1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலரின் கவிதைகள் 6

Discussion in 'Regional Poetry' started by anbumalar, Oct 7, 2010.

  1. anbumalar

    anbumalar New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    இசை
    என்னென்றும் ஏதென்றும்
    தெரியா வேளையில்…..
    ஒவ்வொன்றாய் நினைவுகள்
    மனதோடு மேகமாய் கலைகயில்…
    பிள்ளை பெற்ற கருப்பையாய்
    உசிரும் தனியே சுருங்கிக் கிடக்கையில்…
    இதழ் இதழாய் மடல் விரிக்கும் மலர் போல,
    இதமாய் என் இதயம் திறந்து….
    மயக்கி உருக்கி ...
    உளம் நிரப்பி…
    இன்பம் பெருக்கி…
    செவி நுழைந்து….
    விழி நனைக்கிறாயே...
    இசையே ....
    உனக்கு எப்படி இந்த விசை?

    தீண்டல்
    என்ன விந்தை??
    நீ தொடும் இடமெல்லாம் சிலிர்க்கிறதே
    உன் தீண்டல் என்னை பூரிக்க வைக்கிறதே!!
    கண்ணுக்குத் தெரியாமல்
    என் மேல் பட்டு..
    சில இடம் தொட்டு..
    என் நிலை குலைத்து..
    என்னுள் கலவரம் செய்து..
    என்னை கலைத்து போட்டு விட்டு..
    நீ மறைந்து போகிறாய்!!
    என்ன செய்வேன் நான்
    கணவன் இல்லா கன்னி நான்..
    பிள்ளை இல்லா பாவி நான்..
    விதவைக்கும் மோகம் தரும்
    மோசமான கயவன் நீ….
    இலையாய் பிறந்திருந்தால் என்றும்
    உன்னோடு உறவாடி இருக்கலாம்…..
    என்றாலும் உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
    தென்றலே வந்து விடு... …. …….
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஜீவனை மீட்டும் நாதத்துக்கும்
    இசைக்கு ஆடும் பாதத்துக்கும்
    உயிரான இசைக்கும்

    ஒரு தீண்டலில் உயிர் தீண்டிப்
    போகும் தென்றலுக்கும் உங்கள்
    வரிகள் மிக அருமை மலர்
     

Share This Page