1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மொழி, பாஷை......by Krishnaamma :)....மினி தொடர்.....

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 30, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திவாகர் ஒரு நேர்மையான போலிஸ் இன்ஸ்பெக்டர். அவன் மனைவி சுபா. இருவரும் கருத்து ஒருமித்து, இனிதே இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது மொழியால் மட்டுமே வரும். ஏன் என்றால், திவாகருக்கு தன் தாய் மொழி மீது மிகுந்த பிரியமும் பற்றும் இருந்து வந்தது. அது பற்று என்பதைத் தாண்டி கொஞ்சம் வெறி யாகக்கூட இருப்பதாக சுபா நினைத்தாள்.


    திவாகருக்கு தன் தாய் மொழியான தமிழ் மட்டுமே உசத்தி என்கிற எண்ணம், மேலும் அவனுக்கு வேறு இந்திய மொழிகள் தெரியாது.... ஆனால் பல ஊர்களில் வசித்ததாலும், ஆர்வத்தாலும் சுபா விற்கு 5 மொழிகள் தெரியும். இதோ இப்போ து கூட பக்கத்து வீட்டில் இருக்கும் மார்வாடி இடம் 'மார்வாடி' மொழி கற்று வருகிறாள்.


    வொவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய அழகும், கம்பீரமும் தனிச் சிறப்பும் உண்டு என்பது அவள் வாதம். இதை திவாகர் எப்போதுமே ஏற்பது இல்லை. பல மொழிகள் கற்றால் மட்டுமே அதை உணர முடியும், நீங்களும் ஒன்றாவது கற்றுப்பாருங்கள் என்று அவள் எத்தனையோ முறை சொல்லி யும் திவாகர் அதை காது கொடுத்துக் கேட்டதே இல்லை.


    முண்டாசுக் கவிஞன் பாரதி கூட, 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து ' என்று சொல்லி இருக்காரே என்று இவள் கேட்டால், அவர் முதலில் அப்படித்தான் தெலுங்கு கற்கும்போது சொல்லி இருப்பார், பிறகு 'யாம் அறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று சொல்லி விட்டாரே என்பான் அவன் [​IMG]


    இப்படியாக அவர்கள் வாதம் எப்பவும் போய்க்கொண்டே இருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது அவர்கள் வாழ்வில்........
     
    Caide, sreeram and uma1966 like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வாவ் ..... அடுத்த கதை ஆரம்பித்து விட்டீர்களா ... அமர்க்களம் ....ஆரம்பமே ஆரம்பத்தில் ஆரம்பிகிறது கதை. திவாகருக்கு நமக்கு பிடிக்கும் தமிழ் மொழி பிடிப்பதால் இதன் தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.... நன்றி மா :thumbsup
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதுக்குள்ள படிச்சாச்சா இதோ போடறேன் உமா :)
     
    2 people like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திவாகர் எப்பவும் வேலை வேலை என்று இருந்ததால் சுபாவிற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதை அவள், அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கு ஹிந்தி சொல்லித்தருவதிலும், தோட்ட வேலைகள் மற்றும் தேவை இல்லாத பொருட்களை வைத்துக்கொண்டு புதிய அழகான பொருட்கள் செய்ய கத்துத்தருவதிலும் செலவழித்தாள். எனவே, எப்பவும் அவள் வீடு 'கல கல' வென இருக்கும் அவள் எப்பவும் குழந்தைகள் நடுவிலேயே இருப்பாள்.

    திவாகரும் இதற்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டான். சுபாவுக்கு மகிழ்ச்சி தரும் எதற்கும் அவன் குறுக்கே நிற்பது இல்லை. இவன் வேளை கெட்ட வேளை இல் வெளியே போவதும் வருவதுமாக இருப்பதால், அக்கம் பக்கத்து மனிதர்கள் தான் சுபாவிற்கு துணையாக இருக்கிறார்கள். இவனும் அவர்கள் அவளுக்குத் துணையாக இருப்பதால் தான் நிம்மதியாகத் தன் வேலையை பார்க்க முடிகிறது.

    இப்படி காலம் சென்று கொண்டிருந்த போது ஒருநாள் மதிய உணவுக்கு வருவதாக சொல்லிச்சென்ற திவாகர் வரவில்லை........."எனக்கு வேலை இருக்கு, நீ நேரத்துடன் சாப்பிட்டுவிடு" என்று whatsup மெசேஜ் அனுப்பிவிட்டன. மாலை வரும்போது ரொம்பவும் சோர்வாக வந்து சேர்ந்தான்.

    "காலை முதல் ரொம்ப அலைச்சல் சுபா"......"காபி எல்லாம் வேண்டாம் பசிக்கிறது
    சாப்பிட்டுவிடலாம் "என்றான்.

    சுபாவும், "சரி" என்றாள் .

    "ஏன் மதியம் சாப்பிடவில்லையா நீங்கள்? "...என்று கேட்டுக்கொண்டே உணவை மைக்ரோ ஓவனில் சுட பண்ணினாள்.

    "உங்களுக்குப் பிடிக்குமே என்று 'தால் சாவலும், ஆலு வறுத்த காயும்' பண்ணினேன்" என்றாள்.

    அவள் எப்போதுமே இப்படித்தான், மணிப்பிரவாள நடை இல் பேசுவாள் [​IMG]....எப்போதும் அதை ஆட்சேபிக்கும் திவாகர் பசி இன் காரணமாய் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட உட்கார்ந்தான்.

    இருவரும் மௌனமாய் ரசித்து சாப்பிட்டனர். சாப்பிட்டதும் வழக்கம் போல இன்று என்ன நடந்தது என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வார்கள். அன்றும் அது போல திவாகர் சொல்ல ஆரம்பித்தான்.

    "சுபா, இன்று காலை இல் போனதுமே ஒரு தற்கொலை கேஸ்.......மனைவி தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நோட் எழுதி வைத்திருக்கிறாள், கணவன் சொல்லும் எல்லாமே அவள் தற்கொல தான் செய்து கொண்டாள் என்பது போல இருக்கு............சாட்சிகளும் அப்படியே தான் சொல்கிறார்கள்......ஆனால் எனக்கு மட்டும் , எங்கோ ஏதோ தப்பு இருப்பது போல மனதில் பக்ஷி சொல்கிறது..........ம்ம்ம்.... அது விஷயமாகத்தான் இன்று பூரா அலைந்து கொண்டிருந்து விட்டேன் "..........என்று சொல்லி பெருமுச்சு விட்டவாறே சுபாவின் மடி இல் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

    .....................
     
    Caide, sreeram and uma1966 like this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா superb ma. First thing in the morning.. Fantastic story.
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    thank you Priya...............today morning I got this story in my mind so immediately ..typed................[​IMG] [​IMG] [​IMG]
     
    2 people like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுபாவும் அவன் சொல்வதை கவனமாய் கேட்டுக்கொண்டே அவனுடைய மொபைலை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். இது அவளுக்கு மிகவும் பிடித்தமான செயல் .whatsup இல் வந்திருக்கும் சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் படங்களை பார்த்து ரசிப்பதில் ஒரு சந்தோசம் அவளுக்கு. அதே போல இன்றும் பார்த்துக்கொண்டிருந்தாள்............

    அப்போ அதில் இருந்த ஒரு செய்தி அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.......அதைப் பார்த்ததும்........

    "என்னங்க இது?............தற்கொலை செய்தி....யார் அனுப்பினா? " என்று பதறினாள்...............

    திவாகர் பதட்டப்படாமல், " அது தான் சொன்னேனே, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று, அவள் தன் கணவனுக்கு அனுப்பிய செய்தி தான் அது, ....அது ஹிந்தி இல் இருக்கவே, எனக்கு அதை அனுப்ப சொன்னேன்....எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை மொழிமாற்றம் செய்ய சொல்லி இருக்கேன், காலை இல் வேறு ஒருவர் படித்து, எனக்கு விவரம் சொல்லி விட்டார், என்றாலும் இந்த செய்தியையும் பக்கத்தில் மொழி மாற்றம் செய்ததையும் நாங்கள் தனியாக காகிதத்தில் எழுதி பதிவு செய்யணும்..........ஆமாம், நீதான் ஹிந்தி தெரிந்த பெண் ஆச்சே, நீயும் சொல்லேன் அதில் என்ன இருக்கு என்று..............." என்று புன்னகையுடன் கேட்டான்.

    "எதற்கு இப்படி முழிக்கிறாய் சுபா?" என்றான்.

    " நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ் தான் "........என்றாள் சுபா.

    " என்ன இது நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்கிறாய் .............சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் சுபா? " என்றான் திவாகர்.

    " இல்லைங்க, நான் சரியாகத்தான் சொல்கிறேன்...........நீங்க இந்த செய்தி யார் அனுப்பினாங்க என்று சொன்னீங்க?" என்று எதிர் கேள்வி கேட்டாள்.

    " தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்"...........என்றான்.

    " இல்லைங்க , அது தற்கொலை இல்லை, .............நீங்க சந்தேகப்பட்டது போல கொலை................planned murder "...........என்றாள் நடுங்கிய குரலில்.

    " என்ன சொல்கிறாய்?"............என்று துள்ளி எழுந்தான் திவாகர்.

    " சரியாக சொல்லு சுபா".............என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

    சுபா விவரிக்க விவரிக்க ....... திவாகர் , தன் சோர்வெல்லாம் ஓடி ஒளிய " சபாஷ்" என்று சொல்லிவிட்டு, புத்துணர்வுடன், "இதோ 1/2 மணி இல் வருகிறேன் அந்த ராஸ்க்கலை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு போனான்.

    கிளம்பும் முன் தன் மனைவியை அணைத்துக்கொண்டு நன்றி சொல்லிவிட்டுப் போனான்................
     
    Caide, sreeram and uma1966 like this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    thanks maa
     
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    " சரியாக சொல்லு சுபா".............என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.//

    அம்மா இந்த இடம் என் மரமண்டைக்கு புரியவில்லை. எப்படி சுபா கண்டுபிடித்தாள் ... planned murder endru
     
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அவள் எப்போதுமே இப்படித்தான், மணிப்பிரவாள நடை இல் பேசுவாள் [​IMG]...
    pidiththa varigal
     

Share This Page