1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்க&#2

Discussion in 'Posts in Regional Languages' started by iyerviji, Dec 3, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    எனக்கு ரொம்ப பிடித்தது கறிகாய் வாங்குவது.
    அதனினும் ரொம்ப ரொம்ப பிடித்தது இண்டஸ்ஸுக்கு வந்து என் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது

    நாங்கள் வாரத்துக்கு ஒரு தடவை கறிகாய் வாங்க போவோம். நான் போவேன் இல்லாவிட்டால் என் கணவர் போவார் . இப்போ அவருக்கு கொஞ்சம் நடப்பது கஷ்டமாக இருப்பதால் நான் இன்று கறிகாய் வாங்க போனேன்.

    கறிகாய் வாங்குவதும் ஒரு கலை. கறிகாய் காரருடன் பேரம் பேசத் தெரியவேண்டும். ஒரே ஒருவரிடம் கறிகாய் வாங்கினால் அவர் நமக்கு கொஞ்சம் விலை குறைத்து தருவார். நாங்களும் எப்போதும் ஒரே ஒருவரிடம் எல்லா காய்களையும் வாங்குவோம். இலவன், சேனை, பரங்கிக்காய், பொடலங்காய், சேப்பங் கிழங்கு , வாழைக்காய் , காரட் , பீட்ரூட் எல்லாம் ஒருவரிடமே கிடைக்கும். இன்று இது எல்லாம் வாங்கினேன், பொடலங்காய் மட்டும் வாங்கவில்லை , ஏன் என்றால் எனக்கு அது பிடிக்காது. தவிர அவரைக்காயும் , பாவக்காயும், வெங்காயம், பொட்டேடோ கூட வாங்கினேன். வித வித மாய் கறிகாய் வாங்கினாலே எல்லாம் சமைத்து சாப்பிட்ட உணர்வு வந்து விடும்.

    இப்போ பத்து நாளைக்கு கவலை இல்லை . ஒரு நாள் அவியலும் சாம்பாரும் ஒரு நாள் மிளகூட்டல், ரசம் , ஒரு நாள் மோர்குழம்பு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் என்று வித வித மாய் சமைக்கலாம் , இரண்டு ரூபாய்க்கு நிறைய கறிவேப்பிலையும் வாங்கி இருக்கேன்.

    இதெல்லாம் வாங்கினால் மட்டும் போறாது, எல்லாத்தையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு சரியாக பிரிட்ஜில் வைக்க வேண்டும். அப்பதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும்.
    இங்கே மும்பையில் வெஸ்ட், ஈஸ்ட் என்று இரண்டு பக்கம் உண்டு. நாங்கள் ஈஸ்டில் இருக்கோம் . ஈஸ்டில் கறிகாய் விலை ரொம்ப ஜாஸ்தி அதனால் நங்கள் வெஸ்டுக்கு போய் தான் வாங்குவோம். அதற்கு பிரிட்ஜ் கிராஸ் பண்ணி போகணும். எப்போதும் நான் பிரிட்ஜ் கிராஸ் பண்ணி தான் போவேன் . ஆனால் இன்று ஆட்டோவில் வெஸ்ட் வரை போனேன். கறிகாய் வாங்கியதும ஆட்டோவில் வந்து விட்டேன் அதனால் இன்று பிரிட்ஜ் ஏற வேண்டி வரவில்லை. இடுப்பும் வலிக்க வில்லை.

    இது நம் ஒவ்வொருவருக்கும் அன்றாட அலுவல். இதை நாம் அழகாக ப்ளான் பண்ணி, அதன் படி செயல் பட்டு, ரசித்து செய்தால் அதில் கிடைக்கும் இன்பமே அலாதி.

    எதைச் செய்தாலும் நாம் அனுபவித்து, ரசித்து செய்தால் அதன் சுவையே அலாதி. நான் ரசித்து செய்வதால் நான் செய்யும் சமையலின் ருசி கூடி, சாப்பிடுபவர்கள் சந்தோஷமாகி வீட்டிலே அன்பும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
     
    Last edited: Dec 3, 2010
    1 person likes this.
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    விஜி மா நீங்கள் ரசித்து செய்வதை படித்து ருசித்து மகிழ்ந்தோம்.
    நீங்கள் சொல்வதை அனைவரும் பின் பற்றினால் வாழ்க்கையே அலாதி ருசியாகிவிடும்.
    அன்றாட வாழ்க்கையில் நடப்பதை வைத்து வாழ்க்கை ருசிக்க, அழகான கருத்தும்மா.
     
    Last edited: Dec 3, 2010
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    உங்கள் அளவு ரசித்து செய்வில்லை என்றாலும், உங்கள் எழுத்தை மிகவும் ரசித்து படித்தேன், செய்யும் எதையும் ரசித்து செய்யும் உங்கள் குணம் புரிந்தது :bowdown
     
    Last edited: Dec 3, 2010
    1 person likes this.
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    Anbulla Nats

    Itho varen enru enge poyittergal adharkul Latha ungalai mundhi kondu vittargal.
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    Anbulla Latha

    Ungalai inge paarthadhil romba sandosham. Ungal kavidhaigalai neengal rasithu ezhudhugireergal. en ezhuthai rasithu paditheergal enru kettu romba sandosham
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    அம்மா... உங்கள் கைப்பக்குவம் மணக்கும் போலிருக்கிறதே.சமையலின் ருசி சமைப்பதில் மட்டுமல்ல, காய் வாங்குவதில் தொடங்கி, நம் ரசனையில் கூடி, உண்பவர்களின் மகிழ்ச்சியில் முடிகிறது என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்.:thumbsup:thumbsup:thumbsup
     
    2 people like this.
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    viji mami,
    unga availai sappida oru naal naan kandippa varuven...eppo varuven..eppadi varuven ..athu suspense..
    en FIL pudalangai na alergy...ennaku romba pidikkum..( pudalangai vangalaiya..kindal pannuvar.
    naanum varam oru murai thaan kaai vanga poven..
     
    1 person likes this.
  8. shubag

    shubag Gold IL'ite

    Messages:
    3,509
    Likes Received:
    117
    Trophy Points:
    155
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    Vijima...like you I also go to the market regularly (weekly once) and buy all the vegetables required for the week...After returning home, I clean all the vegetables, some vegetables like kovakkai, pavakkai, sorakkai, spring onions, capsicum, beans I neatly chop them and put it in plastic covers and keep it in the freezer. This way I dont have to worry about the veggies getting spoint (in case of delay in cooking) and it saves time also to cut them early in the morning. Neenga sonna maathiri elaam vegetables irunthaal samaikaradhu oru iniya anubavam !!!
     
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    Dear Nats

    Thanks for your first fb and your appreciating words
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: ரசித்துச்செய்யுங்கள் ருசித்து வாழுங்&#2965

    Dear Deva

    Nee en kai pakuvathai rusithu parthu dhan cholla vendum eppadi irukku enru. Epoo varugirai adahi rusikkarathuku. Thanks for your appreciation
     

Share This Page