1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மஹா பெரியவாளின் மகிமை....

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Nov 22, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்

    (கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய
    எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்)

    காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும் என்கிற பக்தி உணர்ச்சியெல்லாம் சிறிதும் இல்லை. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு
    பால் கொண்டு போய் தருகிறோம் என்று உணராத மனநிலை.

    இந்த சமயத்தில் ஒருநாள், அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண், ஒரே வாரத்தில் நிற்க முடியாமலும், நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை.

    பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்தபின், அப்பெண்ணுக்கு ஒருவிதமான கேன்சர் நோயினால் வெகுவாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், இனி எந்த வைத்யமும் அப்பெண்ணைக் காப்பாற்ற முடியாது என்றும் சொல்லி விட்டார்கள்.

    மனதில் கவலை நிறைந்து வெட்டினாலும் தொடர்ந்து மகானின் முகாமுக்குப் பால் கொண்டு வந்து கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

    வழக்கத்துக்கு மாறாக பால்காரர் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்ட மடத்தின் ஊழியர்கள் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, பால்காரர் தன் மனைவியின் உடல்நிலை மோசமாகி இருப்பது பற்றி சொன்னார்.

    அதோடு, தன் மனைவிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று அந்தப் பால்காரர் மருத்துவரிடம் விசாரித்தது, அப்பெண் பிழைத்திருப்பதோ இன்னும் கொஞ்ச காலம்தான். அதனால் அவள் விருப்பம் என்னவோ அந்த ஆகாரத்தை தரலாம் என்று கூறிவிட்டதையும் சொன்னார்.

    அப்பெண்ணோ எதுவும் ஆசைப்பட்டுக் கேட்கவில்லை. பச்சை மிளகாயை அப்படியே பதம் செய்து தின்பதில் தான் அவளுக்கு விருப்பம் அதிகம். அதை மனைவிக்கும் கொடுப்பது ஆபத்து நிறைந்த விஷயம் என்பது நன்கு தெரிந்தும், அதையே மனைவிக்குத் தயாரித்து அளிப்பதாகவும் கூறினார் வேதனையோடு.

    தினமும் வரும் அந்தப் பால்காரரின் பரிதாபத் தோற்றம் சிப்பந்திகளின் மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்த, பால்காரரைப் பற்றி மகா பெரியவாளிடம் சொல்லி ஆறுதல் தேட முடிவு செய்து, அத்தெய்வ சன்னதியில் போய் நின்றனர்.

    அவர்களில் ஒருவர், "பெரியவா தினமும் மடத்துக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கிறானே அந்தப் பால்காரன்.." என்று ஆரம்பிப்பதற்கு, மகானே பேச ஆரம்பித்தார்.

    "ஆமாம்.. அவன் ஆத்துக்காரிக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கள் கேன்சர்னு சொல்லி, இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பா. அவளுக்கு இஷ்டப்பட்டதைக் குடுனு இவன்கிட்ட சொல்லிட்டு இல்லையா? அவனும் அதைத்தானே செஞ்சுண்டு இருக்கான்! இதைச் சொல்லத் தான் இங்கே வந்தேளா...?" என்று அவர்களிடம் கேட்க அசந்து போனார் கள் எல்லோரும் மகானுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பதை எப்படி மறந்துபோனோம் என்று திகைத்து நின்றார்கள்.

    அவர்களுக்கு அப்போதுதான் மனதில் உறைத்தது. பால்காரனின் கஷ்டம் மகாபெரியவாளுக்கு தெரிந்திருக்கிறது என்றால் அதைவிட வேறு அனுகிரகம் என்ன வேண்டும்? என்று அவர்கள் மனதில் ஒருவித நிம்மதி ஏற்பட்டது.

    எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம் அமைதியாக இருக்குமா? அவரது அனுகிரகம் உடனே செயல்பட ஆரம்பித்தது.

    அடுத்த சில தினங்களில் பால்காரனின் மனைவி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பின் மெதுவாக எழுந்து நின்றாள். இது ஆரம்பம். பிறகு சில தினங்களில் பழைய நிலைக்குத் திரும்பி மிகவும் ஆரோக்கியமாக நடமாட ஆரம்பித்துவிட்டாள்.

    அதனால் மிகவும் ஆனந்தமடைந்த அந்த பால்காரர் தன் மனைவியை டாக்டரிடம் மீண்டும் அழைத்துப் போய் காட்டினார். நன்கு பரிசோதித்தபின் முடிவுகளைப் பார்த்த டாக்டர் முதலில் தன்னையே நம்பவில்லை. ஏனெனில், அப்பெண்ணிடம் நோயின் சுவடே இல்லை.

    வியப்போடு டாக்டர் கேட்டார்;

    "எந்த டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்? இது முத்தின நோய். இதுவே இப்படி குணமாகிவிட்டதே அந்த டாக்டர் கொடுத்த மருந்தை நான் மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறேன்"

    பால்காரருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.

    மகா பெரியவா என்னும் பெரும் தெய்வமே தன் மனைவியை குணப்படுத்தியது என்று அவருக்குத் தெரியுமா என்ன?

    அடுத்தநாள் அந்த சந்தோஷத்தை மடத்து சிப்பந்திகளிடம் வந்து சொன்னபோது, அது அவர்களுக்குக் கொஞ்சமும் ஆச்சரியத்தை தரவில்லை. காரணம் மடத்து ஊழியர்கள் எல்லோருக்குமே மகாபெரியவாளின் அருட்பார்வையின் அற்புதம் நன்றாகத் தெரிந்த விஷயம் அல்லவா.
     
    Loading...

Share This Page