1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"மா பாவியோர் வாழும் மதுரை

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by jayasala42, Jul 28, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மதுரைக்காரர்கள் கோபிக்க வேண்டாம்.
    பல வருடங்களுக்கு முன் மதுரையில்
    கோவலன் நாடகம் நடந்தது .'
    கண்ணகியிடம் சிலம்பினை வாங்கிக் கொண்டு அதனை விற்பதற்காக மதுரைக்குப் புறப்படுகிறான் கோவலன்.
    அப்போது கண்ணகி பாடுகிறாள்
    "மா பாவியோர் வாழும் மதுரைக்கு
    மன்னா நீர் போகாதீர் இன்று "
    கூட்டத்தில் சலசலப்பு.நம்ம ஊரிலேயே வந்து நமக்கு எதிரிலேயே
    நின்று 'மா பாவிகள் ' என்று சொல்கிறார்களே . என்ன தைரியம் ?கூப்பிடு அந்த நாடகக் காரனை "என்று ஒரே கூச்சல்.
    மெதுவாக நாடக ஆசிரியர் மேடைக்கு வந்தார்.அந்த காலத்தில் கல், செருப்பு வீசும் நாகரிகம் வளரவில்லை.
    கேள்விக் கணைகள் மட்டும் தான்.
    கொஞ்சம் அமைதிப் படுத்திவிட்டு ஆசிரியர் சொன்னார்.
    "மா என்றால் திருமகள்
    பா என்றால் கலைமகள்.
    வி என்றால் மலை மகள்
    இந்த மூவரும் உறையும் இடம் புனிதம் வாய்ந்தது.சகல செல்வங்களும் உடைய நகரம்.இப்படிப்பட்ட செழிப்பான ஊரிலே நான் அணியும் சாதாரண சிலம்பை யார் வாங்குவார்கள் ?என்ற எண்ணத்தில் கண்ணகி கோவலனைத் தடுப்பதாகப் பாட்டு .இது மதுரையைப் பெருமைப் படுத்துவதற்கே அன்றி சிறுமைப் படுத்தும் நோக்கத்துடன் அல்ல"
    மக்கள் சமாதானம் அடைந்து நாடகத்தை ரசித்தனர்.
    நாடக ஆசிரியர் தான்
    சங்கர தாஸ் சுவாமிகள்.
    Jayasala 42
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்தேன் ரசித்தேன்.
    நன்றி.
     

Share This Page