1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் வ #ராதா

Discussion in 'Posts in Regional Languages' started by arthimahalakshm, Jun 10, 2020.

  1. arthimahalakshm

    arthimahalakshm Gold IL'ite

    Messages:
    679
    Likes Received:
    776
    Trophy Points:
    188
    Gender:
    Female
    மீண்டும் வ #ராதா
    கோடைவிடுமுறை...சிறுவயதில்....கொண்டாட்டமே...நான் ஏழாவதோ...எட்டாவதோ..அதை..தொடர்ந்து வந்த கோடையில்...பெரிய மாமா வீட்டில்...எல்லோரும்..ஆஜர்..
    எங்கள் வீட்டில் பெண்குழந்தைகள்..அதிகம்.
    மாமாவின் பெண்கள்...நாங்கள்இருவர்...இரண்டு சித்திகளின் பெண்கள்...தவிர..பெரியம்மாவின் மகன்கள்..அண்ணா...என்று..பெரும்
    பட்டாளம்...
    சின்னமாமாவிற்கு...முதல் பெண்..பிறந்து..மாமியும்...எங்களுடன்...
    அம்மாவின்...சித்தி பையன்...திருச்சி..வேலைக்கு...பெரிய..மாமா...வீட்டிலிருந்து .போய்வர.....
    அவரிடம்... நல்ல பெயர்..வாங்க...நாங்கள்..அவர்..ஆட்டிவைக்கும்...பொம்மைகளாய்...எங்கும்..பேரிரைச்சல்..தான்...
    மாமாவிடம்..ஏன்.நல்லபெயர்...வாங்க வேண்டும்...என்றால்...
    நாங்கள்..எல்லோரும்..பயோரியா.பல்பொடி..இல்லை.என்றால்...கோபால்பல்பொடி...வகையறாக்கள்...
    ஆனால்..அந்த மாமா விற்கு மட்டும் கோல்கேட்...பேஸ்ட்...
    குழந்தைகள்...எல்லோருக்கும்...எப்படியாவது...ஒருதடவையாவது..பேஸ்ட்கொண்டு ..பல்துலக்கிட வேண்டும்...என்று..ஆவல்.
    இன்று போலவா...அன்று...?தினம்..ஒரு பிராண்ட்...மாற்ற...

    மாமாவிற்கும். இது ஒரு சோதனை..இருக்கும்...வாண்டுகள்...எல்லோருக்கும்...ஒரு ரவுண்டு கொடுத்தாலே...பேஸ்ட்..காலி...அது..எங்களுக்கு புரியாமல்..தினமும்..ஒருதடவையாவது..கெஞ்சுவோம்...
    ஆனால்மாமா...மாட்டேன்...என்று..சொல்லும்..முன்பே...பெரியவர்களில்..யாரோ..ஒருவர்..கிடையாது...என்றிடுவர்..
    இன்னும்..ஒருபடி..மேலே..போய்....மாமா போல...படித்து .வேலைக்கு போனால் .தான்..பேஸ்ட்..என்று...சொல்லி...எங்கள்...பெரியம்மா ...தடா போட்டுவிட்டார் ..
    நாங்கள்..எல்லாம்...அந்த ஒருதுளி..பேஸ்ட்காக..மாமாவின் ஷூ பாலிஷ் .போடுவதென்ன?.. ...குடிக்க தண்ணீர்..கொண்டு ..வருவது..என்ன...என்று..இட்டபணி...எல்லாம்...செய்தோம்...
    தின்பதற்கு..விதவிதமான தீனிகளும்...வடகம்..வத்தல்..அப்பளம் .இடுதல்..என .தினம்..ஒருtask...வாரம்..இரண்டு சினிமா....ஐம்பதுகாசு..front benchதான்..என்ன..என்று..கோடையே..முடிவிற்கு .வந்துவிட்டது...
    ஆனாலும்..கோல்கேட்பேஸ்ட்..கைக்கும்..வாய்க்கும்..எட்டவில்லை......
    அவரவர் ஊர் திரும்பும்..நேரமும்..வந்தது...இனிமேல்..பேஸ்ட் கிடைக்காது...நாமெல்லாம்..நன்றாக படித்து..வேலைக்கு போய்...முதல்சம்பளத்தில்...பேஸ்ட்..வாங்கிடணும்...என்று...சபதமே..போட்டுவிட்டோம்..
    ஆசையை விட்டால்..தான்..ஒரு பொருள்..நமக்கு கிடைக்கும்...என்ற..நிலையில்..அதன்மீதான எதிர்பார்ப்பு...ஓய்ந்த நிலையில்...
    எங்கள் மாமா...பேஸ்ட் பெயரை எடுத்தார்...
    நாளைக்கு..ஊருக்கு போக இருப்பதால்..ஒரே..ஒருவருக்கு மட்டும் பேஸ்ட்..என்றுவிட்டார்...
    ஆனால் ஒரு போட்டி...நாளை..காலை..யார் முதலில்...இந்த தினசரி காலண்டர்ஷீட்...கிழிக்கறீங்களோ..அவருக்குதான்...என்று விட்டார்...
    எல்லோருக்கும்..ஆசை..மீண்டும்...பொங்கிவர...எல்லோரும்...நாட்காட்டியை...சுற்றியே படுத்துக் கொண்டோம்...
    நள்ளிரவில்...பாட்டி...தண்ணீர்..குடிக்க லைட்...போட...
    சடாரென்று...எல்லோருமே...முழித்துக் கொண்டோம்...
    ஆனாலும்....எங்களில்..ஒருத்தி...படு..உஷார்..பேர்வழி...பெரிய மாமாவின் பெண் சட்டென்று..எம்பி...பட்டென்று...தேதியை...மறக்காமல் ..கிழித்துவிட்டாள்...
    வட போச்சே ....கணக்காக...பேஸ்ட்...போச்சே...என்று...மிச்சத்திற்கு .நாங்கள்...உறங்கவில்லை....
    மாமா பெண்..மட்டும் ..பேஸ்ட் ல பல் தேய்த்துவிட்டு...போப்பா...பல்பொடி..போட்டு..தேய்க்கிற மாதிரியே ..இல்லை...என்று..சொல்லி ..பயோரியா...போட்டு...மீண்டும் .பல்..துலக்கினப்ப...தான்..எங்களுக்கெல்லாம் ..அப்பாடா...என்றிருந்தது...
    அந்த கோடைவிடுமுறை போன்று...மற்றொருமுறை...எல்லோரும்..ஒன்று கூட ..வாய்ப்பே...கிடைக்கவில்லை...
    ஆனாலும்...இப்போதும்..அக்கடா..என்று..போய்..ஒருவாரமேனும்...இருக்க பெரியமாமாவின்...வீடு.....இல்லை...மாமியும்...மாமாவும்...இருக்கிறார்கள்...
    எனக்குத்தான்..போகமுடியவில்லை.
     
    Loading...

Share This Page