முதுமை நோய் அல்ல, அது ஒரு பருவம்.....

Discussion in 'General Discussions' started by veni_mohan75, Mar 4, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த அவசர உலகத்தில் நமக்கு முதியவர்களை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லை. எல்லாமே அவசரம் தான். சாப்பிடும் உணவிலிருந்து, போடும் உடை வரும் அனைத்தும் ஆயத்த பொருட்கள்தான். "என்னை பார்க்கவே சரியான நேரம் இல்லை. இதில் பாட்டி, தாத்தா எல்லாம் எங்கே சென்று பார்ப்பது" எனும் உங்களது குரல்கள் எனக்கு கேட்கிறது. என்ன செய்வது????

    ஆனாலும் இன்றைய கால கட்டத்தில், முதியவர்கள், அதுவும் முடியாதவர்கள் எனில் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஏனோ தெரியவில்லை, முதியோரிடம் நமக்கு சகிப்பு தன்மை என்பது சிறிது கூட இருப்பதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சரி, பேசும் வார்த்தைகளுக்கும் சரி, மதிப்பு கொடுப்பது கூட இல்லை.

    கண் பார்வை குறைபட்டு, கேட்கும் திறன் குறைந்து, கை கால்கள் செயலிழந்து, உள்ளுறுப்புகளும் செயல்குறைந்து, ஒவ்வொரு நாளும் தன் முடிவை எதிர்நோக்கும் முதியோரின் நிலை, கடவுளே இன்னும் என்னை ஏன் உயிருடன் வைத்திருக்கிறாய் எனும் அவர்களது வாய் விட்ட ப்ராத்தனைகளும், எந்த நெஞ்சையும் ஒரும் கணம் உறையச் செய்யும்.

    அந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது எல்லாம், அன்பான ஒரு சொல், கனிவான ஒரு பார்வை, நேசமிகு ஒரு தீண்டல்..... இது தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அதை செய்யவாவது நாம் முன் வருவோம். "இயன்ற வரை பல் இல்லாதவரிடம் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் மகிழ்ச்சி பன் மடங்காகும்" அது குழந்தைகள் ஆனாலும் சரி, முதியவர்கள் ஆனாலும் சரி.

    நமக்கும் ஒரு காலத்தில் முதுமை வரும். அப்போது நம்மை அடுத்தவர் இப்படி நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து, முடிந்த வரை முதியவர்களுக்கு நம்மால் ஆனா உதவியாக அவர்களுக்காக சிறிது நேரம் செலவழிப்போம். அவர்களை மகிழச் செய்வோம்.

    மேலும் வேறு என்ன செய்தால் அவைகளை மகிழ்விக்கலாம் என தங்கள் கருத்துகளுக்காகவும் காத்திருக்கிறேன்....
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முதுமைக்கு,

    காது கொடு,
    கை கொடு,
    கண் கொடு,
    தோள் கொடு,
    மனம் கொடு.

    முதுமையில்,

    மகராசனாய்,
    மகராசியாய் ,
    வாழவிடு,
    நீயும் நன்றாய்,
    வாழ்ந்திடுவாய்.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மனமின்றி செய்தாலே மனம் மகிழும் அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்தால், அந்த முதியோரின் ஆசி உனது முடிவு வரை வரும் என்பதை அழகாக சொன்ன நட்புக்கு நன்றிகள் பல.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முதுமைக்கு,

    கர்ணன்,
    கவசம் கொடுத்தான்,
    கவசம் அல்ல, தன் சுவாசம் கொடுத்தான்.
    குண்டலம் கொடுத்தான்,
    குண்டலம் அல்ல, தன்னலத்தை விடுத்தான்.

    கர்ணனை கதை ஆகப் பார்க்காதே
    கருத்தைக் காவியமாய்ப் பார்.
    அழகான ஓவியமாகும் உன் வாழ்கை.
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nice post. True we do not care to spend time with the senior citizens - keep rushing for our routine work.

    If we give them the feeling we are with them by talking to them and listening to them often, may be some of their depressed feelings can be overcome.

    Good work Veni.
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Oh Nats!

    Good u changed ur avtar.

    Ur daughters look pretty. BTW who is Yazhini and who is Yezhil. Shall catch u later. Now peeped in from office. My immediate boss is busy and mobile. hence took the chance.

    bi
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தங்கள் பெயருக்கு (நட்பு) உதாரணமாகத்தான் கர்ணனை சொல்வார்கள். அந்த கர்ணனை கொண்டே கருத்து சொல்லும் தங்கள் யோசனை யாருக்கு வரும். அது சரி வந்தால்தான் நாங்களும் தங்களை போல "வர கவி" ஆகிவிடுவோமே!!!.

    தன்னில் இருந்த, தன்னால் இயன்ற அத்தனையும் தானம் செய்தான் கர்ணன். யார் என்ன கேட்டாலும் இல்லை என சொல்லாது அனைத்தையும் கொடுத்தான். உலகு புகழ் பெற்றான்.
    நல்ல கருத்து நண்பரே, நன்றிகள் உமக்கு பல.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    நமது சிறு அன்பு காட்டும் செயலினால், அவர்களை பெரிதும் மகிழ்விக்க முடியும். முடிந்த வரை மகிழ்விப்போம். முதுமையை அவகளுக்கு எளிதாக்குவோம்.

    கருத்து சொன்ன தோழிக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல
     
  9. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    nice post,all i want to say that... we need to spend sometime eventhough if we are busy.

    cheers
    deepu
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hai Deepu,

    Plesed to see you here. Yes, we have to spend time for them to make them feel we are there for them to care.

    Thank you for stepping in to give your valuable comments
     

Share This Page