மஹா பெரியவா அருள்வாக்கு...[Kalki dt. 15th Feb.2015.]

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, Feb 7, 2015.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அருள்வாக்கு
    சொல்லும் பொருளும் போல!

    [​IMG]
    வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண்கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே பந்தமில்லாமல், பொறுப்பில்லாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற பலரும் நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஏதோ உத்யோகம் செய்துகொண்டு, சம்பாதித்து சுதந்திரமாக ஒரு பந்தத்திலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
    ஆனால் உண்மையாகப் பார்க்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் பல பொறுப்புகளையும், பல பந்தங்களையும் பல கஷ்டங்களையும் எற்றுக் கொண்டிருப்பதானது கண்கூடாகத் தெரிகிறது.
    கல்யாணமான தம்பதிகளுக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தம்பதிகளே, பரஸ்பரம் பேசி பலவித பிரச்னைகள், கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கணவனும், மனைவியும் சொல்லும் அதன் விளக்கமும் போல, இரு உடல் ஒரு மனதாக இருக்க வேண்டும்.
    வாழ்க்கை என்றால் சந்தேகங்கள் அபிப்ராய பேதங்கள் இருப்பது சகஜம். அவைகளைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் கொடுத்த புத்தியை நன்றாக உபயோகித்து, ஒரு தடவைக்குப் பலதடவை நன்றாக செது, பொறுமையுடன், பொறுப்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ‘நான் எவ்வளவு நாள் விட்டுக் கொடுப்பது? நீங்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?’ என்று சொல்லிக்கொள்ளாமல் இரு உடல் ஒரு மனதுடன், சொல்லும் பொருளும் போலும், சமுத்திரத்தில் வரும் அலை எப்படி வந்து போய் ஒன்றாகிறதோ அதுபோல், நம்மிடையே ஒருவருக்கொருவர் மனஒற்றுமையுடன் வாழ்வதே வாழ்க்கை.
    -----------------------------------------------------------------------------
    விட்டுக்கொடுப்பது என்பது ஒரு தெய்வீகத்தன்மை என்று எடுத்துக்கொள்ளலாம். ஸ்ரீ ஆச்சார்யாரின் கடைசீ வாக்கியம் தம்பதிகள் எவ்வாறு செவ்வனே வாழவேண்டும் என்று சிறந்த அறிவுரையை கூறியுள்ளார். கடைசீ வாக்கியத்தில் கூறிய அந்த இரு உதாரணங்களும் to tell you shortly...they are awesome and par excellence.
    "பாரதிமணியன்"
     
    Loading...

  2. bhucat

    bhucat Platinum IL'ite

    Messages:
    1,870
    Likes Received:
    2,572
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Very good info, thanks for sharing
     

Share This Page