மஹா பெரியவாளின் அருள் வாக்கு...[Published in 'Kalki' issue dt. 10/1/2016.]

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, Jan 8, 2016.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அருள்வாக்கு
    மதுவிலக்கு!

    ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
    [​IMG]
    சாஸ்திரப்படி விலக்க வேண்டியவற்றில் மற்ற ஆஹார வகைகள் நாளாவட்டத்தில்தான் சித்தத்தைக் கெடுக்கின்றனவென்றால், குடியோ உடனேயே ஒருத்தனின் புத்தியைக் கெடுத்துக் கேவலப் படுத்துவதைப் பார்க்கிறோம். அதனால் இதை முதலில் விட்டுத் தொலைக்க வேண்டும்.

    இப்படி ஒரு வஸ்து உள்ளே போவதால் உடனே சித்தம் கெட்டுப் போவதாலேயே, விலக்க வேண்டிய மற்ற வஸ்துக்களும் கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே போய் காலக்ரமத்தில் சித்தத்தை பாதிக்கும் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிறது. அதாவது சாஸ்திரம் சொல்கிறபடி ஆஹாரத்துக்கும் மனஸுக்கும் ஸம்பந்தமுண்டு என்று நிச்சயமாகிறது.

    குடி கூடாது, அது புத்தியைக் கெடுக்கும், குடியையும் கெடுக்கும். முற்காலத்தில் குடிப்பதற்கு அநுமதி பெற்ற ஜாதியாரும் இப்போதைய ‘ஸெட்-அப்’பில் அந்தப் பழக்கத்தை விடுவதுதான் நல்லதாகிறது. இதனால், காந்தீயவாதிகள் சொல்கிற மதுவிலக்கை ஆதரித்து ஸ்ரீமட தர்மத்தொண்டு ஸபையும் அறிக்கைகூட விட்டிருக்கிறது.
    நாம் வேதத்தையும் அதை அநுஸரித்து ஏற்பட்டுள்ள தெய்வ வழிபாட்டு நூல்களான ஆகமத்தையும் பின்பற்றுகிற தமிழ் மதஸ் தர்கள். இந்த வேதம், ஆகமம் இரண்டுமே மதுவிலக்கை விதித்திருக்கின்றன.
    ============================================================
    ஆஹாரத்துக்கும் மனஸுக்கும் ஸம்பந்தமுண்டு என்று ஸ்ரீ ஆச்சார்யாள் சொல்லும் வாக்கு முற்றிலும் உண்மை.

    'பாரதிமணியன்'
     
    Loading...

  2. geevee68

    geevee68 Platinum IL'ite

    Messages:
    4,143
    Likes Received:
    566
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Could you please translate this in English for i am not able to read Tamil.Thank you.
     
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மகாபெரியவாவின் அருள் வாக்கை இன்று நான் படித்தது நான் பெற்ற இன்பம். குடியினால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து உள்ளது குடிப்பவர்கள் அவர்களாகவே குடியை விட்டால் தான் உண்டு. அப்பொழுதான் நாடு திருந்தும். வீடும் சுபீக்சமாக இருக்கும்
     

Share This Page