மஹா பெரியவாளின் அருள் வாக்கு...[Pub.in Kalki...thanks to Kalki.]

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, Dec 18, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அருள்வாக்கு
    மோக்ஷத்துக்கு வழிகாட்டி!

    [​IMG]
    லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைச் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன? முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப் புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.
    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறைப் பொகையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலே."
    இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணார விந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.
    நல்ல ஸங்கீதம்அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப் பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல் கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம்; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம் இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்.
    ---------------------------------------------------------------------------
    இதை செய்ய முடியாமல் போய்விட்டாலும், நமது சாஸ்த்ரீய கர்நாடக இசையை தெய்வீக சிந்தனையுடன், மனம் லயித்து, ஒன்றி கேட்டுக்கொண்டே இருந்தால் அதுவே போதுமானதாகும். அதுவும் ஒரு 'யக்ஞம்' தான். Thanks to communication technology, we are blessed with tv, radio & other modes to help us in this task.

    "BharathyManian"
     
    Loading...

Share This Page