1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரத்த தானம் ! by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 2, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரத்த தானம் !

    ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான்.

    ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், கொடுக்க ஆசை தான் ஆனால்........தயக்கமும் பயமும் மிக அதிகமாய் இருந்தது.

    ஆனால் அவன் தன் கண்களை இன்ஷூர் செய்து இருந்தான். அது இறந்த பிறகு தானே எடுப்பார்கள் என்று [​IMG][​IMG][​IMG]

    இப்படி எதையோ யோசித்துக்கொண்டு இருந்த போது ஒரு சிறு பெண் இவன் அருகே வந்தாள்.

    இவனின் கைகளை பார்த்த வாறே, "அங்கிள், நீங்க இன்னும் ரத்தம் தரலையா ?" என்றாள்...................
    அவ்வளவு சிறிய பெண்ணிடம் தனக்கு பயம் என்று சொல்ல இவனுக்கு சங்கடமாய் இருந்தது.

    எனவே, இவன் பேச்சை மாற்றி, " ஹாய், நீ எப்படி இங்கே? " என்றான்.

    "எங்க அப்பா தான் ஆர்கனைசர், நான் அவருடன் கூட வந்தேன். " என்றாள்.

    மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமன... . "ஒ " என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

    ஆனால் அவள் விடாமல், " நீங்க இன்னும் ரத்தம் தரலையா என்று கேட்டேனே".....என்றாள்..............

    இவன் 'ஏதுடா இது வம்பாய் போச்சு'............என்று நினைத்து ...........என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், மீண்டும் பதில் சொல்வதற்குள் அந்த பெண் யாரையோ பார்த்து விட்டு , ' ஒரு நிமிஷம்" என்று இவனிடம் சொல்லி விட்டு ஓடினாள்.

    மீண்டும் வந்தாள் இவனிடம்....அவள் கை இல் ஒரு சின்ன நோட்டு புத்தகம் இருந்தது, அதை பார்த்தவாறே வந்தாள் அவள்.

    அவள் மீண்டும் கேட்பதற்கு முன், இவனே, " இங்கெல்லாம் வருகிறாயே உனக்கு பயமாய் இல்லை? " என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து இவனிடம் தன் நோட்டை நீட்டினாள். பார்த்தால், அதில் நிறைய பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள். இவளை வாழ்த்தி இருந்தார்கள்...........

    இவன் "என்ன இது?" என்று கேட்டான்.............

    அதற்கு அந்த குட்டிப்பெண் சொன்னாள், "போன வருடம் எனக்கு ஒரு அக்சிடென்ட் ஆனது, நிறைய ரத்தம் போய்விட்டது, அப்போது பலபேர் கொடுத்த ரத்தம் தான் என்னை காப்பாற்றியது. அப்போதிலிருந்து தான் என் அப்பா, இது போல முகாம்கள் நடத்த துவங்கினார். நானும் அவருடன் வருவேன், யார் ரத்தம் கொடுத்தாலும் அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வேன்.

    எனக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் அப்பா சொல்வார் 'இப்படி ரத்தம் கொடுப்பவர்கள் எல்லாமே மற்றவருக்கு உயிர் கொடுக்கும் கடவுள்கள் தான்' என்று. அதனால் தான் நான் அவர்களிடம் சென்று நன்றி சொல்லி, ஆட்டோகிராப் ம் வாங்கி வைத்துக்கொள்கிறேன்.

    நான் பெரியவளானதும் தொடர்ந்து கொடுப்பேன். இப்போ வெல்லாம் நாம் ஒருமுறை ரத்தம் கொடுப்பதை வைத்து 3 பேரை காப்பாற்றுவார்களாம் அங்கிள்" என்று ரொம்ப பெரிய மனுஷி போல பேசினாள் அவள்.

    "உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம்
    பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "

    மேலும் சொன்னாள் , "நீங்கள் பேசியதை நான் கேட்டுவிட்டேன் அங்கிள், சாரி , ஆனால் ஒரு பயமும் இல்லை , அப்படியே பயம் என்றாலும் நீங்க ரத்தத்தை பார்க்காதீங்க , நான் உங்க பக்கத்தில் இருக்கேன், வாருங்கள்" என்று அன்பாய் அவன் கையை பிடித்து இழுத்தாள்.

    அந்த சின்ன பெண்ணின் பேச்சை மீற முடியாமல், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல, அவளை பின் தொடர்ந்தான் அவன். அவள் உள்ளே அழைத்து சென்று அவனை படுக்க வைத்தாள் . கூடவே நின்று கொண்டாள். அவள் தந்தை அவளை பார்த்ததும், " நீ ஏன் உள்ளே வந்தாய் அம்மா?" என்றார்.

    இவள் உடனே, "இல்லப்பா, இந்த அங்கிள் சிக்கிரம் போகணுமாம், அங்கு ஒரே கூட்டம் என்று நான் தான் முதலில் இவருக்கு ரத்தம் எடுக்க இங்கு கூட்டி வந்தேன் " என்றாள்.

    "ஒ...அப்படியா.............சரி சரி, ஒரு நிமிடம் சார்" என்று சொல்லி அவர் யாரையோ கூப்பிட்டு ராம் ஐ கவனிக்க சொன்னார். ராமை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தாள், தான் சொன்ன படிக்கு அந்த குட்டிப் பெண் ராமுடனேயே நின்று கொண்டாள்.

    நர்ஸ் ஊசி போடும்போது, ஒரு எறும்பு கடித்தது போல உணர்ந்தான் ராம். அவ்வளவு தான். 'ச்சே ! இதற்காகவா இத்தனை நாளும் பயந்தேன்' என்று நினைத்துக்கொண்டான்.

    அவன் மீண்டும் வெளியே வரும் போது தன்னை ஒரு புது மனிதனாய் உணர்ந்தான். இறந்த பிறகு நாம் யாருக்கு பயன் பட்டோம் என்று நமக்கு தெரியாது, ஆனால் இப்போது நாம் உயீருடன் இருக்கும் போதே உதவுவது என்பது சொல்ல வொண்ணாத நிம்மதி தருவதை முதன் முதலில் உணர்ந்தான்.
    இனி கண்டிப்பாக தொடர்ந்து ரத்த தானம் செய்யணும் என்று முடிவு செய்து கொண்டான்.

    அதற்கு காரணமாய் இருந்த அந்த சிறுமியை நன்றியுடன் பார்த்தான். அவள் இவனிடம் தன் ஆட்டோகிராப் நோட்டை நீட்டும் போது இவன் சொன்னான், " நீ தான் மா எனக்கு போட்டுத் தரணும் " என்று.

    அப்போது அங்கு வந்த இவன் நண்பர்கள் இவன் கையை பார்த்துவிட்டு, " எப்படிடா? அதுவும் எங்களுக்கு முன்னாடியே கொடுத்துவிட்டாய் " ? என்று ஆச்சர்யமாய் கேட்டார்கள். அவன் அவளை காட்டினான் [​IMG]

    இந்த விளம்பரமும் ஏனோ அவன் கண் முன்னே நிழலாடியது [​IMG]

    https://www.youtube.com/watch?v=E9QxiGPwab4
     
    Barbiebala, Caide and sindmani like this.
    Loading...

  2. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    எப்போதும் போலவே, இந்த கதையும் மிக அழகு மா.


    அதுவும், அந்த சிறுமி ராம்-ஐ காட்டி கொடுக்காமல் (அவரின் பயம் பற்றி அவரின் தந்தையிடம் சொல்லாதது) இருந்தது மிகவும் அற்புதம்.


    அதை வெளிப்படையாக சொல்லாமல் கண்களால் பேசியது - உங்களின் usual touch.


    கதை நன்றாக இருந்தது மா. :clap
     
  3. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    And one more thing ma, your (this) story is the one which I'm commenting/posting as my 100th one.

    And have changed from New Ilite to senior Ilite.

    I'm happy for that. After posting it only, I saw that. :):lol:
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி சுந்தர் [​IMG]
     
    1 person likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    waaw !.............:wow........super !..................I am also happy for you !:clap :clap :clap
     
    1 person likes this.
  6. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Thanks so much ma. I too am so :boo:happy to have commented 100th time in your story. :))))
     
  7. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அருமையான கதை மா. As usual you have taken a good concept and very well narrated.
     
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Congrats Sundar. :clap.
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Thanks madam. Happy to be a part of IL :)
     
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Your most welcome. No madam please. Yes IL is a wonderful forum to share, to know and to gain.

    All the best.
     
    1 person likes this.

Share This Page