1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முள் மேல் ரோஜா-39!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Nov 24, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விமலனின் மௌனம் முகிலுக்கு பயமாய் இருந்தது... அவனின் பணத்துக்காக மயங்கிவிட்டதாய் நினைப்பானோ?
    இயலாமை கோபமாய் மாறியது. "அண்ணா...எதையும் யோசித்து பேசு..யாரோ ஒருத்திக்கு வாழ்க்கை கொடுக்க என் வாழ்க்கையை அழிப்பது நியாயம் இல்லை. அதிலும் நான் உன் தங்கை."

    இதற்கு சிவா ஒன்றும் பதில் சொல்லவில்லை.. யோசிக்காமலா செய்வான். சரியோ இல்லையோ இப்போது யோசித்தால், அது யாருக்கும் பயனில்லாமல் முடிந்து விடும். இதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று மனதுக்குள் முகிலிடம் மன்னிப்பு கேட்டான்.

    யாரிடம் சென்று எதை கேட்பது என்றே முகிலுக்கு தெரியவில்லை. வானதியின் மீது வெறுப்பாய் நோக்கினாள். 'இப்போது கூட இவள் அழுது நாடகமாடி தான் அண்ணன் இப்படி செய்திருப்பானோ? பாவி... எப்படி நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்.இத்தனைக்கும் இவள் திருந்தவில்லையே...'

    இப்போது முகிலின் பார்வை கிஷோரிடம் நகர்ந்தது..."அடப்பாவி..நீ யாரென்றே எனக்கு தெரியாதே! உன்னை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட இல்லையே.. தயவுசெய்து உண்மையை சொல்லிவிடு.உன் காலில் வேண்டுமானாலும்...." ஆவேசமாய் தொடங்கி அவள் கெஞ்சலில் முடிக்கவும், வானதி அவள் கைப்பிடித்து தடுக்கவும் சரியாக இருந்தது.

    அவளின் தழுதழுத்த குரல் முதன்முறையாக வேதனையோடு வெளி வந்தது. "வேண்டாம் அக்கா.. நீ இவர்கள் யார் காலிலும் விழ தேவையில்லை. நான் தான் உன் காலில் விழ வேண்டும். தாயை போல மேன்மையாய் என்னை நடத்தினாய், நானோ உன் அருமை புரியாமல் உனக்கே துரோகம் செய்துவிட்டேன். உங்கள் எல்லாரையும் ஏமாற்றியதாய் நினைத்து ஏமாந்து போனது நான் தான்." சொல்லிவிட்டு சிவாவின் அருகில் வந்தாள்.

    "அண்ணா... ஒருமுறை முகிலின் வாழ்க்கையை அழித்ததற்கே நான் இன்னும் எத்தனை பிறவியில் தண்டனை அனுபவிக்க நேரமோ... இன்னும் ஒருமுறை அதையே திருப்பி செய்ய எனக்கு விருப்பமில்லை."

    லேசாக திரும்பி விமலை பார்த்தவள் அவன் இருக்கும் பக்கம் போகாமல் அங்கிருந்தே சொன்னாள்..."என் வாழ்க்கையை திருப்பி கொடுப்பதாய் நினைத்து சிவா அண்ணா இப்படி செய்துவிட்டார். பாவம் அவருக்கு தெரியவில்லை, என்றோ நீங்கள் என்னை உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டீர்கள் என்று. உங்கள் மேல் உள்ள ஆசையை விட பணத்தின் மீது ஏற்பட்ட மோகம் தான் உங்களை மணக்க காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உங்களை அறிந்துக்கொண்ட பின்பு நான் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நான் தவறு செய்யும் போது உங்களை கொடுத்த ஆண்டவன், திருந்தி வருந்தும் போது என்னிடமிருந்து உங்களை பிரித்துவிட்டான். இதற்குமேல் எனக்கு தண்டனை தேவையில்லை. இதுவே ஆயுள் முழுவதும் மரணவேதனை தரும்.

    உங்களுக்கு ஆலோசனை சொல்லும் உரிமையோ, மன்னிக்கும்படி கேட்கும் தகுதியோ எனக்கில்லை.. இனி உங்களிடம் நான் எதை சொன்னாலும் அதை நம்பும் தைரியம் உங்களுக்கே வராது. எனவே சொல்லியும் பயனில்லை. உங்களுக்கு உவப்பாய் என்னால் சொல்ல முடிந்த செய்தி ஒன்றே ஒன்று தான். உங்கள் விருப்பம் போல முகில் அக்காவையே நீங்கள் மணந்துக் கொள்ளுங்கள். நம் விவாகரத்தில் எனக்கு முழு சம்மதம் என்று நான் நேற்று தீர யோசித்து எழுதிய பத்திரம் இதோ..." மேசை மீது அதை தன் நடுங்கும் கைவிரல்களால் வைத்தாள்.

    இனி பார்க்கவே போவதில்லையே என்ற ஏக்கத்தில் கடைசிமுறையாய் விமலனை கண்களால் பருகிவிட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல், நிதானமாய் வீட்டை விட்டு வெளியேறினாள்.

    'அன்றும் இன்றும் எத்தனை வித்தியாசம்!!!!! அன்று அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் வெளியேறினேன், இன்று விட்டுக்கொடுத்து கையெழுத்தே போட்டுவிட்டேன். அன்று அழுத கண்ணில் வேறெதுவும் தெரியவில்லை. இன்று இந்த உலகம் மிக அழகாய் தெரிகிறது...'

    வானதி செல்வதை தடுக்கக்கூட முடியாமல், எல்லாரும் சிலையென நின்றுவிட்டனர். முதலில் சுய உணர்வு அடைந்தவன் சிவா தான். இந்த திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

    "என்னுள்ளே தோன்றிய
    உந்தன் மயக்கம்,
    உயிர்வரை சென்று தாக்கும்..
    உடைந்து போனாலும் என் மனது,
    அதுவே உயிர் சக்தியை
    எனக்கு மீட்டும் கொடுக்கும்...
    உனையே தொலைத்துவிட்ட இந்த நிமிடம்,
    தொலைந்தது என் கர்வம்,
    முடிந்தது என் கனவு,
    ஜீவன் நீயென வாழ்ந்தேன் இதுவரை
    உனை ஜீவித்தே வாழ்வேன் இனி இறுதிவரை.."
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Priya romba nalla episode.. nalla narrate panirukka.. kutti kavithai kalakkal...
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    superb lines da... nice narration...
     
  4. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Fantastic episode, wonderful kavithai :cheers
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ippa ellorum nallavangala aayitaanga....mudivu ennava irukkum?????????:spin:spin..

    super deva intha part.....kavithai super o super......:)
     
  6. SrividyaNKumar

    SrividyaNKumar Silver IL'ite

    Messages:
    566
    Likes Received:
    47
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Hi deva,
    I am eagerly waiting for u to complete this story. I like to read it in one stretch. Once you are done could pls post the full novel in PDF..

    Thanks,

    Vidyaa
     
  7. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Last three episodes romba interesting a pogudhu..
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you ramya..:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks vaishu..:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nandri suganya....:)
     

Share This Page