1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாருடைய செயலுக்கும் கருத்து சொல்வதற்க்கு முன்...??

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Mar 3, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    யாருடைய செயலுக்கும் கருத்து
    சொல்வதற்க்கு முன்...??

    தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை...

    "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது.

    மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.

    கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
    இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

    எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

    "ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

    'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

    "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

    'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

    பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

    தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

    தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

    கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

    'உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

    கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

    'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

    அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

    *'நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

    *'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

    'நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

    பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
    '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

    ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம் என்று...

    வாழ்க்கை குறுகியது...ஆனால்,
    மிகவும் அழகானது... எனவே
    நம்மை தேடி வரும் உறவுகளை
    மதிப்போம்...‌‌.
    மகிழ்ச்சியாக வாழ்வோம்...

    jayasala42
     
    Thyagarajan and vidukarth like this.
    Loading...

  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    very nice write up madam
     

Share This Page