1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மாயம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 20, 2013.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அதிவேக நடையும் அவ்வப்போது ஒரு துள்ளலும்
    அவளிடத்தில் நேற்று வரை இருந்ததைக் கண்டோம்!
    அரிதாய் ஒரு தயக்கமும், அயர்வாய் ஒரு பார்வையும்
    இன்று புதியதாய் வந்த மாயம் யாதென அறியோம்!

    புதுக்குமிழி பலவும் தோன்றியும், பெருத்தும்
    பின் உடைந்தும், ஒரு மயிர் கூச்செறிதல் வரவும்,
    விளக்கிடவே முடியாத ஒரு இன்பமும் எங்கும்
    பரவி புது ஒளியை அடைந்தது அவள் முகமும்!

    பின்னொரு சமயம் ஏதோ சொல்லவும் இயலா
    துயரதுவும் அவள் கண்டம் விக்கிடச் செய்ய
    என்ன இது? எனப் பதறி பிறர் விளங்கிட முடியா
    நிலை நிற்க அவள் தேறித் தன் பணி முனைய,

    ஒரு சமயம் இன்னும் இன்னும் சாப்பிடத் தோன்றும்,
    பிற பொழுதில் ஒரு கவளம் கூட செல்லாது போகும்.
    எது உண்ணினும் ஒரு பிரட்டல் விரைவில் காணும்.
    உண்டதெல்லாம் வாயிலெடுத்து அலுப்பில் சாயும்,

    அவள் நிலையைக் காண மனம் வருத்தம் காணும்.
    அந்நிலையும் அவனருளால் விரைவில் மாறும்!
    ஒரு உயிரில் பிற உயிரும் வளர்ந்திடும் மாயம்
    எண்ணி மனம் வியந்து ஒரு நிறைவில் ஆழும்!
     
    2 people like this.
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    RGS dear you have beautifully narrated about the woman who is pregnant. Being a mother I can say it is a wonderful experience. Though there is suffering but when the child is born the mother forgets everything.
    A mother's joy begins when new life is stirring inside... when a tiny heartbeat is heard for the very first time, and a playful kick reminds her that she is never alone
     
    2 people like this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very true Vijima. Lovely feedback. Thanks a lot. -rgs
     

Share This Page