1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மஹாளய பட்சம் இன்று ஆரம்பம்!

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்: மஹாளய பட்சம் இன்று ஆரம்பம்!( 14-9-2019)

    மஹாளய பட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடிக் கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இதனால், வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களு க்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்திய டைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மஹாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ அதனைத் தானம் அளிக்கலாம்.
    தானம் பெறுபவர்களுக்குத் தாம்பூலமும், தட்சிணையும் கண்டிப்பாகத் தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

    அதேபோல், வாய்ப்புள்ளவர்கள் இந்தியா வின் காயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே பிரசித்தி பெற்ற தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.


     
    Loading...

Share This Page