மலரும் நினைவுகள் (பழய சினிமா பாடல்களுடன்) அலுவலகம் செல்ல பஸ் நிலையத்தில் காத்து நின்றேன் கல்லூரி செல்ல தோழியுடன் நீ அங்கு வந்தாய் உன் நடையைப் பார்த்து நான் 'ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்' என்று மனதுக்குள் பாடினேன் தோழியுடன் பேசிய உன் பேச்சைக் கேட்டு 'பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா' என்று மனதுக்குள் பாடினேன் கனத்த புத்தகங்களை நீ சுமந்ததைப் பார்த்து 'உங்க பொண்ணான கைகள் புண்ணாகலமா உதவிக்கு வரலாமா' என்று மனதுக்குள் பாடினேன் நான் உன்னை ஸைட் அடிப்பதை காண சகிக்காதவர்கள் பஸ் நிலையத்தில் என்னை முறைத்த போது 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ' என்று மனதுக்குள் பாடினேன் திடீரென்று நீ உன் திருமணப் பத்திரிகையை உன் தோழியிடம் கொடுத்த போது என் ஒரு தலை ராகத்தில் இடி விழுந்தது அப்போது 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று என்று மனதுக்குள் பாடினேன் அந்த சமயத்தில் நீ போகும் பஸ் வர என்னை அறியாமல் நானும் ஏறப் போக 'கண் போன போக்கிலே கால் போகலாமா' என்ற பாட்டு என்னை தடுத்தது இறுதியாக நான் செல்லும் பஸ் வர 'காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்' என்று மனதுக்குள் பாடிக்கொண்டு அலுவலகம் சென்றேன்
poonai pogattum poda (sorry i din't mention you) but continued your poem where in my imagination friends sing to the hero.Sriniketan