1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மைசூர்பாகு.

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 28, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மைசூர்பாகு.

    "சாப்பிட வரேளா"? , வெளி யூர் டூர் முடித்து வந்து, குட்டி தூக்கம் போட்டு, குளித்து, அறையில் ரிப்போட் எழுதிக் கொண்டு இருந்த என்னை மனைவி கூப்பிட்டாள்,

    "மணி என்ன ஆச்சு"? , "அட ஒன்னு ஆயுடுத்தா? , இதோ வரேன், அத்தை எங்கே",என்றேன். (தந்தையின் அக்கா)

    "அத்தையும் உங்களுக்குத்தான் டைனிங் டேபிள் கிட்ட காத்து ண்டு இருக்கா" என்றாள் ,.

    சுருக் என்றது, "வயசானவா ஏன் காத்து இருக்கணும்" , பரபரப்பாகப் போனேன், அத்தை அங்கே உட்கார்ந்து இருந்தார்கள்.

    கணவரை இழந்த பிராமணப் பெண் கோலம், மெலிந்த உடல் வாகு அல்ல.

    பக்கத்து செயரில் உட்கார்ந்தேன், அவர் கண்கள் என்னை வாஞ்சை உடன் பார்த்தன,

    "ரொம்ப அலச்சலோடா.... இனளச்சு, கறுத்துட்டையே," நான் எப்போது டூர் போய் வந்தாலும் அவர் பாசக் கண்களுக்கு இப்படித்தான் தெரியும்.

    பொதுவாக பேசிக் கொண்டு சாப்பிட்டோம். . அவர் பார்த்துப் பார்த்துப் பறிமாறினார். ,

    பிறகு இருவரும் ஹாலில் இருந்த பலகை ஊஞ்சலில் போய் உட்கார்ந்தோம். அப்போது மனைவி ஒரு தட்டில் சில மைசூர் பாக் களை வைத்து எங்களுக்கு நடுவில் வைத்தாள்.

    நான் கவனிக்காதது போல் இருந்தேன்.

    அத்தை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டு, "ஆஹா, பேஷ்,பேஷ்.. ரொம்ப நன்னா வந்திருக்கு, மீனாட்சீ உனக்கு அமிர்த ஹஸ்தம் தான் டீ.. " என்று, சொல்லிய படியே என்னை ஓரக்கண்ணால் பார்த்தார், நான், கவனிக்காதது போல் இருந்தேன்

    நேரடியாகவே கேட்டு விட்டார், " நான் தான் உனக்கு இது பிடிக்கும்னு சொன்னேன். அவளும் பாவம் நூறு தடவை பண்ணியாச்சு, நாங்கள் தான் தின்னு தீக்கறோம்,, நீ விரலால் கூட தொடறது இல்லை, அப்படி என்னடா வைராக்கியம்? , மறக்கலையா? எல்லாம் தான் ஆயாச்சே, இன்னும் என்ன வைராக்கியம் ? என்றாள்.

    மறப்பதா? அது எப்படி....? ..

    . என் மனம் பின் நோக்கிப் பயணம் போனது.

    ஆறு வயதிலேயே என் அப்பா அம்மா காலம் சென்று விடவே. , என்னை எடுத்து வளர்த்தது என் அத்தை அத்திம்பேர் தான், அவாளுக்கும் குழந்தைகள் இல்லை. ரொம்பவும் செல்லம், அது என்னை கெடுத்து, குட்டிச்சுவர்,தறுதலை ச பிடிவாதக்காரன் ஆக்கி வைத்திருந்தது.

    அத்திப் பேர் டவுணில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். , "கோபால கிருஷ்ணன் பிரமணாள் காபி சாப்பாடு ஹோட்டல்," பெயர் அளவு கூட ஹோட்டல் பெரிசு இல்லை. கையை கடிக்காமல் நடந்து கொண்டு இருந்தது,

    ஹோட்டலில் ஸ்பெஷல். ஐய்டம் மைசூர் பாகு தான். .அது . போடும் நாள் நெய் வாசம் தெரு மூக்கை துளைக்கும். சுமாரா பிசினஸ் ஆகும். மத்த அயிட்டம் சுமார் தான்.

    அந்த நாளில் நான் கண்டிப்பா, அங்கே இருப்பேன், சின்ன முதலாளி தோரணையில், அது எனக்கு உயிர். பாதி அதை நானே தின்று தீர்ப்பேன், கிட்டத்தட்ட தினமும். ஒவ்வொரு முறையும்

    அத்திம்பேர் , பாவம், சாது, அப்பிராணி, சமத்து போராது,

    திடீர் என ஒரு கூட்டம் வந்தது, "பெயர் பலகை எடு" என்றது, பாத்திரம், furniture உடைத்தது, , தார் பூசியது, கண்ணாடி பீரோவில் இருந்த மைசூர்பாகு, காராபூந்தி, தின்றது, இறைத்த தது, கல்லா சில்லறை அள்ளியது, சென்றது,, அத்திம்பேர், நடு நடுங்கி விட்டார்,

    இதற்க்கு இடையில், புது போட்டா, போட்டிகள், . பக்கத்திலேயே பெரிய ஹோட்டல், இங்கு ஈ ஓட்டல், கடன், அத்தை நகைகள் மார்வாடி கடைக்கு, திட்டம் இட்ட தாக்குதல் கள், பிசினஸ் படுத்துவிட்டது. , வளர்த்துவானேன். ஹோட்டல் திவால். கைமாறியது,

    அத்திம் பேர் மனம் உடைந்தார், ஒரு நாள் எங்கேயே சுற்றி விட்டு இரவு வந்தவர், படுத்தவர் . , மறு நாள் எழ வில்லை. நானும் அத்தையும் தனித்து விடப்பட்டோம். ,

    ஆனாலும் அத்திம்பேர் ஒரு நல்ல காரியம் செய்து இருந்தார், நாங்கள் குடி இருந்த ஸ்டோர் பகுதி யை லீஸ் போல பண்ணி வைத்து இருந்தார். .

    கூரைக்கு வழியாச்சு, , பூவா.? அன்ன விசாரம், அதுவே விசாரம். பெரும் பாடு.

    அத்தை எப்படியோ, மிச்ச, சொச்ச நகை நட்டை , வித்து, கடன் உடன் வாங்கி சமாளித்து வந்தாள், என்னை ஸ்கூலிலும் சேர்த்து இருந்தாள், 9 ம் கிளாஸ் . ஏழ்மைதான்

    நான் இருந்தது யதார்த்தம் தெரியாத உலகம், வேளைக்கு கொட்டிக் கொள்வது,, ஊர் சுற்றுவது.

    இதற்க்கு இடையில், அந்த எங்கள் பழைய ஹோட்டலை தினமும் கடந்து போக வேண்டும், இப்பொது உடுப்பி காரா யாரோ சொந்தக்காரர். " ஹோட்டல் சப்னா" சுமாரான பிசினஸ். .

    இப்பவும் மெயின் அயிட்டம் மைசூர் பாகுதான். அடிக்கடி போடுவா , நெய் வாசனை மூக்கைத் துளைக்கும் உள்ளே போய், சாப்பிட வேண்டும் என்ற ஆத்திரம் பீறி வரும். . வெளியே நின்று ஏக்கத்தோடு பார்ப்பேன்.

    உடனே எங்கள் வீடு போய் அத்தை இடம் கத்து வேன். "எத்தனை மாசம் ஆச்சு அத்திம் பேர் போனதில இருந்து வாய்க்கு வறர்ச்சியா சுவீட்டே இல்லை, எனக்கு வேணும். வாங்கி தா" , என குதிப்பது, , சாப்பிடாமல் இருப்பது, பாத்திரங்கள், புக்ஸ் எறிவது. , இப்படி பல.

    அத்தை பொறுமையா, "நாளைக்கு வாங்கி தரேன், நாளைன்னிக்கு ," என சமாதானம்.... , இப்படியே சில நாட்கள். ஆனால் அது என் கைக்கு, வாய்க்கு வரவில்லை. , என் அழிச்சாட்டியம் எல்லை மீறீயது போலும்.

    "அவர், உனக்கு மைசூர் பாக்கு தானே வேணும், நாளைக்கு சாயும் காலம் அது இருக்கும்" , என்றார்,

    மறுநாள், காலை ஸ்கூல் கிளம்பும் போதே. அத்தை இடம் கண்டிப்பான குரலில் , "சாயும் காலம் அது வேணும், இல்லை இன்னா, நான்." ..
    என ஒரு, மிரட்டு மிரட்டி விட்டுப் போனேன்.

    மாலை வீடு வந்தததும், ஆத்திரத்துடள் அத்தையிடம்," "இருக்கா"? எனக் கத்தி னேன்,, அவர் இரு, உட்காரு என கை காட்டி விட்டு தடுப்பு உள்ளே போய், ஓரு பேப்பர் பொட்டலம் கொண்டு வந்து என் முன் வைத்தார், அதில் தங்கப்பாளங்கள் போல் இரண்டு முழு மைசூர் பாக்கு கள்.

    பல மாதங்களுக்கு பிறகு, காணாதது கண்டது போல், ஆவலாதி போல் விழுங்கினேன். இப்படியே, தினமும். , இல்லாத நாட்களில் . என் ருத்திர தாண்டவம். ஒருநாள் இரண்டு நாள் இல்லை, கிட்டத்தட்ட ஒரு மாதம்,

    அன்றைக்கு ஸ்கூல் மதியம் தீடீர் லீவ், யாரோ தலைவர் இறந்து விட்டால் போல,. வீடு வந்தேன், வரும் போதே மைசூர் பாகு ஞாபகம் தான், எங்கள் போர்ஷன் பூட்டி இருந்தது, பையுடன் வெளியே தின்று இருந்தேன்,

    பக்கத்து ஆத்து ஐயங்கார் மாமி," அத்தை யா,? அவா " சப்னா ஹோட்டல் "போயிருக்கா" என்றார், எனக்கு மகிழ்சி, மைசூர் பாகு வாங்கத்தான், இருக்கும்.

    ஹோட்டல் நோக்கி ஓடினேன். . . அங்கு அத்தை இருக்கும் சுவடு கூட இல்லை. அப்போது என்னைப் பார்த்த , அத்திம்பேர் காலத்தில் இருந்து வேலை பார்க்கும் சர்வர் மாமா, "அத்தையை தேடி வந்தையாடா அம்பி? , பின் பக்கம் போய் பாரு" என்றார்,

    அங்கு போக ஒரு வழி உண்டு, போனேன், அது ஒரு அரை இருட்டு, ஜன்னல் இல்லா ரூம் .டின் ஷீட் கூரை, வெளிச் சூடை விட 20 மடங்கு அதிகச் சூடு,

    அங்கே , ஒரு, திகு, திகு என எரியும் பெரிய அடுப்பு, அதை ஒட்டி ஒரு பிரம்மாண்ட கல் உரல், ஆள் உயரக் குழவி,

    அதன் அருகே அமர்ந்து,, தன் வெள்ளை புடவை வியர்வையில் தெப்பமாக நனைந்து இருக்க, மடியில் உள்ள துண்டினால், முகத்திலும். கைகளிலும் வியர்வை சேராமல் துடைத்தபடி. ,

    அம்பாரமான மாவை, ஒரு கையால் தள்ளிய படி, , அந்த ஆள் உயர குழவி யை மற்றொரு ஒரு கையால் சுழற்றி அரைத்தபடி, முகம் செக்கச் சிவக்க, வியற்க்க விறு விறுக்கப் , மூச்சு வாங்க "மாவு அரைக்க". அத்தை படும் பாட்டை, அலஸ்தையை..... , அந்த எதிர் பாராத காட்சியை, பார்த்த எனக்கு, அதிர்ச்சி,

    துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. வேகமாக அவர் முன் போய். நின்றேன், நிமிர்ந்து பார்த்த அத்தனைக்கும் ஷாக், சுதாரித்த்க் கொண்டு, " நீயா, சித்த இரு இதைய்ம் அரைச்சட்டு வரேன்" என இன்னும் ஒரு அம்பாரத்தை காண்பித்தார்.

    "இப்பவே வரணும்" என ஒரு கத்து கத்து னேன். ஹோட்டலே ஸ்தம்பித்தது, கல்லாவில் இருந்து, உடுப்பிக்காரர் வந்தார். , புரிந்து கொண்டார், "நீங்க கிளம்புங்கோ," என்றார், அத்தை தயங்கினார்," ஓ புரிஞ்சுது", என, உள்ளே போன அவர், ஒரு சிறிய பாக்கெட் உடன் வந்து, அதை அத்தை கையில் கொடுத்த படி, " தினமும் மைசூர்பாகு அம்பிக் குத்தானா " , என்றார்,

    ஏனொ, எனக்கு, உடல் மேல் திராவகம் வீசியது போல் இருந்தது இந்தப் பாடு பட்டா எனக்கு அத்தை மைசூர் பாகு கொண்டு வறா? சீ, நான் ஒரு மனுஷ ஜன்மமா?

    வீட்டை நோக்கி ஓடினேன், பின்னாலே அத்தையும் ஓட்டமும் நடையுமா , உள்ளே, அத்தையை கட்டிக் கொண்டு அடக்க முடியாமல் அழுதேன், ஏதும் பேச த் தெரியவில்லை.. சமாதானப்படுத்த மைசூர் பாகு ஊட்டினார் அது , வேம்பாப் கசந்தது, தூ, துப்பினேன்,

    அவருக்கு புரிந்தது, " கொஞ்ச நாள் தானே டா , அம்பீ, நீ நன்னா படிச்சு டாக்டர் ஆனப்புறம் அத்தையை ராணி மாதிரி பாத்துப்பை யே," என்றார். , இரவு முழுவதும் அழுதேன், உறுதி எடுத்தேன்,

    பிற்காலத்தில் டாக்டர் ஆகா விட்டாலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலில் சேர்ந்து, அத்தையை, ராணி போல் பார்த்துக் கொண்டேன்.

    ஆனால் மைசூர்பாகு மேல் வந்த வெறுப்பு போக வே இல்லை. இவை எல்லாம் ஒரு நிமிடத்தில் மனதில் ஓடி மறைந்தன.

    அவருக்கும் புரிந்து,," அது தான் ஆயாச்சே, , இவள் என்ன பாவம் பண்ணினாள் ? ,ஆயிரம் பேர் ஆயிரம் நன்னாயிருக்கு சொன்னாலும் , புருஷனோடு ஒரு சொல்லுக்குச் ஈடாகுமா. டா?" என்றார்,

    அதுவும் நியாயம் தானே, என்று தோன்றியதை, என் முக இறுக்கம் தளர்ந்ததில் கண்ட அத்தை,

    ஒரு சிறு விள்ளல், மைசூர் பாகை மனைவி கையில் கொடுத்து, என் வாயில் போடச் சொன்னார், மனைவி யும் அவர் கை யை யும் அவள் கை மேல் வைத்துக் கொண்டு இருவரும் கொடுப்பது போல் அதை எள் வாயில் இட்டாள் , , இப்போது, அது எனக்கு தேனாய் இனித்தது.

    Jayasala42
    From what I read
     
    Thyagarajan likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello::hello: கண்ணில் கண்ணீர் . அருமையான இனிப்பான பகிர்வு.
    மைசூர் பா ~மைசூர் பாகு .
     
    Last edited: Feb 28, 2021

Share This Page