு தெரிந்தது நண்பன் அதை யூடியூபில் அப்லோட் செய்தது.

    அவனை கோபித்துக் கொண்டான். "யூடியூப்னாலதான் இப்போ நிறைய பேருக்கு இது ரீச் ஆயிருக்கு! நல்ல விஷயம் தானே பாஸ்" என்று அவனை சமாதான படுத்தி விட்டான்.
    ****
    "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.... தில்லை சபாபதிக்கு"
    லயித்துப்போய் பாடிக்கொண்டே அகத்தீஸ்வரனுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தார் சுந்தரேச குருக்கள்.

    வெளியில் தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அவர் இசையில் தங்களை மறந்து நின்று கொண்டிருந்தனர் இரண்டு குழந்தைகள் பிரகாரத்தில் ஓடிப்பிடித்து விளையாடிய சப்தம் கேட்டு திரும்பியவர் பக்தர்களை பார்த்து அலங்காரத்தை முடித்து சாயரட்சை தீபாரதனை க்கு ஏற்பாடு செய்தார்.

    சிவனை சாயரட்சை தீபாராதனையில் சந்திர பிரபை சூரிய பிரபை காட்டி சாமரம் வீசி வழிபடுவதை பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும்

    அடுக்கு தீபாராதனை முடிந்து அம்பாளுக்கும் தீபாராதனை காட்டிய

    பின் எல்லா பக்தர்களுக்கும் விபூதி குங்கும பிரசாதம் கொடுத்த பொழுது நண்பர் விஸ்வநாதன் அங்கு வந்தார் "என்ன விஸ்வநாதா ஆளையே காணோமே" என்றார் "கிராமத்துக்குப் போயிருந்தேன் பா இன்னைக்கு காலைல தான் வந்தேன் உனக்கு ஒரு முக்கியமான விஷயம் காட்டணும்ப்பா!"ன்னு சொல்லி போனை எடுத்து பரத்தின் ருத்ரம் கிளாஸ் யூடியூப் வீடியோ ஒன்றை காண்பித்தார்.

    கணீரென்ற குரலில் பரத் ருத்ரம் சொல்லவும் 25 இளைஞர்கள் அதை திருப்பி சொல்லவும் கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தது தன்னை மறந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    விஸ்வநாதன் குரல் அவரை தட்டியெழுப்பியது "என்னப்பா சுந்தரேசா உன் பையன் ஏதோ ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறதா மீனாட்சி சொல்லியிருந்தா இவன் என்ன ருத்ரம் சொல்லிண்டு இருக்கான்?. வேலைய விட்டானா?" சுந்தரேச குருக்களுக்கு ஒன்றும் புரியவில்லை பரத் தன்னிடம் இதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே என நினைத்தார்.

    அதற்குள் முருகன் சன்னதியில் இருந்து சுவாமிநாத குருக்கள் வேகமாக வந்தார் அவர் கையில் செல்போன் "என்ன ஓய் உம்ம பொண்ணு ஏதோ பதட்டமா பேசறா என்னன்னு கேளும்" என்றார்.

    சுந்தரேச குருக்கள் கோவிலுக்கு போனை எடுத்து வர மாட்டார் வேலை இடத்தில் வேலை மட்டுமே என்பது அவர் கொள்கை. வேதமோ பாட்டோ எது கற்றுக் கொடுப்பதாக இருந்தாலும் கோவில் நேரம் போகத்தான்.

    ஆனால் மற்ற குருக்கள் எல்லாரும் செல்போனும் கையுமாகத்தான் இருப்பார்கள்
    "என்னம்மா "?என்றார் பெண்ணிடம். பிளஸ்டூ படிக்கிறாள் அம்மாவின் அச்சு அப்படியே. அம்மாவின் குணங்களும் அப்படியே
    "அப்பா விஸ்வநாதன் மாமா வந்து வீடியோ காட்டினர் அம்மா பரத் மேல ரொம்ப கோபமா இருக்கா பரத் ஃபோன் சைலன்ட் மோடில் இருக்கு." " நான் நேர்ல வந்து பேசுறேன்" அப்படின்னு சுருக்கமா சொல்லி போனை கட் பண்ணினார்.

    வத்தி வைத்த குஷியில் விஸ்வநாதன் பறந்து விட்டிருந்தார்
    மீனாட்சி ருத்ர தாண்டவம் ஆடினாள். "நீங்கதான் என் பிள்ளைக்கு இதையெல்லாம் பண்ண சொல்லி இருப்பேள்" அப்படின்னு சுந்தரேச குருக்களை சாடினாள் "அவன் வேலைல இருக்கானோ இல்ல விட்டுட்டானோ தெரியலையே"என்று புலம்பினாள்.

    இரவு ஒன்பதரைக்கு பரத் ஃபோன் செய்தான் "என்னம்மா என்ன விஷயம் போன் சைலன்ட்ல போட்டு இருந்தேன்" என்றான். எடுத்த எடுப்பில்" ஏண்டா நீ பெரிய உத்தியோகம் பார்த்து தங்கை படிப்பு கல்யாணம் எல்லாத்தையும் கவனிச்சுப்பேன்னு நினைச்சேனே! இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டியே" என்று கத்தினாள்.

    பரத்திற்கு ஒன்றும் புரியவில்லை "என்னம்மா சொல்ற"? அப்படின்னான். அதற்குள் தங்கை போன் அருகில் வந்து "பரத் நீ யுடியூப்ல ருத்ரம் சொல்லித்தறயே அது ரொம்ப பாப்புலர் ஆயிடுத்து. அதைத்தான் அம்மா கேட்கிறா". "அம்மா கிட்ட போனை குடு" என்றவன் "அம்மா என் வேலை எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு. சில பிரண்ட்ஸ் கேட்டதால சொல்லித்தரேன்" என்றான். "உனக்கு ருத்ரம் தெரியும்னு அவாளுக்கு எப்படி தெரியும்" என்று தங்கை குறுக்கு கேள்வி கேட்டாள். போனை அம்மா ஸ்பீக்கரில் போட்டு இருந்ததால் மாற்றி மாற்றி இருவரும் பேசினார்கள். அப்பா எதுவும் பேசவில்லையே என்று பரத் நினைத்தான். "அம்மா எனக்கு US கால் இருக்கு நான் அப்புறம் பேசுறேன்" என்று போனை கட் செய்தான் மனம் கனத்துப் போனது போல உணர்ந்தான். தான் என்ன தப்பு செய்துவிட்டோம் என்று நினைத்தான். தூக்கம் வர மறுத்தது.


    காலையில் 8 மணிக்கு அவன் மொபைல் சிணுங்கியது. எண்ணைப் பார்த்தான். அது டெல்லி நம்பர். பேசியது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலரின் உதவியாளர்
    "நீங்கதானே பரத்ராம்? "
    "ஆமாம் "
    "எங்கள் துறை உங்களுடைய சமீபத்திய யூடியூப் வீடியோக்களை பார்த்தது நம்முடைய அரசு மாணவர்களுக்கு வேத பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு தனி அமைப்பை ஏற்படுத்த உள்ளது. அது விஷயமாக எங்கள் செயலர் உங்களை சந்திக்க விழைகிறார். உங்களுக்கு வசதிப்படும் தேதியை சொன்னால் நாங்கள் விமான பயணச்சீட்டை ஈமெயிலில்
    அனுப்பி வைக்கிறோம்"

    அதற்கு அடுத்து நடந்தவை எல்லாம் ஒரு கனவு போல இருந்தது வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் போய் டெல்லியில் இந்திராகாந்தி விமான நிலையத்தில் இறங்கி லௌன்ஞ்க்கு வந்த போது பரத்ராம் என்ற பெயர் அட்டையை தாங்கிய காரோட்டி நின்று கொண்டிருந்தான். நேரே மனிதவளத் துறை அலுவலகத்தின் செயலர் அறைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று ரிஷப்ஷனில் இவனை அமரச் செய்து அந்த ரிசப்ஷனிஸ்ட் இடம் விபரத்தை சொன்னான் ரிசப்ஷனிஸ்ட் முகத்தில் புன் சிரிப்போடு இவனை 10 நிமிடங்கள் காத்திருக்க சொன்னார்.இவனுக்கு எல்லாமே புதுமையாக இருந்தது ஃபுல் கோட் சூட்டில் செயலரை எதிர்பார்த்து உள்ளே சென்றவனுக்கு நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு பாண்ட் புல் கை சட்டையில் இருந்த வரதாச்சாரியை பார்த்தவுடனேயே ஒரு ஸ்நேக பாவம் ஏற்பட்டது
    இவனுடைய பின்னணியைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட வரதாச்சாரி அந்த வேதபாடத்தைப்பற்றி மேலோட்டமாக சொல்ல அந்த சிலபஸை உருவாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இவனை ஒரு எக்ஸெல் ஷீட்டில் போடச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் இவன் அந்த சிலபஸை போட்டு கொடுத்தவுடன் பிரமித்தார்.

    ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வேதம் கற்றுக் கொடுப்பது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் என்றார். அவர்கள் உருவாக்க இருக்கும் அமைப்பிற்கு உபதலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா என கேட்டார். தலைமை பொறுப்பில் இருக்கப்போவது திரு வரதாச்சாரி என்று தெரிந்த போது அவனுக்கு மாணவர்களுக்கு வேதத்தை நன்றாகவே கற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

    எதற்கும் அப்பாவை கேட்டு சொல்கிறேன் என்றான். "டேக் யுவர் ஓன் டைம். நல்ல பதிலாக சொல்லு"என்று முதுகில் தட்டிக் கொடுத்து அனுப்பித்தார் வரதாச்சாரி.
    அப்பாவுக்கு இரவு போன் செய்து தனியாக பேச வேண்டும் என்றான். அப்பா மறுநாள் காலை கோவிலுக்கு கிளம்புவதற்கு முன் இவனை கூப்பிட்டார்.

    மத்திய அரசு கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தவன் அப்பாவிடம் விஷயத்தை சொன்னான் அப்பா கேட்டார் " உன் மனசுக்கு பிடிச்சிருக்கா"? என்று "ரொம்ப பிடிச்சிருக்கு பா" என்றான்." அப்ப சரின்னு சொல்லிடு". அம்மா என்று இழுத்தான். "அம்மாவை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு. மனசுக்குப் பிடிச்ச வேலையை செஞ்சாதான் வாழ்க்கையில ஒரு பிடிப்பு சந்தோஷம் எல்லாம் இருக்கும்" என்றார்.
    அப்பா எந்த சூழ்நிலையிலும் முகத்தில் புன்சிரிப்போடு இருப்பதன் ரகசியம் அப்போதுதான் புரிந்தது அகத்தீஸ்வரரை மனதில் வணங்கியபடி வரதாச்சார க்கு ஓகே சொல்ல ஃபோனை கையில் எடுத்தான்‌பரத்.

    (முகநூலில் வாசித்து மகிழ்ந்தேன்)
     
    Last edited: May 5, 2021
    rgsrinivasan likes this.

Share This Page