1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரத்த நிலா 20 - யார் குற்றவாளி?

Discussion in 'Stories in Regional Languages' started by iniyamalar, Jan 28, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கதிர் தன் முன் நின்றவனை ஆச்சர்யத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் பார்த்தான்.

    "ந..நடேசா..."

    "உங்க செல் ஃபோனை நான் வீட்ல விடவில்லை கதிர். என் காரில் சீட்டுக்கு அடியில் கிடந்திருக்கு. வீட்டுக்குப் போனதும் தான் நானே பார்த்தேன். நிறைய மிஸ்ட் கால்ஸ் இருந்தது. சரின்னு அதை கொடுத்து விட்டுப்போகலாமென்று தான் நான் வந்தேன். இங்கே நடக்கின்ற களேபரத்தைப்பார்த்தேன். உங்க கூட யாரும் வர்ற மாதிரி தெரியல. அதான் நான் வந்துட்டேன். மணியைத் தவறா நினைக்காதீங்க.. அவங்கப்பாவுக்குக் கட்டுப்பட்டு அவன் அங்க இருக்கான். ஆனா அவன் மனசெல்லாம் உங்க கூட தான் இருக்கும்."நடேசன் அமைதியான குரலில் கூறினான்.

    கதிர் அவனை ஆழமாகப்பார்த்தான்.

    "என்ன கதிர் யோசிக்கிறீங்க? வாங்க மீனாட்சியைத் தேடலாம்.நீங்க இந்தப்பக்கம் வந்ததுமே புரிஞ்சிடுச்சு..மலைப்பக்கமா அந்த வழியாப்போனா மேல இருக்கறவங்களுக்கு நாம வர்றது தெரிஞ்சுடும் இல்லையா? ஆனா இது என்ன புது குகை?"

    "ஏன்?இந்தப் பாதை உனக்கு தெரியாது?"குத்தலாகக் கேட்டான் அவன்.

    "தெரியாதே. இப்பத்தான் கொடஞ்சிருக்காங்க போல. போன திருவிழாவின் போது நான் ஊருக்கு வந்தது, மறுபடி இப்பத்தான் வந்தேன். ஏன் கேக்கறீங்க?"உண்மையான குழப்பத்தில் கேட்டான் நடேசன்.

    "ஒண்ணுமில்லை.."

    "நான் சொல்றனே கதிர். எனக்கென்னமோ இதுக்கெல்லாம் காரணம் அந்த அம்பலத்தார் தான்னு தோணுது." சொல்லிக்கொண்டே நடந்தவனை நின்று ஊடுருவும் பார்வை பார்த்தான் கதிர்.சட்டென புகை மண்டலம் கலைந்தது.அந்த நொடி நடேசனின் முகம் பார்த்ததும் அவனுக்குள் இரண்டு நாளாக அரித்துக்கொண்டிருந்த விஷயம் இன்னதென்று விளங்கியது. தண்டபாணி வீட்டில் என்ன குழப்பம் தனக்கு வந்தது என்றும் புரிந்தது.

    "என்ன கதிர் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?"

    ஒரு முடிவுடன் கதிரும் நடேசனைப்பார்த்துக்கேட்டான்.

    "நா கேக்கற கேள்விக்கு நீ உண்மையான பதில் சொல்றியா நடேசா?"

    "சொ..சொல்லுங்க கதிர்"

    "அம்பலத்தார் உனக்கு என்ன உறவு?"

    "கதிர்?"

    "சொல்லு நடேசா.."

    "அ..அது..."

    "உனக்குத் தெரியுமில்லையா?"

    "ம்ம்.. தெரியும்.. ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் கதிர்?"

    “அத நீ தான் சொல்லணும் நடேசா.உண்மையைச் சொல்லு. மீனாட்சியை எங்கே வச்சிருக்கீங்க, அதை மட்டுமாவது சொல்?”

    “என்ன கதிர்..எனக்கு ஒண்ணும் புரியலை”

    "என்னடா ஒண்ணும் புரியலை? எனக்கு இன்னுமா புரியலைன்னு நெனச்சே?. அன்னிக்கே உங்க வீட்ல எனக்குத் தோணிச்சு. ஆனா அப்ப முழுசாப் புரிபடல.சரி அத விடு.
    வெற்றியைக் கொன்னது நீங்க தானே? அதை மறைக்கத்தான் இத்தனைக் கொலைகளுமா? இல்லை அவைகளுக்குத் தனியாக ஏதாவது காரணம் இருக்கிறதா? இப்ப மீனாட்சியை எதுக்கு கடத்தி வச்சிருக்கீங்க? அவளைக்கொன்று மொத்த பழியையும் அம்பலத்தார் மேல போட்டு விடலாமென்றா?"

    "கதிர் எனக்கு அம்பலத்தார் மேல கோபம் தான் ஆனாலும் அவர் எனக்கு....சத்தியமா நீங்க சொல்றது எதுவுமே எனக்குத் தெரியாது கதிர்."

    “அவனைக் கேட்காதே கதிர். அவனுக்கு ஒண்ணும் தெரியாது. “ பின்னிருந்து மிக அருகில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவன் வந்தவனைக் கண்டு திகைத்தான்.

    “ இன்ஸ்பெக்டர் சுகுமார். நீங்களா?”

    “ஆமா. நானே தான்."

    "ஓ..நீ தானா அந்த ரெண்டாவது கைக்கூளி?"

    "நான் கைக்கூளி இல்லம்மா கண்ணு. பார்ட்னர். சரி சரி..கதை பேசவெல்லாம் நேரமில்லை. வாங்க ரெண்டு பேரும்” என்றபடி அவன் நடக்க உடன் வந்த குண்டர்கள் இருவர் இவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு மேலே கோவிலருகில் அழைத்துச் சென்றனர். அங்கு பூசைக்கான அனைத்தும் தயாராயிருக்க காபாளிகன் பெயருக்கு யாகம் வளர்த்துக் கொண்டிருந்தான்.பூசாரி அருகில் அமர்ந்திருந்தார். அருகில் தூண்களில் பலிபொருட்களான ஆடுகளும், கோழிகளும் கட்டி வைக்கப்பட்டிருக்க அவற்றின் கூடவே மயங்கிய நிலையில்அம்பலத்தாரும் கட்டி வைக்கப்பட்டிருந்தார் இருந்தார்.

    அங்கிருந்து சற்று தள்ளி ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து கதிர் ஆச்சர்யப்படவில்லை, அவனுக்கு இப்பொழுது எல்லாம் தெளிவாகப்புரிந்தது.
    ஆனால் நடேசன் ஆடிப்போனான்.

    “அ..ப்ப்.ப்பா..”

    “டேய்..இவென் என்னடா பண்றான் இங்க?”அவரும் நடேசனை எதிர்பார்க்கவில்லை.

    “ நா என்ன பண்ணட்டுங்கய்யா? இந்த கதிர் கூட பேசிகிட்டு நின்னாரு. அவசரத்துல ரெண்டு பேரையும் கூட்டியாந்துட்டேன்.”சுகுமார் சாவகாசமாக அவர் அருகில் அமர்ந்தான்.

    "ம்ம்..சரி விடு..நம்ம பய தானே."

    “அப்பா.. நீங்களா இப்படி? ச்சீ..சீ..என்னால நெனச்சுக்கூட பாக்க முடியல. எதுக்காகப்பா? எதுக்காக இவ்வளவு பேரைக் கொன்னீங்க?” நடேசன் முகத்தில் அத்தனை அசூயை.

    "எதுக்காகன்னு நினைக்கிற?"

    "பெரியப்பாவைப் பழிவாங்கவா?"

    “பெரியப்பனா? எவண்டா உனக்குப் பெரியப்பன்?வைப்பாட்டி பேரன் எனும் காரணத்தில் தானே, என்னை ஊரறிய இந்தப்பெரிய மனுசன் தம்பின்னு ஒத்துக்கலை. அப்புறம் உனக்கு மட்டும் எங்கிருந்து பெரியப்பன்?எங்க தாத்தன் கெழவன் என் பாட்டியை வைப்பாட்டியாத்தாண்டா வச்சிருந்தான், பெண்டாட்டியா இல்லை.ரொம்ப நல்லவன் மாதிரி பக்கத்துல ஊரிலேயே ரகசியமா வீடெடுத்து வச்சு பாத்துக்கிட்டா ஆச்சா? பரதேசிப்பய சொத்துல மட்டும் முக்காவாசி மொதக் குடும்பத்துக்குக் கொடுத்துட்டு, நம்ம குடும்பத்துக்கு காலே கால் தாண்டா கொடுத்திருக்கான். ஊர்ல பர்மால வியாபாரம்னு பொய் வேற..

    எதோ நாம செஞ்ச புண்ணியம் இந்த அம்பலத்தானோட அப்பா சாகறதுக்கு முன்னாடி நம்மைப்பத்தியும் அவனோட அப்பனோட வண்டவாளத்தைப்பத்தியும் இவன்கிட்ட சொல்லிட்டுச் செத்தது தான். இல்லைன்னா இவனா வந்து சொல்றவரைக்கும் நமக்கும் அந்த குடும்பத்துக்கும் இருந்த பந்தம் தெரியாமலே தானே போயிருக்கும்? பக்கத்து ஊர்ல ஒரு சொத்துல்ல குடும்பம் நமக்குச் சொந்தம்கற விஷயம் தெரியாமலே தானே போயிருக்கும்? ஹ்ம்ம்..

    அதனால தான் இவனை நான் இத்தனை நாளாக விட்டு வச்சேன். ஆனாலும் இத்தனை வருஷத்துல இந்த நல்லவனையே ஊரறிய ஒரு முறையாவது பெரியப்பான்னு உன்னால கூப்பிட முடிஞ்சதா? இல்ல அவனுந்தான் உன்னைக் கூப்பிட விட்டிருப்பானா? பரம்பரை கவுரவம் தடுத்துச்சுல்ல? நமக்குப் பேரும் இல்ல, சொத்தும் கிடைக்கலைன்னா.அது என்ன நியாயம்? அந்த குடும்பத்தைப் பழிவாங்கறதுல என்ன தப்பு?”

    “ஆனா அம்பலத்தாரை பழிவாங்கும் எண்ணத்தோட நீங்க இந்தக் கொலைகளைப் பண்ண ஆரம்பிக்கலை. இல்லையா?”கதிர் இடைமறித்தான்.

    “கரக்ட்...பரவாயில்லயே..நீ வெவரந்தேன் போ..அதுக்காகப் பண்ண ஆரம்பிக்கலை. சிவன் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களில் நான் கை வச்சதை வெற்றிவேல் கண்டுபிச்சான். போலீஸ்க்கு புகார் பண்ணப்போறேன்னான். இதோ இந்த உள்ளூர்ப்போலீஸ் போய் சமரசம் பண்ணப்போச்சு. அவன் ஒத்துக்கலை. மேலிடத்துல சொல்வேன்னு சொன்னான்.சரி இப்படிப்போனா கஷ்டம்னுட்டு அவனை போட்டுத் தள்ள ப்ளான் பண்ணோம். அப்புறம் என்ன ஆச்சுன்னு சுகுமார் நீயே சொல்லு"என்று அவர் சாய்ந்து அமரவும் மீசையைத் தடவிக்கொண்டு ஆரம்பித்தான் அந்த ஆஃபீசர்.

    "வெற்றியோட தோழன், என்னோட அடியாள் லட்சுமணனை வைத்து அவனை இங்கு கூட்டிட்டு வந்தோம். கொலை செய்யத்தான் கூட்டிட்டு வந்திருக்கோம்னு தெரிஞ்சதும் மரண பயத்துல எங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னான்.பல பஞ்சலோக சிலைகள், நடராஜர் ரூபங்கள், இன்னும் கிட்டத்தட்ட ஒரு புதையல் அளவு ஐட்டங்களை அந்த காலத்துல இவங்க தாத்தா சிவன்கோவில் புணரமைப்பின் போது கண்டெடுத்திருக்கார். அதை இந்த மொட்டைப்பாறைல எங்கயோ புதைச்சுட்டார். அது இங்கே தான் எங்கோ இருக்குன்னு சொன்னான். நாங்களும் அவனை அது எங்க இருக்குன்னு கேட்டு மிரட்டினோம். அவன் தன்னைத் தப்பிக்க விட்டா சொல்றேன்னு சொன்னான். எங்களைப்பத்திச் சரியாத் தெரியாத மடையன்.

    அந்த உண்மையைக்கேட்டு வெற்றிவேலை நாயை ஏவி விட்டு சித்ரவதை பண்ணோம். அப்ப நாங்க மண்டைல அடிச்சதுல அந்தப்பாவி உண்மையைச் சொல்லாமலே செத்துப்போனான். அந்த நேரம் பார்த்து லட்சுமணனைத் தேடி இங்கு வந்த பத்மா அந்தக் கொலையைப் பாத்துட்டா. அதனால வேற வழியில்லாம அவளையும் கொலை செய்தோம். அதுல லட்சுமணனுக்கு வருத்தம் தான். ஆனாலும் அந்தக் குடிகார லட்சுமணனுக்குக் கத்தையா வந்த காசையும், புதையல் பங்கையும் விடத் தன் தங்கச்சி உயிர் அப்பப் பெரிசாத் தெரியலை.

    செத்தது ஆஃபீசரில்லையா? அதனால அது ஊருக்குள்ள விபத்தாத் தெரியணும்னு பத்மாவுக்கும் வெற்றிக்கும் தொடர்பு, அண்ணனுக்கு பயந்து தற்கொலைன்னு ரெண்டு பேரும் கைபிடிச்சுகிட்டு விழுந்து செத்ததா செட் பண்ணிக் கதை கட்டினோம்.இதோ இந்த போலீசும் பத்மாவோட போஸ்ட்மார்டம் ரிபோர்ட்டை மாத்தி எழுதினேன். லட்சுமணனும் அழுத முகத்தோட அழகா நடிச்சான். சரி அத்தோட முடிஞ்சுரும்னு தான் நினைச்சேன்.ஹோமிசைட்னு பதிவான கேசையும் விபத்துன்னு சொல்லி க்ளோஸ் பண்ணினோம். ஆனா இப்படி ஊர் வந்து போனா புதையலை எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு தான் பூசாரிக்கு காசு கொடுத்து சும்மா ஈசானிக்கதையை உருவாக்கினோம். ஊரே மொட்டைப்பாறைக்கு வர பயந்துச்சு.அதுக்கு சரியா எங்க ஆள் காபாளிகனைக் காவலுக்குக் போட்டோம்.காலையில் காபாளிகன் இரவில் எங்களுக்கு அடியாள்.

    ஆனா பத்மாவும் வெற்றியும் செத்த அன்னிக்கே, பத்மாவோட சினேகிதி கற்பகம் என் கிட்ட வந்து "அண்ணே பத்மாவைப்பத்தி எனக்குத் தெரியும். அதுக்கும் வெற்றிவேலுக்கும் சம்மந்தம் இல்லை, இது வேற யாரோ செஞ்ச வேலை. நீங்க என்னான்னு பாருங்கண்ணே"ன்னு சொல்லிச்சு. இந்த மாதிரி இது வேற யார்கிட்டயாவது குறிப்பா அம்பலத்தார்கிட்ட சொல்லி வச்சா வெவகாரமாயிடும்னு அந்த கற்பகத்தையும் கொன்னுடலாம்னு ப்ளான் பண்ணோம்.அதுக்கு அந்த ஈசானிச் சாமிக்கதையையே யூஸ் பண்ணோம்.

    லட்சுமணன் தான் ராத்திரி கற்பகம் வீட்டுக்கு ஜவ்வாது சுருட்டு வாசனையோட ஈசானிச்சாமியாப் போனான். ஓடறதுக்கு வசதியாப் பின் கதவை திறந்து வச்சுட்டு, மூஞ்சியைப் பாக்கக்கூடாதுன்னு விளக்கையும் அணைச்சுட்டு சாமி போல காதுகிட்டப் பேசி மிரட்டினான். மறு நாள் காலையில் நல்லவன் போல அவ கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொல்லி, அவனோட வீட்டுக்குப்பின்னாடி இருக்கும் எங்க ஸ்பெஷல் குகை வழியா இங்க கூட்டிக்கிட்டு வந்தான்.

    இங்க நானும், ஐயாவும், காபாளிகனும் ரெடியா இருந்தோம். வழக்கம் போல கொலை பண்ணி விபத்து மாதிரி செட் பண்ணோம். ஊரும் கதையக்கேட்டு மெரண்டு போச்சு, உண்மையிலேயே இங்க யாரும் வரப் பயந்தாங்க. அதனால நாங்களும் தைரியமா புதையல் வேட்டையில் இறங்கினோம்.ஆனா வெற்றிவேல் பத்தின சந்தேகத்தோட பத்மாவோட இன்னொரு சினேகிதி ராக்காயியையும் கொல்ல வேண்டி வந்துச்சு.

    அப்படி ராக்காயியை மிரட்டிட்டு வீட்டுக்கொல்லைப்புறம் வழியாக நாங்க தப்பி ஓடும் போது மரகதம் எங்களைப் பார்த்துட்டா. அதனால மரகதத்தையும் ராவோட ராவா தூக்கிட்டு வந்து கொலை செய்ய வேண்டியதாப்போச்சு. ஒரு கொலைய மறைக்க எம்புட்டு கொலை பாருங்க?"என்று பெருமை போல பேசிவிட்டு க்ளாசிலிருந்து ஒரு சிப் அடித்தான் அந்த சாமியாடி சுகுமார்.

    "ஆனா லட்சுமணனை ஏன் கொன்னீங்க?"

    "அதுவா?..லட்சுமணன் ஒரு குடிகாரன். காசைப்பாத்ததும் தங்கச்சிய மறந்தவன் தான் ஆனாலும் பேச்சிகிட்ட அவனால சும்மா இருக்க முடியாது, எதையாவது உளறிவைப்பான்னு எங்களுக்கு சந்தேகம் வந்தது. அதுக்கேத்த மாதிரி பத்மா இறந்ததிலிருந்து அடிக்கடி அந்த பேச்சி அவன் வீட்டுக்கு வர ஆரம்பிச்சா. அதனால அவளையும் கொன்னுடலாம்னு நினைச்சோம். அது லட்சுமணனுக்குத் தெரிஞ்சதும் சண்டை போட்டான். பேச்சிகிட்ட அவ வீட்டுக்கேப் போய் சொல்லப்போனான். நல்லவேளையா நான் பின்னாலேயே போய் அவனை ஜன்னல் வழியா மிரட்டினேன். அவனை சமாதானப்படுத்தி ஐயாகிட்ட அனுப்பிட்டு நாங்க ஏற்கனவே ப்ளான் பண்ண மாதிரி நானே பேச்சியை மிரட்டினேன். அவளை நம்ப வச்சு மறு நாள் லட்சுமணன் வீட்டுக்கு வரும்படி செய்தேன். ஆனா அப்பத் தான் நீயும் அந்த மீனாட்சியும் குறுக்க வந்தீங்க."

    "லட்சுமணனை தண்ணியை ஊத்தி மட்டையாக்கி அவுட் ஹவுஸில் அடைச்சு வச்சுட்டு, பேச்சியைப்போட்டுத்தள்ள நானும் காபாளிகனும் வந்தோம். ஐயா கோவில்ல வெயிட் ப்ண்ணிக்கிட்டு இருந்தார். பேச்சிக்காக லட்சுமணன் வீட்டுல நானும், காபாளிகனும் ரெடியா இருந்த போது அவளுக்குப் பின்னாடியே நீங்க ரெண்டு பேரும் வர்றதைப் பாத்தோம். உடனே நாங்க ஒளிஞ்சுகிட்டோம். பேச்சி திரும்பிப்போனதும் நீ இந்தப் பக்கம் வந்து பின்பக்கமாப் போனதைப்பார்த்தோம். அந்த நேரம் மீனாட்சி இங்கே வந்தாள்.அது தான் சரியான சமயம்னு சொல்லி அவளைப் பேச்சிக்காக கொண்டு வந்த மயக்கமருந்து வச்சு மயக்கமடையச் செய்தோம்.காபாளிகனை அவளைக் கருவேலங்காட்டுக்கு தூக்கிட்டுப்போய் பாதி வழில கீழ போட்டுட்டு வரஸ் சொன்னேன். அத்தோட அவ பயந்து இந்த விஷயத்துல தலையிட மாட்டான்னு நெனச்சுட்டோம். தப்புக்கணக்குப்போட்டுட்டோம்.நீ திரும்பி வந்ததும் நாங்க ரெண்டு பேரும் அந்தக்குகை வழியா வழக்கம் போல அந்த ஊருக்குப் போயிட்டோம்

    அன்றைக்குப் பேச்சி தப்பிச்சுட்டா, ஆனா லட்சுமணன் கோபத்துல துள்ள ஆரம்பிச்சான். ஊருக்குள்ள போய் சொல்லிடுவேன்னு மெரட்டினான்.தன் தங்கச்சியைத் தான் காசைக்காட்டி கொன்னுட்டோம், ஆனாக் காதலியையும் கொல்ல விடமாட்டேன்னான். அதனால பேசாம அவனைக் கொன்னுட்டா எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு நெனச்சு அவன் கதையை முடிச்சு அரசமரத்துல தொங்க விட்டோம்.

    மொத்த கதையும் முடிஞ்சதுடா சாமின்னு அக்கடான்னு நாங்க இருந்தா நீ வந்து எக்குத்தப்பா கேள்வி கேக்குற.

    அப்பவே எனக்கு திக்குனு இருந்துச்சு. இது பத்தாதுன்னு சென்னைல இருந்து இந்த கேஸ் விஷயமா யாரோ மனு கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரிய வந்தது. விசாரிச்சதுல அது மீனாட்சின்னு தெரிஞ்சது. அப்பத்தான் நாங்க மாஸ்டர் ப்ளான் போட்டோம்."என்று சொல்லி முடித்து க்ளாஸில் இருந்த மிச்சத்தைக் குடித்து முடித்தான்.

    "எங்க மாஸ்டர் ப்ளான் ஸ்க்ரிப்ட் என்னன்னா? புதையல் ஆசைல நாங்க செஞ்ச எல்லாத்தையும் அம்பலத்தார் தான் செய்தார், கடைசியா உண்மையைத் தெரிஞ்சுகிட்ட மீனாட்சியை அவர் கொலை செய்யும்போது இந்தக் கடமை தவறாத போலீஸ்காரனிடம் மாட்டிக்கறார். அப்ப நடக்கிற சண்டையில் தற்காப்புக்கருதி இந்த சுகுமாரன் அம்பலத்தாரை சுட்டுக் கொல்றார்.காபாளிகன் தப்பி ஓடறான்,அவனை இன்னிக்கு ராத்திரியோட யாரும் பார்க்க முடியாது. அம்பலத்தார் தான் தன்னை மிரட்டிக் காரியம் சாதித்ததாகப் பூசாரியும் சாட்சி சொல்றார்.

    இதான் எங்களோட மாஸ்டர் ப்ளான். இதுக்கிடையில் அம்பலத்தார் தனக்குப்பின் தன் சொத்தெல்லாம் தன் தம்பியான தண்டபாணிக்குத்தான் சொந்தம்னு மனமுவந்து எழுதிக்கொடுத்து அதாவது இந்த பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்திடறார்.

    ஆக..எல்லாக்கேஸிலிருந்தும் தண்டபாணி எஸ்கேப். சொத்தும் கைக்கு வந்துடும். எப்பூடி? எல்லாம் செட்டப்பா ரெடி ஆயாச்சு.நீ உன் ஃப்ரெண்ட் கூடயே திரிஞ்சியே.. உன்னைத் தனியா கவனிக்கலாம்னு பாத்தோம். இப்பப் பரவாயில்ல. உன் காதலி மீனாட்சியைக்காப்பாத்த வந்த இடத்தில் உன்னையும் சேர்த்து இந்த அம்பலத்தார் கொன்னுட்டார்னு ஆக்கிடுவோம்." சுகுமாரன் வேடிக்கை போல சொல்லிச் சிரித்தான்.

    "இத்தனை பேரைக்கொன்னு போட்டா சட்டம் உங்களைச் சும்மா விடும்னா நெனச்சீங்க அப்பா?"நடேசனுக்கு அருவருப்பாய் இருந்தது. அழுதுவிடுவான் போலிருந்தது.

    "சட்டமா?? இதோ இந்த சட்டமா?"என்று அருகில் க்ளாஸில் விஸ்கியை நிரப்பிக்கொண்டிருந்த சுகுமாரனைக்காட்டிச் சிரித்தார் தண்டபாணி.

    "இந்த ராஸ்கல் மட்டும் தான் சட்டமா?"கதிர் உறுமினான்.

    "அட சட்டத்துல இருக்கற ஓட்டையெல்லாம் எங்களுக்கு அத்துப்படி. அதப்பத்தி நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குவோம்.சாகப்போற நேரத்தில் உனக்கெதுக்குப்பா அந்தக் கவலை?"

    அது வரை மயக்கத்தில் இருந்த அம்பலத்தார் அப்போது தான் கண்விழித்தார்.தன்னைச் சுற்றிலும் பார்த்தார்.

    “அடப்பாவி டேய்..தண்டபாணி என்னடா இது? என்ன பண்ணப்போறே?"

    "ம்.? நீ தலைச்சன் பிள்ளையில்லையா? அதான் உன்னை பலி கொடுக்கப்போறேன்."என்று சிரித்தார்.

    "டேய்..உனக்கு என்னடா குறை வச்சேன்?என் சொந்தத் தம்பி போலத் தானேடா பார்த்துக்கிட்டேன்”அம்பலத்தார் புலம்பினார்.

    “என்ன பார்த்துக்கிட்ட? ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் இலவசமாக்குடுத்தியே? சொந்தத் தம்பிக்குச் சொத்தெழுதிக்கொடுத்தியா? “

    “என்னடா இது? அதுக்காக இவ்வளவுக்கா துணிஞ்சுட்ட? “

    “ம்ம். பேசியதெல்லாம் போதும்..டேய் போய் மீனாட்சியைத் தூக்கிட்டு வாங்கடா. ”

    "மீனாட்சியா?டேய் அந்த புள்ளையை விட்டுடுடா சின்ன பொண்ணுடா."

    "ம்ஹ்ம்..முடியாதுடா, அதுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சு போச்சு. உயிரோட விட்டா நாளைக்கு எனக்குத் தான் எமனா வந்து நிக்கும். சரி..எதுக்கு விட்ட குறை..தொட்ட குறை. உன்னையும், இதுங்களையும் போட்டுட்டா இனி எந்த பிரச்சனையும் வராதுன்னு முடிவு பண்ணித் தான், சும்மா பேருக்கு சொல்லி வச்ச குருபூஜையை உன் பலிபூஜையா மாத்தி ரெடி பண்ணியிருக்கோம்.

    எங்கயாவது பலி ஆடு தானா மேடைக்கு வந்துப் பார்த்திருக்கியோ? அது நீ தான். இந்தக் காபாளிகனை யார்னு நினைச்சே? என் ஆளுடா அவன்..அது தெரியாமல் பூசாரி சொன்னான்னு நீயும் அவனை மொட்டைப்பாறைக்குக் காவலுக்கு வச்சியே..அவன் எதுக்குக் காவல் இருந்தான் தெரியுமா?"சிரித்தார் அவர்.

    "டேய் வேணாண்டா தம்பி.. என்னைக் கொன்னா உன்னைத்தான் பிடிப்பாங்க.வேணாண்டா"

    "என்னை ஏன் பிடிக்கிறாங்க?ஓ...ரைட்..ரைட். இவன் போய் சொல்லுவான்னு நினைச்சியா?" என்று கதிரைப்பிடித்து அவர் முன்னால் கொண்டு வரச்சொன்னார்.

    கதிரைப்பார்த்ததும் அம்பலத்தாருக்கு சர்வமும் அடங்கி விட்டது."தம்பி..நீ..நீங்களுமா..எப்படி இவங்க கிட்ட...கடவுளே.."

    "டேய்..ஏற்கனவே ஆறு பேர். இப்ப நான்..மீனாட்சி..கதிர்..இன்னும் எத்தனைக் கொலை?ஊர் பார்த்துகிட்டு சும்மா இருக்கும்னு நினைச்சியா?இன்னியோட உனக்கு கெட்ட நேரம் ஆரம்பம் தண்டபாணி."அம்பலத்தார் அழுகையினூடே சொன்னார்.

    "அடப்போடா..என்னைக் காப்பாத்திக்க எனக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆனா நீ சாகறது எனக்கு டபுள் சேஃப்டி. அதனால் ரொம்பப் பேசாம அமைதியா இரு. மீனாட்சி வந்ததும். வரிசைப்படி கொலை பண்ணுவோம். அதுக்கு முன்னாடி உன்னோட கொஞ்சம் வேலை இருக்கு.."என்றவர் சுகுமாறனிடம் திரும்பிக் கேட்டார்"சுகுமாறா நம்ம பைரவன் எங்க?"

    "அதோ" சற்றுத் தொலைவில் இறைச்சியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்த ஒரு பெரிய கருப்புநாயைக் கைகாட்டினான் சுகுமாறன்.

    "அது யார்னு தெரியுதாடா அண்ணா? அதான் நம்ம பைரவர் சாமி. வெற்றியிலிருந்து லட்சுமணன் வரைக்கும் எல்லாரையும் ஒரு வழி பண்ணின என்னோட பைரவன்.

    “டேய் வேணாண்டா..தண்டபாணி வேணாண்டா..என் சொத்தெல்லாம் கூட உனக்குக்கொடுத்திடறேன்.. விட்டுடுடா..”

    "வெரி குட். அது தான் எனக்கும் வேணும். பத்திரமெல்லாம் கூட ரெடி. நீ கையெழுத்துப்போட வேண்டியது தான் பாக்கி. ஆனா அதுக்காக உன்னை உயிரோட எல்லாம் விட முடியாது. இந்த கேஸ் ஒன்ஸ் அண்ட் ஃபார் ஆல் க்ளோஸ் ஆகணும்னா நீ சாகணும். அதுக்கு முன்னாடி அந்த வெற்றிப்பய வந்து உன் கிட்ட சொன்ன அந்தப் புதையல் ரகசியத்தை எனக்குச் சொல்லு. அது எங்க இருக்கு? இங்க தான் இருக்கா? இல்லை நீ ஏற்கனவே எடுத்து வச்சிட்டியா?"

    "டேய் அப்படி ஒரு புதையலே இல்லைடா. அதையெல்லாம் அப்பவே அரசாங்கத்துகிட்ட ஒப்படைச்சுட்டார்டா நம்ம தாத்தா."

    "பொய் சொல்லாதடா.."

    "இல்லடா.."

    “அய்யா..அய்யா...”ஒருவன் ஓடி வந்தான். “என்னடா?”

    “கோடவுன்ல தீப்பிடிச்சுருச்சுங்கய்யா..மொத்தமும் பத்தி எரியுது.”

    “என்ன?அப்ப அந்த மீனாட்சி புள்ள?”

    “மீனாட்சி....”உச்ச பட்ச குரலில் அலறினான் கதிர். எங்கு தான் வந்ததோ அத்தனை வேகம்? பிடித்திருந்தவர் முதற்கொண்டு அத்தனை பேரையும் அடித்து துவம்சம் பண்ண ஆரம்பித்தான். நடேசனும் சேர்ந்து கொண்டான்.தண்டபாணியின் அடியாட்களை அடித்துத் துவைத்தனர் இருவரும். சன்னிதானத்துக்கு எதிரில் நடப்பட்டிருந்த இரும்பு வேல்கம்புகளில் ஒன்றைப்பிடுங்கி அடிக்க ஆரம்பித்தான் கதிர். கண்பட்ட இடமெல்லாம் ரத்தம் தெரித்தது. தண்டபாணியின் தலையில் விழுந்த அடியில் அட்டையாய்ச் சுருண்டு மயங்கி விழுந்தார் அவர்.துப்பாக்கியுடன் முன்னால் வந்த சுகுமாரனுக்கு கழுத்தில் விழுந்தது அடி, கோணிக்கொண்ட முகத்தோடு எங்கோ போய் இடித்துக்கோண்டு விழுந்தான்.வலியில் துடித்துக்கொண்டும் எழ முயன்றான் முடியவில்லை. ஆனால் கதிர் விடவில்லை..கதிரின் வெறி ஏறவும் அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

    பத்து பதினைந்து போலீஸ் சின்னக்கருவேலம்பட்டி பக்கமிருந்து ஓடி வந்தனர், அதற்குள் லட்சுமணனின் வீட்டின் குகை வழியாக மணி மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்தனர். கதிரை அந்தக்கோலத்தில் கண்டதும் மணி ஓடி வந்து கதிரின் ஓங்கிய கையில் இருந்த வேல்கம்பைப் பிடுங்கி எறிந்தான்.

    தண்டபாணி, சுகுமார்,காபாளிகன், பூசாரி ஆகியோர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டது.அவரிடம் ஓடிப்போன கதிர் அவரது சட்டையைக்கொத்தாய் பற்றினான்."டேய்..உன்னோட கோடவுன் எங்க இருக்கு..சீக்கிரம் சொல்லுடா"

    “கதிர்,,டேய்...கதிர்..என்னடா ஆச்சு?..கதிர்..”மணி அவனைப்பற்றி இழுத்து சமாதானப்படுத்தத் தொடங்கினான். ஆனால் கதிரோ திமிறினான். அவன் கண்கள் அலைபாய்ந்தன.

    "என்னடா..சொல்லுடா கதிர்"

    “மீனாட்சி,,,,”விக்கி விக்கி அழுதான் கதிர்.

    “மீனாட்சி? மீனாட்சிக்கு என்ன?மீனாட்சிக்கு என்னடா கதிர்?”மணியின் குரலிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.


    நிலா இன்னும் ஒரே ஒரு வாட்டி வரும்
     
    Last edited: Jan 28, 2011
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அட கதை கடைசீல இப்படி ஆகி போச்சே பாவம் நடேசன எல்லோரும் தப்ப சொல்லிடோமே..அவங்க அப்பா தான் அந்த கருப்பு ஆடா. கூட துணைக்கு இன்ஸ்பெக்டர், காபளிகன் எல்லாருமா :rant

    நல்லா போச்சு இன்னையே பகுதி. எல்லாத்துக்கும் ஒரு விடுவு வந்தது.
    அச்சோ மீனாட்சி தப்பிச்சது தெரியாம கண் கலங்குறானே கதிர். கதிர் உன் ராசாத்தி எஸ்கேப்பு :)

    அச்சோ அடுத்த பகுதியோட முடியுதா??? அப்போ சுபஸ்ய பகுதியா...நாளையாவது கதிர் தன் காதல சொல்லுவானா???:rotfl

    அசத்திடீங்க மலர்..யாருட அதுன்னு யோசிக்க வெச்சு, படிக்கிறவங்கள கலங்க வெச்சு, பயமூருத்தி கடைசீல இவன்தாண்ட அவன்னு சொல்லிபுடீங்க :thumbsup

    அடுத்த பகுதி எப்போ பா போடறீங்க கொஞ்சம் சீக்கரம் அந்த நல்ல காரியத்தை பண்ணுங்க
     
  3. priyasaki

    priyasaki Gold IL'ite

    Messages:
    712
    Likes Received:
    386
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi Malar,

    kolaikaaran yaarunu sollitinga....
    seekram kadhal jodi ya serthu vechudunga pa...
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒரு வழியா சஸ்பென்ஸ் ஓடச்சியே கண்ணு... மவராசி... நீ நல்லா இருப்பே...

    அங்க, சுத்தி, இங்க சுத்தி, எங்களை யோசிக்க வெச்சுப்புட்டு... கடசில இந்த ஆள் தானா அது???

    பயபுள்ளைக... சொத்துக்காக என்னவெல்லாம் பன்றானுகப்பா... :bonk:bonk

    அச்சோ.. பாவம்.. மீனாட்சியப் பத்தி சரியாத் தெரியாம இந்த கூறு கெட்ட பயபுள்ள அழுவுதே... :):)

    ரொம்ப நல்லா இருக்கு மா. நீங்க எழுதற விதம், சுவாரஸ்யத்தை கொறைக்காம, திரும்ப திரும்ப வந்து படிக்கற ஆர்வத்தைக் கூட்டுது. :thumbsup:clap:clap

    அப்டியே, அந்த கடைசிப் பகுதியையும் இன்னைக்கே போட்டு இருக்கலாம்ல :crazy
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    நான் முதலில் இருந்து திரும்ப படிச்சுட்டு fb தரேன் மலர்:)
     
  6. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Hey Malar,

    Waiting for final Episode...

    Regards
    Uma
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    aiyaiyo... nadesan oda appa panna kuthathuku naan avan pali sollitene...
    super ah iruku malar... aana police ku epadi news pochu???
    epadi avanga suthi valaichanga??? :confused2:
     
  8. apar_ram

    apar_ram Silver IL'ite

    Messages:
    804
    Likes Received:
    48
    Trophy Points:
    70
    Gender:
    Female
    malar.... aruputhamaa kondu poneenga kathaiya.. paavam natesan naanga evlavu per avan perla pazhi pottom, kadaisila avangapparu ellam pannirukkaru.adtuthatum pottutadrennu sonneengale!!!
    Aparna
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்று தான் விட்ட பகுதியிலிருந்து படித்தேன் மலர். அப்ப்ப்பப்........பாடா.... நல்லவேளை. ஒரு வழியா சஸ்பென்ஸ் முடிந்துவிட்டது. இல்லாவிட்டால் நான்......:spin:spin

    (கொஞ்சம் பிஸி ஆகிவிட்டேன் மலர். அதனால் தான் வந்ததும் ஓடி விடுகிறேன். இன்று தான் ரொம்ப நேரம் இருந்தேன். உங்கள் கதையின் இறுதி அத்தியாயத்துக்கு வரும் போது, மறுபடியும் நிதானமாய் படிக்க வேண்டும் நான் முதலில் இருந்து.)
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    enna koduma sir idhu....ivandhan kutravaliya.....

    final episode paduchitu detailed a FB kudukaren.....:)
     

Share This Page