1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழைத்துளி மழலைகள் ... (தனிப்பாடல்கள் புது ம&#

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 27, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மழைத்துளி மழலைகள் தவழ்வதைக் கண்டு
    குழைந்திடும் பூமகள் நெஞ்சம் - கன்னக்
    குழிவிழும் சிரிப்பை சேயிடம் காண
    விழிவழி வெளிப்படும் தாய்மை .

    குளக்கரை மேட்டில் தவசியைப் போலே
    உளமொன்றி நிற்கும் கொக்கு - இறை
    விளக்கத்தைத் தேடி அலைகின்ற மனிதர்க்கு
    குளக்கரைக் கொக்கே மனது .

    சேற்றில் முளைத்த செந்தாமரை என்ற
    கூற்றும் இங்கே உண்டு - மழைக்
    காற்றும் குப்பையைக் கோபுரம் தன்னில்
    ஏற்றிடும் காட்சியும் உண்டு .

    கோர்த்த மாலையில் கோதையின் காதலைப்
    பார்த்தான் துயிலும் அரங்கன் - அன்பிலே
    வார்த்த அவளது பாவைப் பாடலால்
    சேர்த்தான் திருவடி தன்னில் .

    நவிலும் சொற்களால் நலிந்தவர் பயனுற
    குவியும் புண்ணியம் பாரீர்- மடல்
    அவிழ்ந்த மலர்களில் வழிந்திடும் தேனென
    செவிக்ககுணவாகும் நற் சொற்கள் .

    தேயும் நிலவின் தண்ணொளி பூமியில்
    பாயும் இரவுப் பொழுது - குளிர்
    காயும் குளத்தில் பூத்த அல்லியும்
    ஓயும் ஓர்பாதி உலகு .

    காலைப் பரிதியின் பேரொளி பட்டு
    சோலை மலர்வதைக் கண்டு - பூ
    மாலை தாங்கிய கொடிகளின் திருமண
    ஓலை ஏற்றிடும் வண்டு .

    இருமனம் தன்னை அன்பிலே இணைத்து
    ஒருமனம் ஆக்கும் காதல் - அதைத்
    திருமணம் தன்னில் முடிப்பது காதலர்
    இருவரும் கொண்ட ஆழம் .

    மாதர் தீங்குரல் பாட்டில் வடிவது
    கோதகன்ற தேன் அமுது- அவர்
    கீதம் இசைக்க அமைதியில் ஆழும்
    நாதன் படைத்த நல்லுலகு .

    கரத்தில் வீணையை ஏந்தும் வாணியைக்
    கருத்தில் நிறைப்பது சிறப்பு - கல்வி
    வரத்தை அருளிடும் தேவியின் பாதங்கள்
    சிரத்தில் ஏற்பது உவப்பு .



    Regards,

    Pavithra


    (பி . கு @saidevo , ஐயா , இவை மரபில் சேருமா ? )
     
    3 people like this.
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    Re: மழைத்துளி மழலைகள் ... (தனிப்பாடல்கள் புது &#299

    அழகான சொல்லாட்சி, ஓசை! வாழ்த்துகள்.
    ரமணி
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: மழைத்துளி மழலைகள் ... (தனிப்பாடல்கள் புது &


    மிக்க நன்றி !
    என்றும் அன்புடன் ,

    பவித்ரா
     

Share This Page