1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-40!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 25, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள், நிமிர்ந்து அவரை பார்த்து சிரித்தாள். அவரும் அவள் தலைக்கோதி உச்சி முகர்ந்தார். "வானும்மா.. இந்த தடவை எந்த தவறும் நடக்க கூடாது... சரியாக பத்தாவது மாதம், என் கைக்கு பேரப்பிள்ளைகள் வந்துவிட வேண்டும். சரியா?"
    வாஞ்சையாய் கூறிவிட்டு அவளை அறைக்கு போக சொன்னார்.

    அறைக்குள் நுழைந்த வானதிக்கு எதையும் இன்னும் கூட நம்ப முடியவில்லை...கனவோ என்று கூட மலைத்தாள். அவளின் பிரமைப் பிடித்த முகத்தை பார்த்தவன் கேட்டான்..
    "என்னடா...அப்படி திகைத்து போய் நிற்கிறாய்? எல்லாம் கனவு போல இருக்கிறதா?" அவனின் அக்மார்க் புன்னகையுடன் அவளுக்காக கை விரித்தான்.

    அவளும் நீட்டிய அவன் கைகளில் வந்து சரண் புகுந்துகொண்டாள். 'எந்த விளக்கமும் வேண்டாம்... இப்படியே இவன் கையணைப்பில் இருந்துவிட்டால் என்ன என்று தோன்றியது.எத்தனை நாள் ஏங்கி இருப்பாள் இதுக்காக...மனநிலை சரியில்லாமல் இரண்டு வருடம் ஓடி..பிறகும் தான் எத்தனை சோதனைகள்.. இனி அவ்வளவு தான், எல்லாம் முடிந்தது என்று நினைத்தாளே... அதுவும் முகிலை கணவனோடு பார்க்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம்... நரகமாய் துடித்தாளே..'

    அந்த வலி இப்போதும் கொடுத்த வேதனையால் சற்றே விலகினாள். ஆனால் அவன் விடவில்லை. "ம்ம்...ம்கும்.. இது தானே கூடாது என்பது? எதை நினைத்துக்கொண்டு ஒதுங்குகிறாய் இப்போது?"

    "அது......."

    "தயக்கம் தேவையில்லை வானு... எதுவாக இருந்தாலும் கேட்டுவிடு..."

    வானு... வானு என்றா அழைத்தான்??!! ஏக்கத்தோடு பார்த்தாள்.. "இப்போது அழைப்பது போல நான் குணமாகி இருந்த சமயத்திலும் அழைத்திருந்தால், இத்தனை வேதனை அனுபவித்திருப்பேனா? அதுவும் அக்காவோடு உங்களை பார்க்கவும்... எ..எனக்கு அதை தாங்க முடியவில்லை."

    குழப்பமாய் பார்த்தாலும் மர்மமாய் சிரித்துக்கொண்டே கேட்டான்..."எதை?"

    "நீங்களும் அக்காவும்.... அ.. அன்று... நான் வந்த அன்று.. கண் எல்லாம் சிவந்து போய்...நின்றீர்களே?....." சொல்ல மாட்டாமல் அதை நினைத்து இப்போது அழுதாள். "அன்றைக்கு தான் நானும் முடிவு எடுத்தேன், என்ன தான் நான் திருந்தினாலும், உங்கள் இருவருக்கும் இவ்வளவு நேசம் இருக்கையில், இடையில் வர கூடாது என்று. ஆனால் உங்களை விட்டுத்தர எனக்கு மனமில்லை. அதனால் தான் சிவா அண்ணன் சொல்படி எல்லாம் கேட்டேன். அவர் முகில் அக்காவையே குற்றவாளி ஆக்கியது என்னை அசைத்துவிட்டது விமல்... எப்போதும் நான் செய்யும் தவறுக்கெல்லாம் அவளே குற்றவாளி ஆவது எனக்கு பிடிக்கவில்லை. உங்களை விட்டுக்கொடுக்க அப்போதும் மனமில்லை தான். ஆனால் உங்கள் இருவரையும் பிரிக்கவும் நான் விரும்பவில்லை. எனக்கு இன்னும் ஆச்சர்யம் தான்... கடமைக்காக தான் என்னை மறுபடியும் மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர்களோ....." என்று முடிக்காமல் இழுத்தவளை தன்னருகில் இன்னும் நெருக்கமாய் சேர்த்து இழுத்தான்.

    "அசடு... என்னை தான் எல்லாரும் முட்டாள் என்கிறார்களோ என்று பார்த்தால், நீ என்னை விட இருப்பாய் போலிருக்கிறதே... அன்று இரவு எனக்கும் முகிலுக்கும் கண் சிவந்திருந்தது உண்மை தான் கண்மணி. ஆனால் அதற்கு காரணம் தான் வேறு." என்று சொல்லி சிரித்தான்.

    "என்ன காரணம்?"

    "முகில் தானாக விருப்பப்பட்டு இங்கு வரவில்லை வானு...தாத்தா தான் அவளை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். உன்னை எப்படியாவது குணமடையாமல் செய்துவிட்டால், நான் முகிலோடு இணைந்து விடுவேன் என்பது அவர் கனவு. அதற்காக தான் முகிலை அனுப்பிவைத்திருக்கிறார்.

    புது டாக்டர் வரவும், அதுவும் அவர் உன்னை, தானே தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிப்பதாய் சொல்லவும், எனக்கு அப்போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் லக்ஷ்மி அம்மா உன்னை தனியாக அழைத்து போக என்னிடம் அனுமதி கேட்கவும் தான் பொறி தட்டியது. அப்போதும் தாத்தா சொல்லி தான் டாக்டர், ராமு, முகில் என்று எல்லாரும் சேர்ந்து உன்னை குணமடையாமல் தடுக்கிறார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. என்மேல் இருக்கும் பாசத்தில் ராமும், காதலில் முகிலும் தான் இப்படி செய்வதாய் நினைத்தேன்... முகில் அன்று என் அறைக்கு வரும்வரை."

    இந்த இடத்தில் வானதியின் முகம் சுருங்கியது..அதை பார்த்துவிட்டு அவன் வருத்தமாய் சிரித்தான். " அது தான் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டேனே வானு? முகில் அன்று அடங்காத காதலில் தான் அறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவள் கைகள் என் உடம்பில் படும் முன்பே என் கை அவள் கன்னத்தில் பதிந்துவிட்டது வானு. அந்த நிமிடம் தான் நீ என்னுள் எத்தனை ஆழமாய் இருக்கிறாய் என்று எனக்கே புரிந்தது."

    அவனுக்கு புரிந்ததை அவன் அணைப்பில் இப்போது அவளும் புரிந்துக்கொண்டாள். ஆனாலும் அசையாது கேட்டாள். "பிறகு?"

    "பிறகென்ன... உன் அக்கா, கதறி அழுதாள். ஆனால், அதில் காதல் தெரியவில்லை வானு, அவள் வாழ்க்கையை நீ அநியாயமாய் பறித்துக்கொண்டாயே என்ற ஆற்றாமை தான் தெரிந்தது. என்னை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றாள். இத்தனை வேகம் அவளுக்கு எப்படி வந்தது என்று எனக்கே ஆச்சர்யம் தான். ஆனால் அத்தனைக்கும் பின்னால் தாத்தா இருப்பதை அவளே சொல்லவும் தான் நான் விழித்துக்கொண்டேன்.அன்று முகில் இதையெல்லாம் என்னிடம் சொல்லவும் எனக்கு அதிர்ச்சி... பிறகு அவள் மேல் பரிதாபம். வானதியை தவிர வேறு யாருக்கும் இந்த பிறவியில் என் மனதில் இடம் இல்லை என்று அவளிடம் சொல்லியும் அவள் நம்பவில்லை. என் உறுதியும், உன் மேல் இயற்கையாகவே அவளுக்கு இருந்த பாசமும் தான் அவளை கடைசியில் நம்ப வைத்தது.

    ஆனால் செய்த தவறை நீயும் உணர வேண்டுமே... அப்படி நீ திருந்தி மாறினால் தான் என்னைவிட்டு நிரந்தரமாய் போவேன் என்று திடமாய் சொல்லிவிட்டாள். பிறகு நானும் அவளும் சேர்ந்து தான் உன்னை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப திட்டம் போட்டோம். வெளியில் யாருமற்றவளாய் இருக்கையில், தனிமை உனக்கு தவறையெல்லாம் புரிய வைக்கும் என்று எண்ணினேன். போகும் போது நீ பணத்தை கூட வாங்க மறுத்துவிட்டதாய் அவள் சொல்லவும் லேசாய் மனம் வலித்தது. தாத்தாவிடம் சொல்லி அவர் வீட்டில் உன்னை தங்க வைக்கலாமா என்று பார்த்தேன்... அவருக்கும் உடல்நிலை அத்தனை சரியில்லையே... எப்படி உன்னை பார்த்துக்கொள்ள சொல்வது? ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் சிவாவே உன்னை அவனோடு அழைத்து சென்றுவிட்டான்."

    இப்போது வானதி குறுக்கிட்டாள்... "பாவம், வயதான காலத்தில் அவருக்கும் தான் என்னால் ஏற்கனவே எத்தனை கஷ்டம்..."

    "இல்லை வானதி.. அவருக்கு உன்மேல் பகை என்று எதுவும் கிடையாது. உன் அப்பாவே உன்னை பற்றி என் அம்மாவிடம் சொன்னதும், என் அம்மாவுக்கு முகிலை தன் மருமகளாக்கி கொள்ளும் விருப்பம் இருந்ததும் தெரிந்ததால் தான் அவர் உன்னை என்னிடமிருந்து திருமணம் செய்யாமல் பிரிக்க நினைத்தார். அதிலும் உன்னை பற்றி கிஷோர் வந்து சொன்னதும் சேர்ந்து அவருக்கு இந்த மாதிரி திட்டம் எல்லாம் தோன்றியிருக்கிறது. முகிலும் என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாள்... அது தான் அவர் இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார். "

    "ம்ம்... ஆனால், நேற்று அவரை முகில் அக்காவின் திருமணத்தில் பார்க்க எத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது தெரியுமா எனக்கு? அவர் முகத்தில் பெரும் திருப்தி நிலவியது. சிவா அண்ணனுக்கும் தான்.... முகில் அக்காவைப் பற்றி அவர் தான் பாவம் அதிகம் கவலைப்பட்டிருப்பார். "

    "உண்மை தான் வானதி, அவன் கெட்டிக்காரன்.. எப்படி உன்னையும் என்னையும் சேர்த்து வைக்க கிஷோரை அழைத்து வந்து பேச வைத்தான் பார்த்தாயா? ஆனால் பாசக்காரனும் கூட தான். சொந்த தங்கையின் வாழ்க்கையையே பணயம் வைத்திருப்பான், நீ மட்டும் உண்மையை சொல்லாமல், அப்படியே நின்றிருந்தாள்."

    "ஆனால் உங்கள் மேல் எனக்கு இப்போதும் வருத்தம் தான். முகில் அக்காவை கூட மனதளவில் நெருங்க விடாத அளவு என்னை காதலித்தவர், வீட்டைவிட்டு எங்கே சென்றேன் எப்படி இருக்கிறேன் என்ற அக்கறை கூட இல்லாமல் இருந்தீர்களே? சிவா அண்ணா மட்டும் சரியான நேரத்தில் வராமல் போயிருந்தால்?"

    "ஹா.. ஹா.. உன் சிவா அண்ணன் வந்தது தான் பிரச்சனையே. அவனோடு நீ செல்வதை பார்த்த பின்பு தான் அன்று நான் வீடு திரும்பினேன் வானு... இல்லாவிட்டால், உன்னை திரும்ப என்னுடனேயே அழைத்து வருவதாய் தான் நினைத்தேன்."

    வானதி ஆச்சர்யமாய் பார்த்தாள்... "உங்கள் மனதில் நான் இத்தனை உயரத்திலா இருக்கிறேன் விமல்? அதை கூட புரிந்துக்கொள்ளாமல் நான் எத்தனை தவறுகள்..."

    அவள் வாயை தன் கைகளால் மூடினான்...."வேண்டாம் வானதி... விட்டுவிடு, முகில் மேல் எனக்கு காதல் இல்லை என்பதை நானே வெகு நாள் கழித்து தான் தெரிந்துக்கொண்டேன். கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாமல் வளர்ந்த எனக்கு, சிவாவின் தங்கை எனக்குமே தங்கையாக தான் தெரிந்தாள். ஆனால், உன்னிடம் ஒளிந்திருந்த கர்வம், எதை பற்றியும் கவலைப்படாத அலட்சியம், பெண்ணுக்கு தேவையானதை விட அதிகமாய் இருந்த உன் துணிவு.... இது எல்லாம் தான் உன்னிடம் என்னை ஈர்த்தது. உன்னை மறுபடி தேடி உன் தாய் மாமன் வீட்டுக்கே வர, அது தான் காரணம் என்பது இப்போது எனக்கு தெளிவு."

    "சிவா அண்ணா சொன்னான்... விமல் எத்தனை தொழில் வெற்றிகரமாய் செய்து என்ன பிரயோஜனம்... கேவலம் உன்னுடைய சதிக்கு பலியாகிவிட்டானே என்று.. எனக்குமே தோன்றும், எப்படி நான் சொன்னதை எல்லாம் நம்பினீர்கள்?"

    "நம்பவில்லை வானதி.... நீ சொன்ன எதையும் நான் நம்பவில்லை. அது தான் நாம் பிரிந்ததுக்கு காரணமே. அந்த படங்களை காண்பித்து நீ முகிலை கெட்டவளாய் காட்ட நினைப்பது, என்னிடம் உள்ள காதாலால் தானோ என்று நினைத்தேன்... ஆனால் அது எல்லாம் பணத்துக்காக என்று கிஷோர் சொல்லி தெரிந்ததும் தான் என்னால் தாங்க முடியவில்லை.நான் உயிராய் நினைத்தவள், என்னிடம் உள்ள பணத்தை தான் மதித்தாள் என்பதனால் ஏற்பட்ட கோபம் அது.... அதற்கு தான் உனக்கு தண்டனை கொடுக்க நினைத்து வெளியில் அனுப்பினேன். ஆனால் உன்னை பிரிந்திருக்க முடியாமல் அது எனக்குமே தண்டனை ஆயிற்று."

    "ம்ம்... கிஷோரும் தான் இப்போது எப்படி மாறிவிட்டார்? சிவா அண்ணன் எது சொன்னாலும் இப்போது அது தான் அவருக்கு வேதவாக்கு. அவர் சொல்லித்தானே முகில் அக்காவை மணந்துக் கொண்டார்?"

    "இல்லை வானு... சிவா பக்காவாக திட்டம் போட்டிருக்கிறான். கிஷோரை அப்படி சொல்ல வைத்து முகில் அவனையே திருமணம் செய்துக்கொள்ளும் நிலைமையை உருவாக்க நினைத்திருக்கிறான். ஆனால் நடுவில் நீ உண்மையை சொல்ல போக, அது அவன் எதிர்பாராதது. அவன் எதிர்பாராத இன்னொன்று, முகில் தானே வந்து கிஷோரை திருமணம் செய்துக்கொள்வதாய் சொன்னதை தான்."

    "அது யாரும் எதிர்பாராதது ஆயிற்றே? அக்கா எப்படி சம்மதித்தாள்?" வானதி புருவம் உயர்த்தி கேட்டாள்.
    அதன் அழகை ரசித்தவன், தவறாமல் சொன்னான்.. " முகிலுக்கும் உலகம் புரிந்திருக்கும் வானதி. அவள் அதை நம்மை பார்த்தே புரிந்துக்கொண்டிருப்பாள். தாலி என்ற ஒன்று கழுத்தில் விழுந்ததும் நீ அடியோடு மாறிப்போனது.... மனைவியானவள் தவறே செய்தாலும் அவளை மறக்க முடியாமால் நான் தவித்தது எல்லாவற்றையும் அவளும் பார்த்துக்கொண்டு தானே இருந்தாள்?"

    "ம்ம்... காதலுக்கு மட்டும் தான் இந்த சக்தி இருக்கும்... இல்லையா விமல்? உங்களை முழு நேரமும் நினைத்துக்கொண்டிருந்த எனக்கே, கிஷோர் வந்து மிரட்டவும் தானே, உங்களை பிரிய வேண்டுமோ என்ற பயம் வந்தது? முகில் வந்ததால் தானே நம்மிடையே உள்ள அன்பு உங்களுக்கு புலப்பட்டது? நான் மட்டும் முதலிலேயே கொஞ்சம் நல்ல விதமாய் யோசித்திருந்தால்..."

    அவள் ஆரம்பித்ததை அவன் முடித்தான்."நம் திருமணமே நடக்காமல் முகிலின் கழுத்தில் என் தாலி இருந்திருக்கும்.. வேண்டாம் வானதி, எல்லாம் நன்மையாக தானே முடிந்திருக்கிறது? மறுபடியும் உன் பழைய கால வாழ்க்கையை நினைக்காதே... நாம் ரசிக்க வேண்டியது, முள்ளிலும் பூத்திருக்கும் ரோஜாவை தான், ரோஜாவிலும் இருக்கும் முள்ளை அல்ல." என்றவன் சொன்னதோடு அல்லாமல், ரசிக்கவும் தொடங்கினான்.

    " கண்ணாடி பார்க்காதே கள்வனே
    என் கண்களை மட்டும் பார்த்துவிடு,
    அது சொல்லும் உன் அழகினை
    பக்கம் பக்கமாய்...
    எனை விழுங்கும் உன் பார்வையில்
    மலர்கிறேன் நான் நித்தம் நித்தம்..
    உலகம் என் மீது சாய்ந்தாலும்
    உன்னிடமே சாயும் என் மனது அறியாது,
    என்று முடியுமென இந்த காதல் யுத்தம்..
    விழித்திடாதோ அக்கம் பக்கம்??
    இது என்ன,
    என் காதுக்குள் மட்டும்
    கேட்கிறதே உந்தன் காதல் சத்தம்?"



    முற்றும்!!!!!!
     
    Last edited: Nov 25, 2010
    2 people like this.
    Loading...

  2. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    பிறருக்குத் தோன்றும் ரோஜாவிற்கு முள் பாரம் என்று
    ரோஜாவிற்கு தான் தெரியும் அந்த முள்ளுடன் தான் எத்தனை சுகமாக வாழ்கிறோம் என்று. இறைவனுக்குத் தெரியும் யாருக்கு யார் துணையாக இருந்தால் நன்றாக இருக்கு மென்று.

    வித்தியாசமான கதைக் களம் தேவா, நல்ல முடிவு. தங்களுடைய மற்ற கதைகளையும் படித்துள்ளேன் தேவா, அனைத்தும் அருமை. தெளிவான நடையும் அழகான கவிதைகளும் உங்கள் கதையை மேலும் மெருகேற்றுகின்றன.

    தாங்கள் ஏன் உங்கள் கதைகளை புத்தகமாக வெளியிட முயலக் கூடாது???????????

    All The Best Deva.........

    Continue ..............:thumbsup
     
    Last edited: Nov 25, 2010
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா நான் இந்த முடிவை தான் எதிர்பார்த்தேன்.ஆனாலும் முகில் பாவம்.விமல்,வானதி,சிவா காதல் ஜெயிச்சுரிச்சு.முகில் காதல்?
    ஒரு கதாபாத்திரத்தின் தாக்கம் மனசில் இருந்தால் அது எழுத்தாளரின்
    திறமை.நல்ல படைப்பு உன்னோடது.நீ ஒரு சிறந்த எழுத்தாளராக வருவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுகன்யா... புத்தகம் போடும் அளவு நான் சிறந்த எழுத்தாளர் என்ற நம்பிக்கை எனக்குள் இன்னும் உதிக்கவில்லை. அதற்கான நேரமோ இன்னும் பல சிறப்புகளோ என்னிடம் இன்னும் வரவில்லை என்பது என் கருத்து. ஆனாலும் இங்கு இத்தனை பேர் என் கதையை படிக்கும் அளவு நான் எழுதுகிறேன் என்பதும், அவர்களின் கருத்தை என் கதை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்தது என்பதுமே எனக்கு உற்சாகம் கொடுக்க போதுமானது.:)

    அதிலும் உங்களின் இந்த பாராட்டு மெய்யாகவே என்னை குளிர்வித்தது சுகன்யா.. காரணம், நீங்கள் என்னுடன் சம களத்தில் நிற்கிறீர்கள், அதாவது கதை களத்தில் எழுதுகிறீர்கள். ஆனாலும் எந்த வேற்றுமையும் பாராட்டாது, என்னை ஊக்கப்படுத்த தோன்றும் உங்கள் மனம் பெரிது தான். நன்றி!!!!!:bowdown
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவா

    வெகு அழகாய்,நேர்த்தியாய் கதை நகர்த்தி
    எங்களின் இதயங்களை ஆச்சர்யத்தில் அமர்த்தி
    உன் முள்ரோஜாவை மகுடத்தில் ஏற்றி விட்டாய்.
    சபாஷ்.பேஷ்......என் உளமார்ந்த பாராட்டுக்கள்
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தேவா...வித்யாசமான கதைகருவை தேர்ந்தெடுத்து ....அழகா ஒரு கதைய சொல்லி இருக்க.......முடிவும் அருமை...:)

    நாம் உண்மையான அன்பை ஒருவரிடம் செலுத்தினால் அதற்கு
    பலன் கண்டிப்பாய் இருக்கும் என அழகாய் சொல்லிட்ட..

    முள் மேல் ரோஜா ..என்பதற்கு நீ சொன்ன உதாரணமான கதை சூப்பர்....

    இருந்தாலும்...முகில் காதல் முறிந்ததில் ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது....:-(

    இன்னும் உனது படைப்புகளை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.......தொடரவும் உனது கதை பயணத்தை....:thumbsup
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பிரியா,

    அருமையா கதைய நகத்தி, படிப்போரின் மனதிற்கு சந்தோஷத்தை தரும்படி கவிதைகள் கொடுத்து , அடுத்து என்ன என்று என்ன வைத்து....இனிதாக கதையை முடித்து இருக்கிறாய். :thumbsup

    லதா சொன்ன மாதிரி முகிலின காதல் மட்டும் சற்று ஏமாற்றமா இருக்கு. ஆனாலும் உண்மையான காதல் தான் என்றும் வெற்றி பெறும். அது காதலுக்கான மரியாதை.

    கதைக்கான தலைப்பா இல்ல தலைப்புக்கான கதையா...உண்மையாவே முள் மேல் ரோஜா அருமை அருமை அருமை. :clap:clap:clap

    நீ மென்மேலும் பல கதைகள் கொடுக்க வேண்டும். அதனை நாங்க இதுபோலவே ஆர்வமாய் படிக்க வேண்டும். நன்றி உனது படைப்புக்கு :):):)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என் கதையில் எந்த சோகமான முடிவும் இருக்க கூடாது என்று தான் கதை அமைப்பேன் அம்மா... ஆனால் வாழ்வின் நிதர்சனமும் இருக்க வேண்டுமே என்பதற்காக தான் இப்படி ஒரு முடிவு.
    முகிலுடன் விமலை சேர்த்து வைத்து திருமண பந்தத்தின் வேரை அசைக்க எனக்கு மனம் வரவில்லை என்பதும் காரணம். மன வேற்றுமை எல்லை என்பதை தொடாத வரை கணவனும் மனைவியும் திருமண உறவை அறுத்து பிரிந்து விடக்கூடாது என்பது என் தனிப்பட்ட விருப்பம். அதையே நான் கதைகளிலும் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

    நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் என்னை விட பெரியவர். காதலை பற்றியே கதை எழுதுகிறோமே, எல்லாரும் படிக்கும்படி இருக்க வேண்டாமா என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.ஆனால் உங்கள் பின்னூட்டத்தால் அந்த குறை தீர்ந்தது எனக்கு. மூத்த தலைமுறையில் இருந்து வரும் என் கதைக்கான பின்னூட்டம் உங்களுடையது தான் என்று நினைக்கிறேன். நன்றி அம்மா!!!:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உண்மையில் அது மகுடம் ஏறிவிட்டதாக தான் தோன்றுகிறது சரோஜ் உங்களின் பின்னூட்டம் படித்து. உங்கள் கவிதைகளை படிக்கையில் நன்றாக இருக்கிறது என்று தான் நினைக்க தோன்றுமே தவிர அதை ஆழமாய் புரிந்துகொள்ளும் அளவு எனக்கு அப்போது ஞானம் இல்லை. (இப்போது மட்டும் இருக்கிறதா என்று நீங்கள் கேட்க கூடாது:hide:). புரிந்துக்கொண்ட போது அதனின் சிறப்பு எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தமிழ் அறிவையும் தாண்டி சென்றது. பிறகு தான் வியந்து வியந்து ஒவ்வொரு வரியும் படிக்க தொடங்கினேன்.

    நான் வியந்து பார்த்து படித்ததை, படைத்த தாங்களே என் கதையை படித்து பின்னூட்டம் கொடுத்தது, குருவின் கையால் பட்டம் பெறுவது போல... அதை என்னால் சொல் கொண்டு சொல்ல முடியாது சரோஜ்.எழுதும் பணியில் நான் எப்படியும் ஒரு படி ஏறிவிட்டதாகவே எண்ண தோன்றுகிறது எனக்கு. நன்றி சரோஜ்!!!!!:)
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    mudivu arumaiyaga mudithullai...deva.
     

Share This Page