1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதுமைக்கு முதன்மை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 20, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முதுமைக்கு முதன்மை

    அடி அடியாய் எடுத்து வைக்கச் சொல்லித் தந்தார்கள்,
    தத்தித் தத்தி எடுத்து வைத்து நன்று நடக்கத் துவங்கினோம்,
    இன்றோ பல மைல்கள் நடந்து, பல மைல்கற்களை அடைந்து,
    மீண்டும் தத்தித் தத்தி நடக்கத் தான் நம்மால் முடிகிறது இன்றோ,
    ஆனால் அடி அடியாய் நடத்திச் செல்ல செல்வங்கள் இல்லை அருகில்,
    அவர்களோ நாம் கண்ட செல்வத்திற்கு அருகில், செல்வம் செல்வத்துடன் தான் சேருமோ?

    இளமையில் சுற்றல்,
    முதுமையில் பிதற்றல்,
    செல்வங்களை போற்றுங்கள்,
    சேர்த்த செல்வத்தில் பகுதியை,
    முதுமைக்கு பேணுங்கள் - கொஞ்சம் எண்ணுங்கள்,
    செல்வத்திற்காக செல்வங்கள் நம்மருகே இருக்க வாய்ப்புண்டே...

    வளர்த்த விதம், வளரும் விதம், வளர்ந்த விதம் - அனைத்தும் நன்றே,
    ஆனாலும் மாறி வரும் சூழ்நிலைகளில் அவர்களை குறை கூறி பயனில்லை,
    முதுமையில் செல்வச் சுதந்திரம் கொண்டோமானால் செல்வங்களையும் கொள்வோம் அன்றோ?

    (ப்ரியா - எனக்கு இன்னும் நிறைய, நிறைய வருடங்கள் இருக்கு இந்த நிலை வர - வீணா வம்பு பண்ணாதே)

    உனக்குன்னு அடிக்குறிப்பு வெச்சு எழுதற நிலைமை எனக்கு இங்கு - என்ன பண்றது? :)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflநட்ஸ்...அப்பன் குதிருக்குள்ள இல்லை ன்னு நீங்களே ஏன் காட்டிக் குடுக்குறீங்க?

    (நீங்க கவலைப்படாதீங்க நட்ஸ்.... யாழும் எழிலும் நீங்க கிட்ட இல்லாதவரை புத்தியோட இருப்பாங்க [​IMG])

    இன்று நட என்று சொல்லுவதற்கு முன்பே பிள்ளைகள் ஓட கற்றுக்கொள்ளும் காலம்.

    படிக்கும் காலத்தில் அதை கற்றுக்கொள் இதை கற்றுக்கொள் என்று பெற்றவர்கள் சொல்வார்கள். என்னவோ பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாய் நினைத்துக்கொண்டு தங்களிடமிருந்து அவர்களை பிரித்து அனுப்புவதே அவர்கள் தான். அப்போது தோன்றும் நல்லது, பிள்ளைகள் வளர்ந்து தனியாக இருக்கும் போது வேறு விதமாய் தோன்றும்.

    உறவுகளின் திருமணம், விடுமுறையில் அங்கு சென்று பழக்குவது....ம்கும்...எதுவுமே இல்லை இப்போது.. ஆனால் இயந்திரமாய் பாசம் மட்டும் வேண்டும் என்று பெற்றவர்கள் எப்படி எதிர்ப்பார்க்கலாம்??

    செல்வம் இருந்தால் போதும் என்று அதை தேடியே ஓடுவது பெற்றவர்கள் தானே? அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பிள்ளை மட்டும் வேறெப்படி இருக்க முடியும்?

    அவர்கள் நலன் தான் பெரியது என்று பெற்றவர்கள் நினைத்தால், முதுமையை தனியாக தாங்கும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள தான் வேண்டும். இல்லாவிட்டால், செல்வம் தேடுவதோடு, பிள்ளைகளின் அருகிலிருந்து வழி நடத்தவாவது வேண்டும்.

    (உங்களை நேரில் பார்க்கும் போது உங்களுக்கு "Walking Stick" வாங்கி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன் நட்ஸ்.[​IMG])
     
    Last edited: Feb 20, 2011
  3. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    சோனியா காந்தி இப்ப இந்த தமிழ் கவிதையை படித்தா எந்த அளவுக்கு அவங்களுக்கு புரியுமோ, அந்த அளவுக்கு எனக்கு புரிஞ்சிடுச்சி நட்புடன்!. இனிமே எனக்கும் ஒரு பிஎஸ் வைத்து எழுதுங்க.

    (அதுசரி, அடுத்தவங்களுக்கு கொடுத்த பிஎஸ்-ஐ நாங்க படிக்கலாமா? ஏன்னா, அந்த பிஎஸ்-ஐ படிப்பதற்கு முன்புவரையில் உங்கள் கவிதை ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. அந்த பிஎஸ்-ஐயும் கவிதையின் கடைசி வரியையும் படித்தவுடன் குழம்பிபோய்விட்டேன்)
     
    Last edited: Feb 21, 2011
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nats,

    Romba joviala intha kavithaiya neenga ezhuthinaalum athula serious ana unmai irukkathan irukku. Innikku niraya petror vayothigathula kaiyila kaasum illaama thanimaiyila aakkappatta nilamai visraanthi illatta uthavum karangal, pona puriyum.

    ganges
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா நீ எழுதறத பார்த்தா நீயே,
    ஊன்றுகோலின் துணையோடு தான் நடக்கிராயோ,
    எனத் தோன்றுகிறது. உன் எழுத்தில் முதிர்ச்சியைக் காண்கிறேன்.

    Financial Independence இருந்தால்,
    முதுமையும், இளமையும் அனேகமாக ஒத்துப் போய்விடுவார்கள்.
     

Share This Page